அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறிந்தும் அறியாமலும்
இயக்கம்விஷ்ணுவர்த்தன்
தயாரிப்பு'புன்னகை பூ' கீதா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஆர்யா
பிரகாஷ் ராஜ்
நவ்தீப்
சமிக்சா
கிருஷ்ணா
வெளியீடுமே 20, 2005
ஓட்டம்132 நிமிடங்கள்
மொழிதமிழ்
மொத்த வருவாய்3.2 கோடி

அறிந்தும் அறியாமலும் இது 2005ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆர்யா, பிரகாஷ் ராஜ், நவ்தீப், சமிக்சா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

கதைச்சுருக்கம்[தொகு]

நாகர்கோவிலில் வசித்துவரும் சத்யா (நவ்தீப்) அங்கு சக மாணவர்களுடனும் சுற்றித்திரியும் வேளையில் அழகிய பெண்ணொருவரைக் காண்கின்றார்.அவள் மீது மனதைக் கொடுக்கும் சத்யா பின்னர் சென்னையில் படிப்பதற்காகவும் வருகின்றார்.அங்கு வரும் இவருக்கு ஆச்சரியம் காரணம் அவர் தனது கிராமத்தில் பார்த்த கனவுக்கன்னியைச் சென்னையில் மிக நாகரீகமான முறையில் காண்கின்றார்.இதனைத் தொடர்ந்து காடையனான குட்டியினால் (ஆர்யா) தவறுதலாக சத்யாவின் மனக்கவர்ந்தவள் சுடப்பட்டு காயமடைகின்றாள்.இதனைப் பார்த்த சத்யா குட்டியைக் காவல் துறையினரிடம் காட்டிக்கொடுக்கின்றான்.இதனைத் தொடர்ந்து குட்டியின் தந்தையான ஆதியின் (பிரகாஷ் ராஜ்) காடையர்களால் தேடப்பட்டுப் பின்னர் குட்டியால் மன்னிக்கப்படுகின்றான் சத்யா.இதனைத் தொடர்ந்து சத்யா தனது சகோதரனெனத் தெரிந்து கொள்ளும் குட்டி பின்னர் அவனைத் தன் தந்தையிடமும் அழைத்துச் செல்கின்றான்.இறுதியில் என்ன நடைபெறுகின்றது என்பது திரைக்கதை முடிவு.

நடிகர்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]