வராக் கடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அறவிடமுடியாக்கடன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வராக் கடன் அல்லது அறவிடமுடியாக்கடன் (Bad Debt) என்பது ஒரு நிதி நிறுவனம் வழங்கிய கடனை, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்தும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வசூலிக்க இயலாத கடன் ஆகும். கணக்கீகீடு அல்லது நிதியியலில் இது கடன் பெற்றவர்களிடமிருந்து நீண்டகாலமாக அறவிடமுடியாமல் போன கடன்களின் ஒரு பகுதியைக் குறிக்கும். அவ்வாறு வசூலிக்க இயலாத வராக் கடன் தொகைகளை கணக்கீட்டுப் பதிவின்போது தொடர்புடைய கடனாளியின் பேரேட்டுக்கணக்கு பதிவு அழிக்கப்படுவதுடன் அந்நிதி நிறுவனம் அக்கடனைத் தள்ளுபடி செய்து அவ்வாண்டின் வணிகத்தில் ஏற்பட்ட நட்டமாக நட்டக் கணக்கில் தாக்கல் செய்வர்[1][2]. ஒரு நிதி நிறுவனத்திற்கு வரவேண்டிய மொத்தக் கடன் தொகையில், வராக் கடன் விகிதம் இரண்டு விழுக்காட்டிற்கு மேல் இருப்பின் அந்நிறுவனம் நிதி மேலாண்மையில் தரம் குறைந்த நிறுவனமாக, கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் அறிவிப்பர்.

இந்தியாவில் வராக் கடன்[தொகு]

இந்திய பொதுத்துறை வங்கிகளின் பலவற்றில் வராக் கடன் விழுக்காடு அதிகரித்துள்ளது. பல தனியார் நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கிய ஆயிரக்கணக்கான கோடி இந்திய உரூபாய் கடன் தொகை வசூலிக்க இயலாத காரணத்தால் செப்டம்பர் 2013இல் வராக் கடன் மதிப்பு 10.13% ஆக உயர்ந்து, வராக் கடன் தொகை 2.03 இலட்சம் கோடி இந்திய உரூபாயாக உயர்ந்துள்ளது. [3]

வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள பட்டியலிலின்படி, கீழ்கண்ட தனியார் நிறுவனங்களின் வராக் கடன் தொகைகள் விவரம்:[4]

 1. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் – ரூ 2,673 கோடி
 2. வின்சம் டயமண்ட் & ஜூவல்லரி கோ – ரூ 2,660 கோடி
 3. எலக்ட்ரோதெர்ம் இந்தியா - ரூ 2,211 கோடி
 4. ஜூம் டெவலப்பர்ஸ் – ரூ 1,810 கோடி
 5. ஸ்டெர்லிங் பயோடெக் – ரூ 1,732 கோடி
 6. எஸ். குமார்ஸ் – ரூ 1,692 கோடி
 7. சூர்ய வினாயக் இண்டஸ்ட்ரீஸ் – ரூ 1,446 கோடி
 8. இஸ்பாட் அலாய்ஸ் – ரூ 1,360 கோடி
 9. ஃபார்எவர் பிரிசியஸ் ஜூவல்லரி & டயமண்ட்ஸ் ரூ 1,254 கோடி
 10. ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்சஸ் ரூ 1,197 கோடி
 11. வருண் இண்டஸ்ட்ரீஸ் ரூ 1,129 கோடி

மேலும் 400 தனியார் நிறுவனங்கள், இந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளிடருந்து வாங்கிய வசூலாகாத வராக் கடன் தொகை இந்திய ரூபாய் 73,000 கோடியாக உள்ளது.[5]

வராக் கடனால் வங்கிகளின் வலிமை மற்றும் பாதுகாப்புத் தன்மை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையை களைய நிதியமைச்சகம், கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறிய நபர்களின் மீது அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க அனுமதியளித்துள்ளது. [6]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.accountingcoach.com/blog/what-is-bad-debts
 2. http://www.investopedia.com/terms/b/baddebt.asp
 3. http://business.dinamalar.com/news_details.asp?News_id=30164&cat=4
 4. http://www.vinavu.com/2014/05/09/shameless-capitalists-cheat-on-bank-loans/
 5. http://timesofindia.indiatimes.com/city/aurangabad/Bank-unions-demand-repeal-of-PJ-Nayak-committee-report/articleshow/35858817.cms
 6. http://business.dinamalar.com/news_details.asp?News_id=30164&cat=4

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வராக்_கடன்&oldid=1788505" இருந்து மீள்விக்கப்பட்டது