அர்விந்த் கௌர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்விந்த் கௌர்

[

பிறப்பு பெப்ரவரி 2, 1963(1963-02-02)
Delhi, India
தொழில் திரையரங்க இயக்குனர்

அர்விந்த் கௌர் ( अरविन्द गौड़ ), என்பவர் இந்திய நாடக இயக்குநராக அவரது புதிய முறை, சமூக மற்றும் அரசியல் தொடர்புடைய நாடகங்களுக்குக்காக அறியப்பட்டவராவார்.[1] கௌரின் நாடகங்கள் சமகாலத்தவை மற்றும் சிந்தனையைத் தூண்டுபவை, தனிப்பட்ட வாழ்வியலின் சமுதாயப் படிநிலையை பெரியளவிலான சமூக அரசியல் விஷயங்களுடன் இணைக்கின்றன.[2] அவரது படைப்புகள் மதவாதம், ஜாதி விவகாரங்கள், நிலவுடைமை, குடும்ப வன்முறை, அரசுகுற்றங்கள், அதிகாரத்தின் அரசியல், வன்முறை, அநீதி, சமூக வேற்றுமை, விளிம்புக்கு தள்ளப்படுதல், மற்றும் இனவாதம் போன்றவற்றுடன் தொடர்புடையது. அர்விந்த டெல்லியின் "மிகவும் சிந்தனையைத் தூண்டுகிறக் குழு'வான அஸ்மிதா'வின் தலைவர்,[3] மற்றும் நடிகர் பயிற்சியாளர், சமூக செயல்பாட்டாளர்,வீதி நாடகக் செயல்பாட்டாளர் மற்றும் கதைச் சொல்லியும் கூட ஆவார்.[4]

கௌர் ஆய்வாளருக்கான நிதியுதவியை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையிட (இந்திய) (1997-98) மிருந்து பெற்றார். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் 'தியேட்டர் இன் எஜுகேஷன்' திட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு கௌரவப் பேராசிரியராக இருந்தார். அவர் பல நாடகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளார் மேலும் பல்வேறு கல்லூரிகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களிலும் பள்ளிகளிலும் இந்தியா மற்றும் அயல்நாடுகளில் நாடகங்களை நிகழ்த்தியுள்ளார்.[5]

அவர் சிறுவர்களுக்காக[6] நாடக பயிற்சி பட்டறைகளை பள்ளிகளிலும் சேரிகளிலும் அதே போல தெரு நாடக நிகழ்வுகளையும் பல்வேறு சமூக-அரசியல்[7] விஷயங்களில் ஏற்பாடு செய்துள்ளார்.[6] இருபது ஆண்டுகளில் 60 ற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை இயக்கியுள்ளார்.[8]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கௌர் டெல்லியில், 1963 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிறந்தார். அர்விந்தரின் தந்தையார் ஸ்ரீ ஷிவ நந்தன் ஷர்மா (இறந்தது 16.04.09) ஒரு கணித மேதையாவார் மற்றும் அவரது தாயார் திருமதி. சரஸ்வதி தேவி இல்லத்தரசியாவார். அவருக்கு ஒரு சகோதரர் அனில் கௌர் மற்றும் மூன்று சகோதரிகள் - சஷி பிரபா, மறைந்த மித்லேஷ் மற்றும் டாக்டர். அனிதா கௌர் ஆகியோர் உள்ளனர். அவரது மனைவி டாக்டர். சங்கீதா கௌர் மிகத் திறமையான வாய்ப்பாட்டுக்காரர், இசையமைப்பாளர் மற்றும் இசை இயக்குநர் ஆவார். அவருக்கு இரட்டை மகள்கள் காகோலி & சவேரி ஆகியோர் உள்ளனர்.

நாடக தொழில் வாழ்க்கை[தொகு]

டெல்லியிலுள்ள விவேக் விஹாரின் மாடல் பள்ளியில் அவரது பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு, அவர் PUSA நிறுவனத்தில் எலக்டிரானிக் கம்யூனிகேஷனில் பொறியியல் படிக்க முடிவெடுத்தார். பின்னர், அவர் டெல்லி பொது நூலக நாடகக் குழுவில் சேர்ந்தார்.[8] DPL லில் அவர் பல்வேறு நாடகங்களில் நடித்தும் இயக்கவும் செய்தார். பிறகு அவர் சேரிக் குழந்தைகள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் மத்தியில் சில காலம் பணியாற்றி அவர்கட்கு பயிற்சி பட்டறைகளை நடத்தினார். அவரது விதேஷி ஆயா எனும் பெயருடைய முதல் வீதி நாடகம் ஸாகிர் ஹூசைன் கல்லூரியில் நடந்ததாகும். அது மிகப் பிரபலமாகியது மேலும் அதனை சுமார் 200 பள்ளிகளில் மேடையேற்றினார். இதன் பிறகு, அவரது வெளிப்பாட்டுணர்வு ஆர்வம் இதழியலுக்கு கொண்டு விட்டது. அவர் நவ் பாரத் டைம்ஸ் தினசரியில் பண்பாட்டு பத்தி எழுத்தராக சுமார் நான்காண்டுகளுக்கு பணியாற்றினார்.[8]

நாடகங்களை காண்பது, அவற்றைப் பற்றி படிப்பது மற்றும் அவற்றைப் பற்றி எழுதுவது என்பனவே எவ்வாறு நாடகத்தில் அவரது பயிற்சி துவங்கியது என்பதை விளக்கும். அவர் பின்னர் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI-TV) க்கு இடம் பெயர்ந்தார். அவர் தொலைத் தொடரான தானா-பனாவுடன் இணைந்திருந்தார். அவர் அங்கு ஆய்வு மற்றும் திட்டம் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்றிருந்தார். தெரு நாடகங்கள், அச்சு மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றோடு அவர் இணைந்திருந்த வருடங்கள் முழுதும் கௌர் இயக்கத்தில் கூர்ந்த ஆர்வத்தினை உருவாகிக் கொண்டார். இறுதியாக, PTI-TV க்கு இரு வருடங்களை அர்ப்பணித்தப் பிறகு அவர் நாடகத்திற்கு முழுமையாக மாறிச் செல்லும் பேராவலை உணர்ந்தார்.[9]

நாடகப் பயணம்[தொகு]

அர்விந்தின் துவக்க நாடகம் பீஷம் சாஹ்னியின் ஹனூஷ் (பிப்ரவரி,1993) ஆகும். அவர் தனது நாடக பயணத்தை காவியப் படைப்புக்களான துக்ளக், அந்தா யுக், கலிகுல்லா (நாடகம்), ஜூலியஸ் சீஸர் (நாடகம்) முதலியவையாகும். அவர் கிரீஷ் கர்னாட்டின் துக்ளக்கை ஸ்மால் பேஸ்மெண்ட் தியேட்டர் (SRC) யில் நிகழ்த்தினார். அதொரு பெரிய வெற்றியாகும். அவரது துக்ளக் "1994 ஆம் ஆண்டின் சிறந்த நாடகமாக" சாஹித்ய கலா பரிஷத்தினால் தேர்வு செய்யப்பட்டது. நாடகத்தில் ஒரு பத்தாண்டில் பெரும் உயரங்களை அவர் அடைந்தார். அவரது சொந்தப் பாணியில் நடிகர்களை பயிற்றுவித்தார். அவர் அவர்களை முழுமையான நாடக நபர்களாக மாற்றினார். அர்விந்த் கௌர் பல்வேறு நாடக கலைஞர்களுடனும் குழுக்களுடனும் குறிப்பாக தனியரங்க நிகழ்வுகளுக்காக ஒரு புதிய மொழியைத் தேட இணைந்தார்.[10]

முக்கிய இயக்கங்கள்[தொகு]

 • கிரீஷ் கர்னாட்டின் துக்ளக் மொழி பெயர்ப்புக்கள் பி.வி. காரந்த், சுரேகா சிக்ரி & கே.கே. நய்யார் ஆகியோரால் செய்யப்பட்டது.
 • பீஷம் சாஹ்னியின் ஹனூஷ்
 • தரம் வீர் பாரதி யின் அந்தா யுக் (தி ஏஜ் ஆஃப் பிளைண்ட்னெஸ்)
 • ஸ்வதேஷ் தீபக்கின் கோர்ட் மார்ஷல் (450 காட்சிகள்)
 • கோவிந்த் தேஷ்பாண்டேயின் அந்திம் திவஸ், ஹிந்தியில் சந்திர காந்த் பாட்டில் மூலம் மொழி பெயர்க்கப்பட்டது
 • ஆல்பர்ட் கான்யூவின் கலிகுல்லா (நாடகம்), ஷ்ரத் சந்திராவால் மொழிபெயர்க்கப்பட்டது
 • கிரீஷ் கர்னாட்டின் ரக்த் கல்யாண் (தலேதண்டா), ஹிந்தி மொழிபெயர்ப்பு ராம் கோபால் பஜாஜ்
 • பெர்ட்டோல்ட் பிரெக்ட்டின் தி காகேஷியன் சால்க் சர்க்கிள்மொழிபெயர்ப்பு கம்லேஷ்வர்
 • மஹேஷ் தத்தானியின் பைனல் சொல்யூஷன்ஸ்[11] ஷாஹித் அன்வரால் மொழிபெயர்க்கப்பட்டது[11]
 • யூஜின் ஓ'நீல்லின்டிசையர் அண்டர் தி எல்ம்ஸ்நாதிரா பப்பர்ரால் மொழிபெயர்க்கப்பட்டது
 • டாரியோ ஃபோவின் ஆபரேஷன் த்ரீ ஸ்டார் அமிதாப் ஸ்ரீவத்ஸவாவின் ஆசிடெண்டல் டெத் ஆஃப் அன் அனார்கிஸ்ட்டின் தழுவல்
 • டாக்டர். நரேந்திரா மோஹன்னின் கலாந்தர் & ஜின்னா
 • பெர்ட்டோல் பிரக்ட்டின் தி குட் பெர்சொன் ஆஃப் ஸெஷ்வான் (ராம்காலி-குட் வுமன் ஆஃப் டெல்லி), அமிதாப் ஸ்ரீவத்சவாவின் தழுவல்
 • சாமுவேல் பெக்கட்டின் வைட்டிங் ஃப்பர் கோடட், கிருஷ்ண பால் தேவ் வைட்
 • ஜான் ஆக்டானசெக்'ஸ் ரோமியோ ஜூலியட் அண்ட் தி டார்க்னெஸ், ஐஷ்வேர்யா நிதி
 • நீல் சைமன்னின் தி குட் டாக்டர், தழுவல் - சுனில் ஜசுஜா, சாடியா & அபர்ணா சிங்
 • விஜய் டெண்டுல்கர்ரின் காஷிராம் கோட்வால்[12]
 • ஷரத் ஜோஷியின் அந்தோன் கா ஹாதி & ஏக் தா கதா உர்ஃப் அலாதாத் கான்
 • முன்ஷி ப்ரேம்சந்ததின் மோடே ராம் கா சத்யாகிரக், ஹபீப் தன்வீர் மற்றும் சஃப்தார் ஹஷ்மி யினால் தழுவப்பட்டது
 • அஷோக் லால்லின் ஏக் மாமூலி ஆத்மி[13]
 • நாக் போடாஸ்சின் அமா துஜே சலாம்[14]
 • ராஜேஷ் குமாரின் மே காந்தி போல்தோ
 • வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் (நாடகம்)
 • மஹேஷ் தத்தானியின் தாரா, நீரஜ் மால்லிக்கின் மொழிபெயர்ப்பு
 • விஜய் மிஷ்ராவின் தத் நிரஞ்சனா, ராஜேந்திர பிராசாத் மிஷ்ராவின் மொழிபெயர்ப்பு
 • தூத்நாத் சிங்கின் யம கதா[15]
 • உதய் பிராகாஷ் சின் வாரென் ஹேஸ்டிங்ஸ் கா சாந்த்
 • டாக்டர். ஹரிஷ் நாவல்லின் பீலி சட் பார் காலா நிஸ்ஸான்
 • பீஷம் சாஹ்னி யின் 'கபீரா ( கபீர் )கேடா பசார் மாய்
 • மஹேஷ் தத்தானியின் 30 டேட்ஸ் இன் செப்டம்பர், ஹிந்தி மொழிபெயர்ப்பு ஸ்மிதா நிரூலாவினுடையது
 • பர்தேந்து ஹரீஷ்சந்திராவின் அந்தேர் நக்ரி
 • ஹர்ஷ் மந்தேர்ரின் உன்சுனி மல்லிகா சாராபாய் எழுத்து வடிவம்
 • ராஜேஷ் குமாரின் அம்பேத்கர் ஔர் காந்தி[16][17]
 • மோஹன் ராகேஷ்ஷின் லெஹெரோன் கே ராஜ் ஹன்ஸ்
 • அஹ்மதாபாத் கி ஔரத் பாலி- ராம்காலி தோற்றம் மல்லிகா சாராபாய் (34வது விக்ரம் சாராபாய் பன்னாட்டு கலைத் திருவிழா)[18]

தனியரங்க நாடக இயக்கம்[தொகு]

 • பீஷம் சாஹ்னியின் மாதவி தனியரங்க நாடகம் ராஷி பன்னி[19]
 • தலைப்பற்றது, லூஷின் தூபேவுடன் தனித்த அரங்கம் (நாடக உலகம்)[20]
 • காந்தாரி தனியரங்கம் ஐஷ்வேர்யா நிதியுடன்[21]
 • சாரா கானே யின் 4.48 சைக்கோஸிஸ் ரூத் ஷீயர்ட்[22]
 • மஞ்சுளா பத்மநாபனின்ஹிட்டன் பையர்ஸ்,ராஷி பன்னி[23]
 • விமன் இன் பிளாக், மகளீர் தனியரங்க நிகழ்வு & பப்புள்ஸ் சபர்வால்[24]
 • அண்டோனே டி சைண்ட்-எக்சுபரியின் தி லிட்டில் பிரின்ஸ், மகளீர் தனியரங்க நிகழ்வு ராஷி பன்னி[25]
 • பிங்கி விரானியின் பிட்டர் சாக்லேட் லூஷின் தூபேவின் தனியரங்க நிகழ்வு[26]
 • வாக்கிங் த்ரூ தி ரெயின்போ,ராஷி பன்னி
 • ஸ்டோரி ஆஃப் தி டைகர், ஜைமினி குமார் ஸ்ரீவத்சவாவுடன்
 • அ வுமன் அலோன், ரூத் ஷியர்ட்டுடன் தனியரங்கம்

வீதி நாடகங்கள்[தொகு]

அவர் 25 ற்கும் மேற்பட்ட வீதி நாடக நிகழ்வுகளை பல்வேறு சமூக-அரசியல் விஷயங்களில் இயக்கியுள்ளார். சமீபத்தில் அவரது குழு தொடர்ச்சியான "ஊழல் எதிர்ப்பு" வீதி நாடகங்களை ஐக்கிய நாடுகள் போதை பொருட்கள் மற்றும் குற்றங்கள் அமைப்புடன் (UNODC) ROSA வுடன் இணைந்து செயல்படுத்தியது.[27]

விருதுகள்[தொகு]

 • ஆர்ட்டிஸ்ட்ஸ் 4 சேஞ்ச் கர்மவீர் புரஸ்கார் நோபல் லரேட்ஸ், 2008 iCONGO- Confederation of NGOக்களால் கொடுக்கப்பட்டது
 • ஸ்பெஷல் ஜூரி மரபுடன் கூடிய சிறந்த பரிசோதனை நாடகத்திற்கான விருது இண்டெர்நேஷனல் சோலோ திஏடர் ஃபெஸ்டிவல், ஆர்மீனியா, 2004
 • இண்டெர்நேஷனல் தியேட்டர் ஃபெஸ்டிவலில் கலர் ஆஃப் நேஷன் அவார்ட், நிஷ்னேவ்வார்டோவ்ஸ்க், ரஷ்யாவில் மாதவி எனும் ராஷ்மி பன்னியின் தனியரங்க நாடகத்திற்கானது, 2005
 • அவரது டெல்லியின் கலை & பண்பாட்டிற்கானது 2007ம் ஆண்டில் ராதா கிருஷ்ணா அவார்ட்
 • உத்தாவ் ஷிகார் சம்மான் (ஆச்சார்யா விஜயேந்த்ர சனாதக்கின் நினைவாக)2008
 • ஸ்வார்-த்ரோகர் விருது, 2007.

காட்சி ஊடகத்திற்கான படைப்புகள்[தொகு]

 1. "மேரி ஜீவன் கி அபிலாஷா" எனும் குறும் படத்தில் நடித்தார் அது கிருதி தக்காரால் இயக்கப்பட்டு இண்டெர்நேஷனல் ஸ்டூடெண்ட்ஸ் ஃபிலீம் ஃபெஸ்டிவல், 2010ம் ஆண்டில் சிறந்த புனைவுப் படத்திற்கான இரண்டாம் விருதினை "மிசெ-என்-ஸீன்" னில் வென்றது.
 2. உதவி இயக்குநர்-விவரணப் படம் " இன் செர்ச் ஆஃப் அன் ஐடியாலஜி" இயக்குநர்-பிரசன்னா தூர்தர்ஷன், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், இந்தியா
 3. பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI-TV) வில் பணியாற்றினார்.
 4. தொலைக்காட்சிப் படமான "தாபா"வில் க்ரீன் ஆஸ்கார் விருது பெற்ற மைக் பாண்டேயால் இயக்கப்பட்டது, நஃபீசா அலியினால் தயாரிக்கப்பட்டது.
 5. உதவி இயக்குநர் விவரணத் திரைப்படம் "கோகாக்" (வி.கே.கோகாக்), இயக்குநர்-பிரசன்னா சாஹித்ய அகாடெமி, டெல்லி
 6. ஆய்வு & எழுத்து தொலைத் தொடர் "தானா-பானா" (1991-1992), பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவால் தயாரிக்கப்பட்டது

மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்து வடிவம்[தொகு]

மொழிபெயர்ப்பு

 • ரபீந்திரநாத் தாகூரின் விசர்ஜன் (தியாகம்)னை மொழிபெயர்த்தார் தர்பனா தியேட்டர் குரூப்பால் நிகழ்த்தப்பட்டு, உஜ்வல் தேவ்வால் இயக்கப்பட்டது[28]
 • அர்விந்த் கௌர் நாடகமான 'உன்சுனி'யை ஹிந்தியில் மொழிபெயர்த்தார்; எழுத்தும் இயக்கமும் மல்லிகா சாராபாய்[29]

எழுத்து வடிவங்கள்

 • அவர் தலைப்பிடாதது, காந்தாரி, பிட்டர் சாக்லேட் (பிங்கி விரானியின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது), மாதவி தனியரங்க நாடகம் (பீஷம் சாஹ்னியின் நாடகம்) என பல்வேறு நாடகங்கள் மற்றும் தெரு நாடகங்களை 'அஸ்மிதா' தியேட்டருக்காக எழுதியுள்ளார்.

முக்கிய நடிகர்கள்[தொகு]

அர்விந்த் கௌரின் கீழ் பயிற்சி பெற்ற முக்கிய திரை மற்றும் நாடக நடிகர்கள்-கங்கனா ரனௌட், ஷில்பா ஷூக்லா, மனு ரிஷி, ஐஷ்வேர்யா நிதி, தீபக் டோப்ரியால், ஷக்தி ஆனாந்த், மோஹித் திரிபாதி, ராஜேஷ் பகோத்ரா, நந்தினி அரோரா, சீமா ஆஸ்மி, அபர்ணா சிங், சூசான் பிரார், ஆயேஷா மோஹன் முதலியவர்களாவர்.

அவருடன் பணிபுரிந்த முன்னணி நாடக நடிகர்கள்- மல்லிகா சாராபாய், பியூஷ் மிஷ்ரா ,ராஷி பன்னி, லூஷின் தூபே, பப்பிள்ஸ் சபர்வால், ரூத் ஷியர்ட், ஜைமினி குமார் ஸ்ரீவத்சவா,ஷைலேந்திர கௌர்,ஹிமான்ஷு ராய் முதலியவர்கள்[30]

வடிவமைப்புகள்[தொகு]

அர்விந்த் கௌர் நயா தியேட்டர் குரூப்சின் பத்ம ஸ்ரீ ஹபீப் தன்வீர் இயக்கத்திலான பெரிய தயாரிப்புக்களுக்கு ஒளியமைப்பை வடிவமைக்கிறார்.அர்விந்த கௌர் ஸ்ரீ ஹபீப் தன்வீருக்கு பிருத்வி தியேட்டர் ஃபெஸ்டிவலின் போது கூட உதவி பிரிந்தார். அவர் ஆக்ரா பஜாரின் (நஸீர் அகபராபதியின் கவிதை) ஒளி வடிவமைப்பு செய்கிறார், சரண்தாஸ் சோர் (அவரது சிறப்பான நாடகம், எடின்பர்க் பிரிஞ் விருது), அஸ்கார் வாஜாஹத்தின் ஜிஸ் லாகூர் நை தேக்யா, காம்தேவ் கா அப்னா பஸந்த் ரிது கா சப்னா (ஹபீப் தன்வீரின் ஷேக்ஸ்பியரின் அ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்), கனடிய-இந்திய நாடக ராஹுல் வர்மாவின் ஸக்ரீலி ஹவா மற்றும் காவோன் கெ நவோன் சஸுரால், மோர் நவோன் டாமண்ட் ஆகியவற்றிற்கு ஒளியை வடிவமைக்கிறார்.

கூடுதல் வாசிப்பு[தொகு]

 1. "அர்விந்த் கௌர்-அ டிகேட் இன் தியேட்டர்"-புக் பை ஜே.என்.கௌசல் (எக்ஸ்-ஆக்டிங் சீஃப் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா, ரெபெர்டோரி கம்பெனி,) பப்ளிஷ்ட் பை ITI (இண்டெர்நேஷனல் தியேட்டர் இன்ஸ்டியூட்), UNESCO, இந்தியன் சேப்டர்
 2. "ரைசிங் தி கர்ட்டெய்ன் ஆன் தியேட்டர்"- இயக்குநர் அர்விந்த் கௌர் ரிஃப்ளெக்ட்ஸ் ஆன் வொய் இந்தியா நீட்ஸ் அ கல்ச்சர் பாலிசி பை சீமா சிந்து (லைஃப் ஃப்யர்ஸ், செப்டம்பர்,2007)
 3. ஹிஸ் வாய்ஸ்"ஏஸ் ஆக்ட்", கட்டுரை சேகர் சந்திரன் (நியூ வுமன், ஜன.2008)
 4. "தி வோல்ர்ட் ஆஃப் தியேட்டர்" பை இயான் ஹெர்பெர்ட், நிகோலே லெக்லேரக் ,(P-126) பப்ளிஷ்ட் பை இண்டெர்நேஷனல் தியேட்டர் இன்ஸ்டியூட்

மேற்குறிப்புகள்[தொகு]

 1. Nandini Nair (2008-05-03). "Walking the causeway". The Hindu. பார்த்த நாள் 2008-10-09.
 2. "Brechtfast in Ballimaran". Time Out Delhi. பார்த்த நாள் 2008-10-09.
 3. Trisha Gupta. "Super trouper". பார்த்த நாள் 2008-10-09.
 4. Neelima Menon (2008-04-27). "Staging Narratives-Storytelling session for visually impaired children". The Indian Express. பார்த்த நாள் 2008-12-24.
 5. Stony Brook University (2004-10-14). "Untitled:A Solo Theatrical Performance by Lushin Dubey". Charles B.Wang Center. பார்த்த நாள் 2008-12-24.
 6. 6.0 6.1 Ishita Agarwal (2008-06-24). "Theatre tactics". The Hindu. பார்த்த நாள் 2008-10-09.
 7. "Teach India strikes the right chord". Times of India (2008-07-14). பார்த்த நாள் 2008-10-09.
 8. 8.0 8.1 8.2 "A treat for the senses". The Hindu (2007-07-05). பார்த்த நாள் 2008-10-09.
 9. Theatre Pasta (2007-10-08). "Nalina Mittra catches up with Arvind Gaur to find out more about his journey". Theatre Magazine. பார்த்த நாள் 2008-12-24.
 10. Sites.google.com. "About Director-Arvind Gaur". பார்த்த நாள் 2008-12-30.
 11. 11.0 11.1 Deepa Punjani. "In Retrospect: Select plays of the 9th National Theatre Festival at Nehru Centre, Mumbai". mumbaitheatreguide.com. பார்த்த நாள் 2008-10-08.
 12. Rana A. Siddiqui (2001-12-07). "The fall of a shooting star". The Tribune. பார்த்த நாள் 2008-10-09.
 13. Mohd Arshi Rafique (2009-03-04). "Cut above-About a common man,but no common play this". The Indian Express. பார்த்த நாள் 2009-03-05.
 14. Madhur Tankha (2007-08-25). "A tale of duplicity and deprivation". The Hindu. பார்த்த நாள் 2008-10-09.
 15. Romesh Chander (2005-02-18). "Drama and mythology". The Hindu. பார்த்த நாள் 2008-12-24.
 16. Romesh Chander (2009-08-20). "An ongoing dialogue". The Hindu. பார்த்த நாள் 2009-08-24.
 17. P.ANIMA (2009-07-17). "A spirited adventure". The Hindu. பார்த்த நாள் 2009-07-22.
 18. "34th Vikram Sarabhai International Art Festival". The Times of India (2009-12-24). பார்த்த நாள் 2009-12-31.
 19. "Anand Foundation New Delhi". பார்த்த நாள் 2008-10-09.
 20. Chitra Parayath (2003-04-06). "Untitled solo at Marlboro,New England". lokvani(Public Voice). பார்த்த நாள் 2008-12-24.
 21. Staff reporter (2005-03-28). "For the love of showbiz". The Hindu. பார்த்த நாள் 2008-10-09.
 22. Sumati Mehrishi Sharma (2005-12-31). "Mind Games". The Indian Express. பார்த்த நாள் 2008-10-09.
 23. Ankur Kalita (2004-07-29). "Solo for Peace". The Indian Express. பார்த்த நாள் 2008-12-24.
 24. Mala Kumar (2003-05-12). "Missing the rainbow". The Hindu. பார்த்த நாள் 2008-10-09.
 25. Naina Dey (2010-01-14). "Cult of subtle satire". The Statesman. பார்த்த நாள் 2010-02-05.
 26. Drama critic (2005-04-11). "An unspoken bitter truth". The Hindu. பார்த்த நாள் 2008-12-24.
 27. UNODC ROSA. "Street Plays to Raise Public Awareness on the occasion of International Anti Corruption Day". பார்த்த நாள் 2008-12-30.
 28. Darpana Academy (2007-10-07). "Rabindranath Tagore's Visarjan (Sacrifice)". பார்த்த நாள் 2008-12-30.
 29. "Unsuni: Unheard Voices". Darpana. பார்த்த நாள் 2008-12-30.
 30. Sites.google.com. "Prominent Actor's who worked with Arvind Gaur". பார்த்த நாள் 2009-03-05.

புற இணைப்புகள்[தொகு]

 1. தி குட் மேன் ஆஃப் டெல்லி ஸ்டேஜ் பை அர்ச்சனா (2008-09-26) மெயில்-டுடே.
 2. ஃபவுண்டர் ஆஃப் அஸ்மிதா குரூப், பை ரோஹித் மாலிக், டெல்லி ஈவண்ட்ஸ் (2008.12.30)
 3. காந்தாரி, ஐஷ்வேர்யா நிதியின் தனியரங்கம்
 4. "ஆல் தி வோர்ல்ட்ஸ் அ பிளாட்ஃபார்ம்" பை ஷைலஜா திரிபாதி. Expressindia ,( 2003.09.17)
 5. "Heal the wounds" by Rohini Ramakrishan,(2004/12/11), The Hindu
 6. டிராமாடிக் சொசைட்டி ஆஃப் லேடி ஸ்ரீ ராம் காலேஜ்
 7. "அ ப்ளத்தோரா ஆஃப் பிராப்ளம்ஸ் அஃப்Pஇளிக்ட்ஸ் ஹிந்தி தியேட்டர்" ராணா ஏ சித்திகி. தி டிரிப்யூன்.2001.12.28)
 8. "Mahesh Dattani's Final Solutions"Oneness Peace Festival,Hindu College,University of Delhi(2005.09.16)
 9. "பிளே ஆஃப் ரூல்ஸ்-அர்விந்த் கௌர்'ஸ் ஸ்ட்ரீட் தியேட்டர்-ஹட்கே பாச்கே "நந்தினி நாயர்", தி ஹிந்து (2009.01.12)
 10. "Nobody’s Child-Bitter Chocolate"Express Features Service,The Indian Expres(2004.01.08)
 11. "தி பார்க்'ஸ் தி அதர் ஃபெஸ்டிவல் ஓனாசிஸ் அவார்டி மஞ்சுளா பதமநாபன்'ஸ் "ஹிட்டன் ஃபையர்ஸ்"-தி ம்யூசியம் தியேட்டர்,சென்னை(2005.12.07)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்விந்த்_கௌர்&oldid=2408683" இருந்து மீள்விக்கப்பட்டது