அர்வல்
அர்வல் | |
|---|---|
நகரம் | |
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அர்வல் நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 25°14′39″N 84°39′47″E / 25.24417°N 84.66306°E | |
| நாடு | |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | அர்வல் மாவட்டம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 51,849 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
| • கூடுதல் மொழி | உருது[1] |
| • வட்டார மொழி | மகதி மொழி[2] |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 804401 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
| வாகனப் பதிவு | BR-56 |
| இணையதளம் | arwal |

அர்வல் (Arwal'), வட இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள அர்வல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரம் பட்னாவிற்கு தென்மேற்கே 70 கிலோ மீட்டர் தொலைவில், சோன் ஆற்றின் வலது கரையில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 25 வார்டுகளும், 8,453 குடியிருப்புகளும் கொண்ட அர்வல் நகரத்தின் மக்கள் தொகை 51,849 ஆகும். அதில் ஆண்கள் 27,077 மற்றும் 24,772 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.29 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18.51 % மற்றும் 0.15 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 82.23%, இசுலாமியர் 17.46% மற்றும் பிற சமயத்தினர் 031 % வீதம் உள்ளனர்.[3]
மொழிகள்
[தொகு]இந்தி மற்றும் உருது மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளது.[1]மகதி மொழி வட்டார வழக்கு மொழியாக உள்ளது.[4]
போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 33 (இந்தியா) மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 139 அர்வல் நகரம் வழியாகச் செல்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 27 May 2019.
- ↑ Magahi language
- ↑ Arwal Town Population Census 2011
- ↑ "About District - Arwal". Archived from the original on 31 March 2016. Retrieved 27 May 2019.