அர்வாடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அர்வாடோ (Arvato) என்பது செருமானிய சேவைக்குழுமம் ஆகும். இதன் தலைமை அலுவலகம் செருமனியின் குடேர்சுலோவில் அமைந்துள்ளது. இது ஒரு உலகளாவிய குழுமம் ஆகும்.[1] வாடிக்கையாளர்களின் தேவைகள், தகவல் தொழில் நுட்பம் போக்குவரத்து மற்றும் நிதியம் தொடர்பான சேவைகளை இந்தக் குழுமம் செய்கிறது. பெர்ட்டல்ஸ்மன் குழுமத்தின் எட்டு பிரிவுகளில் ஒன்று அர்வாடோ ஆகும்.

பெர்ட்டல்ஸ்மன் என்ற குழுமத்தின் அச்சடிப்பு வேலை தொழிற்சாலைப் பணிகள் ஆகியவற்றை இந்தக் குழுமம் தொடங்கியது. 1999இல் ஆர்வாடோ என்று பெயர் சூட்டினார்கள். இதில் 68463 ஊழியர்கள் பணி செய்கிறார்கள். 3.84 பில்லியன் யூரோக்கள் மதிப்பளவில் மொத்த வரவு செலவு ஆகிறது.

மேற்கோள்[தொகு]

  1. Jens Ostrowski (மார்ச் 23, 2016). "Arvato baut aus" (in de). Neue Westfälische: p. 13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்வாடோ&oldid=2389278" இருந்து மீள்விக்கப்பட்டது