அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்2006
முதல்வர்சுப்பையா
அமைவிடம்கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்: 12°43′04″N 77°52′11″E / 12.7179°N 77.86986°E / 12.7179; 77.86986
வளாகம்நகரம்

அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தின் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1]

இக் கல்லூரி 2006 இல் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி ஆகும்.

இருப்பிடம்[தொகு]

இக்கல்லூரி தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகரில் ஜக்கப்பன் நகர் முதல் குறுக்குத் தெருவில் உள்ளது. இக்கல்லூரி பெங்களூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் ஆகும்.

படிப்புகள்[தொகு]

இங்கு இளநிலைப் பட்டப்படிப்பில் (பிஏ), தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு ஆகியவையும். இளம் அறிவியலில், கணிதம், இயற்பியல், வேதியல், உயிர் தொழில்நுட்பம், கணிணி அறிவியல், சமையற்கலை அறிவியல், தாவரவியல், விலங்கியல் ஆகியவையும், பி.காம், பி.காம் (பட்டயக் கணக்களார்), பி.பி.ஏ, பி.சி.ஏ போன்ற படிப்புகளும், முதுகலைப் படிப்பில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், கணிதம், இயற்பியல், வேதியல், உயிர் தொழில்நுட்பம், கணிணி அறிவியல், எம். காம், எம்.எஸ்.டபிள்யூ போன்றவை கற்பிக்கப்படுகின்றன. மேலும் ஆய்வியல் நிறைஞர் படிப்பில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், கணிதம், இயற்பியல், வேதியல், உயிர் தொழில்நுட்பம், கணிணி அறிவியல், கணக்குப்பதிவியல் ஆகியவையும், முனைவர் பட்டத்துக்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், உயிர் தொழில்நுட்பம், கணக்குப்பதிவியல் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன.


குறிப்புகள்[தொகு]

  1. "அறிஞர் அண்ணா கல்லூரி மாணவர்கள் ஜூடோ போட்டியில் சாதனை". செய்தி. தினகரன் (2016 நவம்பர் 26). பார்த்த நாள் 19 நவம்பர் 2017.