அர்வந்து கவுர்
![]() 2010 பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகள் அர்வந்து கவுர் | ||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 5 சூலை 1980 | |||||||||||||||||||
உயரம் | 1.68 m (5 அடி 6 அங்) | |||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||
நாடு | ![]() | |||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | |||||||||||||||||||
நிகழ்வு(கள்) | வட்டெறிதல் குண்டு எறிதல் (விளையாட்டு) | |||||||||||||||||||
பயிற்றுவித்தது | பர்வீர் சிங் | |||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | குண்டு எறிதல்: 15.75 (பெங்களூர் 2002) வட்டு எறிதல்: 63.05 மீட்டர் (கீவ் 2004) | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||
10 சூலை 2013 இற்றைப்படுத்தியது. |
அர்வந்து கவுர் (Harwant Kaur, பிறப்பு: 5 சூலை 1980) இந்தியாவைச் சேர்ந்த வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் விளையாட்டு வீராங்கனை ஆவார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய வெற்றியாளர் போட்டியில் அர்வந்து கவுர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[1] 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய வெற்றியாளர் போட்டியில் நான்காவது இடத்தையும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஏழாவது இடத்தையும் பிடித்தார். கூடுதலாக, இவர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். இப்போட்டியில் தகுதிச் சுற்றுகளில் பங்கேற்று 13 ஆவது இடத்தைப் பிடித்தார். இவரது தனிப்பட்ட பயிற்சியாளர் பர்வீர் சிங் ஆவார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2]
அர்வந்து கவுரின் தனிப்பட்ட சிறந்த எறிதல் 63.05 மீட்டர் ஆகும். இச்சாதனையை 2004 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தில் நிகழ்த்தினார். 2008 ஆம் ஆண்டு பீகிங் நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அர்வந்து கவுர் போட்டியிட்டார். ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. தகுதிச் சுற்றில் 56.42 மீட்டர் எறிதலுடன் 17 ஆவது இடத்தைப் பிடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Asian Championships – GBR Athletics
- ↑ "CWG: Poonia leads India's medal sweep in discus throw". என்டிடிவி. 11 October 2010. http://www.ndtv.com/article/commonwealth-games/cwg-poonia-leads-india-s-medal-sweep-in-discus-throw-59008. பார்த்த நாள்: 10 July 2013.