அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அறிந்தும் அறியாமலும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அறிந்தும் அறியாமலும்
இயக்குனர் விஷ்ணுவர்த்தன்
நடிப்பு ஆர்யா
பிரகாஷ் ராஜ்
நவ்தீப்
சமிக்சா
கிருஷ்ணா
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
வெளியீடு 2005
மொழி தமிழ்
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg3.2 கோடி

அறிந்தும் அறியாமலும் (2005) ஆம் ஆண்டு வேளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர்யா,பிரகாஷ் ராஜ், நவ்தீப்,சமிக்சா போன்ற பலரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

நாடகப்படம் / மசாலாப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

நாகர்கோவிலில் வசித்துவரும் சத்யா (நவ்தீப்) அங்கு சக மாணவர்களுடனும் சுற்றித்திரியும் வேளையில் அழகிய பெண்ணொருவரைக் காண்கின்றார்.அவள் மீது மனதைக் கொடுக்கும் சத்யா பின்னர் சென்னையில் படிப்பதற்காகவும் வருகின்றார்.அங்கு வரும் இவருக்கு ஆச்சரியம் காரணம் அவர் தனது கிராமத்தில் பார்த்த கனவுக்கன்னியைச் சென்னையில் மிக நாகரீகமான முறையில் காண்கின்றார்.இதனைத் தொடர்ந்து காடையனான குட்டியினால் (ஆர்யா) தவறுதலாக சத்யாவின் மனக்கவர்ந்தவள் சுடப்பட்டு காயமடைகின்றாள்.இதனைப் பார்த்த சத்யா குட்டியைக் காவல் துறையினரிடம் காட்டிக்கொடுக்கின்றான்.இதனைத் தொடர்ந்து குட்டியின் தந்தையான ஆதியின் (பிரகாஷ் ராஜ்) காடையர்களால் தேடப்பட்டுப் பின்னர் குட்டியால் மன்னிக்கப்படுகின்றான் சத்யா.இதனைத் தொடர்ந்து சத்யா தனது சகோதரனெனத் தெரிந்து கொள்ளும் குட்டி பின்னர் அவனைத் தன் தந்தையிடமும் அழைத்துச் செல்கின்றான்.இறுதியில் என்ன நடைபெறுகின்றது என்பது திரைக்கதை முடிவு.

வெளியிணைப்புகள்[தொகு]