அர்விந்து கண்பத்
Appearance
அர்விந்து கண்பத், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1951-ஆம் ஆண்டின் டிசம்பர் 31-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலிலில், தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]
2019 இந்தியப் பொதுத் தேர்தலில், இவர் மீண்டும் தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார். மேலும் இவர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் பெருந்தொழில்கள் மற்றும் பொதுத்துறை தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சராக 30 மே 2019 அன்று பதவியேற்றார்.[2] [3]
சான்றுகள்
[தொகு]- ↑ "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
- ↑ "Know your Minister: Arvind Sawant - Heavy Industries and Public Enterprise". Money Control. 31 May 2019. பார்க்கப்பட்ட நாள் 31 May 2019.
- ↑ "Rashtrapati Bhavan: Press Comminique" (PDF). India. பார்க்கப்பட்ட நாள் 31 May 2019.