அறநெறி காவலர்
அறநெறி காவலர் (Moral police) என்பது இந்தியாவில் ஒழுக்க நெறிமுறைகளை அமல்படுத்த செயல்படும் விழிப்புணர்வு குழுக்களைக் குறிப்பதாகும்.[1][2] இந்தியாவின் சில சட்டங்கள், மற்றும் இந்தியாவில் உள்ள காவல் துறை படைகளின் சில நடவடிக்கைகள் அறநெறி காவல்துறையின் பணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகிறது.[3] அறநெறி காவல்துறையின் இலக்கு விழிப்புணர்வு குழுக்களை ஏற்படுத்துதல், அரசாங்கம் அல்லது காவல்துறை "ஒழுக்கக்கேடானது" அல்லது " இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான" என்று கருதும் எந்த நடவடிக்கையும் சீர் செய்வதனை முதன்மையாகக் கொண்டு செயல்படுவது ஆகும்.[4][5]
கண்ணோட்டம்
[தொகு]இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் பல விழிப்புணர்வு குழுக்களை இந்தியா கொண்டுள்ளது. அவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து பரவியதாக கருதும் கலாச்சாரக் கருத்துக்களை எதிர்க்கிறார்கள்.[6] அவர்கள் மதுக்கடைகள் மற்றும் மது விடுதிகளைத் தாக்கினர்.[7] இந்த குழுக்களில் சிலர் கலை கண்காட்சிகளையும் தாக்கியுள்ளனர் அல்லது மூட வேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்தினர், அங்கு அவர்கள் ஆபாச ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படுவதாகக் கூறுகின்றனர்.[8][9] ஊடகங்களின் சில உறுப்பினர்களும் இத்தகைய குழுக்களுடன் இணைந்துள்ளனர்.[7] சில அரசியல்வாதிகள் இத்தகைய கண்ணோட்டங்களையும் அவ்வப்போது இத்தகைய நடவடிக்கைகளையும் ஆதரித்துள்ளனர்.[6]
சட்டங்கள்
[தொகு]இந்தியாவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 292 முதல் 294 வரையிலான பிரிவுகள் ஆபாசத்தைக் கையாளுகின்றன. இந்த சட்டங்களில் பெரும்பாலானவை 1860 க்கு முந்தையவை. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 292, ஆபாச புத்தகங்கள் மற்றும் பிற பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகம் பற்றியது. இது புத்தகங்கள் மற்றும் ஓவியங்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்வதனை குற்றவாளியாக்குகிறது.[10]
பிரிவு 293 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆபாசமான பொருட்களை விற்பனை செய்வது பற்றி விவரிக்கிறது.[10]
ஒழுக்கக்கேடு போக்குவரத்து (தடுப்பு) சட்டம், 1956 மனித கடத்தலை தடுக்க முதலில் இயற்றப்பட்டது.[11] பாலியல் மோசடி நடத்தப்படுவதாக சந்தேகித்தால் உணவகங்களில் சோதனை நடத்த காவல்துறையினை இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.[12] இந்த சட்டத்தை பயன்படுத்தி உணவகங்களில் சோதனை நடத்தவும், தேவை ஏற்படின் தம்பதிகளை கைது செய்யவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.[13]
இந்தியாவின் ஆபாச சட்டங்கள் ஹிக்லின் சோதனையுடன் அடிக்கடி ஒப்பிடப்படுகின்றன.[14][15][16]
காதலர் தினம்
[தொகு]காதலர் தினம் பெரும்பாலும் சிவசேனா மற்றும் அறநெறி காவலர்கள் போன்ற குழுக்களால் மேற்கத்திய நடைமுறைகளால் எதிர்ப்புக்கு ஆளாகிறது.[17] விழிப்புணர்வுக் குழு இந்த நிகழ்வுக்கு முன்பாக பரிசு மற்றும் அட்டை கடைகளைத் தாக்குகிறார்கள்.[18] தம்பதிகள் கைகளைப் பிடிப்பதற்காகவும் அல்லது பொது இடத்தில் முத்தமிடுவதற்காகவும் தாக்கப்படுகிறார்கள்.[17]
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இது இந்திய கலாச்சாரத்தின் மீது நடத்தப்படும் மேற்கின தாக்குதல் என்றும், அது வணிகரீதியான லாபத்திற்காக இளைஞர்களை ஈர்க்கிறது என்றும் கூறினார். சிவசேனா தலைவர் பால் தாக்கரே, வன்முறையை விரும்பாத மக்கள் அதை கொண்டாடக்கூடாது என்று கூறினார்.[19] அவர் இந்த விழாவை வெட்கமற்றதாகவும் இந்திய கலாச்சாரத்திற்கு முரணானதாகவும் இருப்பதாகத் தெரிவித்தார்.[20] எப்போதாவது, காவல்துறையும் இந்த குழுக்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது, ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் தற்போது அவரை அதிகரித்து வருகிறது.[21]
பள்ளிகளில் பாலியல் கல்விக்கு எதிர்ப்பு
[தொகு]இளம் பருவ கல்வி திட்டம் (AEP) என்பது தேசிய எய்ட்சு கட்டுப்பாட்டு திட்டம் II (NACP II) இன் கொள்கைகளை செயல்படுத்த மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா) மற்றும் தேசிய எய்ட்சு கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட ஒரு பாலியல் கல்வித் திட்டமாகும்.[22] இருப்பினும், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இது எதிர்ப்பை எதிர்கொண்டது.[23]
சான்றுகள்
[தொகு]- ↑ "Moral police runs riot in capital". The Telegraph (India). 15 February 2010. http://www.telegraphindia.com/1100215/jsp/jharkhand/story_12106579.jsp. பார்த்த நாள்: 3 December 2014.
- ↑ "Who will control the vigilantes? Moral policing". தி இந்து. 9 September 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/who-will-control-the-vigilantes-moral-policing/article1334563.ece. பார்த்த நாள்: 7 December 2014.
- ↑ "Cops didn’t trip, lovers were target - Operation Majnu: crackdown on couples, not eve-teasers". The Telegraph (India). 21 December 2005. http://www.telegraphindia.com/1051222/asp/nation/story_5630920.asp. பார்த்த நாள்: 4 December 2014.
- ↑ "India's moral police declare war on decadence". The Age. 11 November 2006. http://www.theage.com.au/news/world/indias-moral-police-declare-war-on-decadence/2006/11/10/1162661900519.html. பார்த்த நாள்: 11 November 2013.
- ↑ "Do we need cops as moral police?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 June 2006. http://timesofindia.indiatimes.com/city/Do-we-need-cops-as-moral-police/articleshow/1621097.cms. பார்த்த நாள்: 11 November 2013.
- ↑ 6.0 6.1 "(Im)moral policing". Zee News. 7 February 2009. http://zeenews.india.com/exclusive/immoral-policing_2223.html. பார்த்த நாள்: 7 December 2014.
- ↑ 7.0 7.1 "'Moral police' attack Mangalore pub". Rediff. 26 January 2009. http://www.rediff.com/news/2009/jan/26sri-ram-sena-attacks-mangalore-pub.htm. பார்த்த நாள்: 7 December 2014.
- ↑ "Art attack: Moral police threaten nudes exhibition". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 February 2013. http://timesofindia.indiatimes.com/city/delhi/Art-attack-Moral-police-threaten-nudes-exhibition/articleshow/18342297.cms. பார்த்த நாள்: 7 December 2014.
- ↑ "Vadodara art student lands in jail". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 11 May 2007 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141216100939/http://www.hindustantimes.com/india-news/vadodara-art-student-lands-in-jail/article1-221807.aspx. பார்த்த நாள்: 7 December 2014.
- ↑ 10.0 10.1 "The Indian Penal Code, 1860" (PDF). Chandigarh District Courts. Archived from the original (PDF) on 14 January 2007. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
- ↑ Trafficking in Women and Children in India. 1 January 2005. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
- ↑ "Law and 'morals' fox police". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 May 2002. http://timesofindia.indiatimes.com/city/kolkata/Law-and-morals-fox-police/articleshow/8902646.cms. பார்த்த நாள்: 16 December 2014.
- ↑ "Suspecting prostitution, police detain 56 young couples from Ghaziabad hotel". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 10 August 2013 இம் மூலத்தில் இருந்து 17 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141217224157/http://www.hindustantimes.com/india-news/suspecting-prostitution-police-detain-56-young-couples-from-ghaziabad-hotel/article1-1106321.aspx. பார்த்த நாள்: 16 December 2014.
- ↑ Freedom of the Press: Using the Law to Defend Journalists. Socio Legal Information Cent. 2009. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89479-59-6. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
- ↑ The Book on Trial: Fundamentalism and Censorship in India. Har-Anand Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-0525-2.
- ↑ Law of Obscenity in India, USA & UK. Mittal Publications. 1990. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-169-4. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
- ↑ 17.0 17.1 Mukherjee, Krittivas (23 May 2007). "Cultural bigotry rises as India sees social change". Reuters. http://uk.reuters.com/article/uk-india-intolerance-idUKMOL34834320070523. பார்த்த நாள்: 11 November 2013.
- ↑ "Valentine's Day celebrations under fire". BBC News. 13 February 2003. http://news.bbc.co.uk/2/hi/south_asia/2757473.stm. பார்த்த நாள்: 7 December 2014.
- ↑ "Hindu and Muslim anger at Valentine's". BBC News. 11 February 2003. http://news.bbc.co.uk/2/hi/world/south_asia/2749667.stm. பார்த்த நாள்: 27 January 2015.
- ↑ "Tough love for Indian Valentines". BBC News. 14 February 2001. http://news.bbc.co.uk/2/hi/south_asia/1169077.stm. பார்த்த நாள்: 27 January 2015.
- ↑ "City cops turn moral police ahead of V-Day". இந்தியன் எக்சுபிரசு. 2 February 2010. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
- ↑ "Adolescence Education Programme (AEP)". National AIDS Control Organisation. Archived from the original on 14 March 2016. பார்க்கப்பட்ட நாள் 6 January 2015.
- ↑ "Sex education curriculum angers Indian conservatives". த நியூயார்க் டைம்ஸ். 24 March 2007. https://www.nytimes.com/2007/05/24/world/asia/24iht-letter.1.5851113.html?pagewanted=all. பார்த்த நாள்: 6 January 2015.