உள்ளடக்கத்துக்குச் செல்

அர்லீன் தியோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்லீன் தியோல்
2022 இல் தியோல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அர்லீன் கவுர் தியோல்
பிறப்பு21 சூன் 1998 (1998-06-21) (அகவை 27)
சண்டிகர், இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கை ஆட்டம்
பந்துவீச்சு நடைவலக்கை நேர்ச் சுழல்பந்து வீச்சு
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 126)22 பிப்ரவரி 2019 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப26 அக்டோபர் 2025 எ. பங்களாதேஷ்
ஒநாப சட்டை எண்33 (formerly 98)
இ20ப அறிமுகம் (தொப்பி 62)4 மார்ச்சு 2019 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப11 July 2023 எ. பங்களாதேஷ்
இ20ப சட்டை எண்33 (formerly 98)
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013/14–நாளதுவரைஇமாச்சலப் பிரதேச பெண்கள் அணி
2019–2020டிரையல்பிளேசர்சு
2022சூப்பர்நோவாசு
2023–நாளதுவரைகுஜராத் ஜயன்ட்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை WODI WT20I
ஆட்டங்கள் 37 26
ஓட்டங்கள் 1050 298
மட்டையாட்ட சராசரி 32.81 17.53
100கள்/50கள் 1/4 0/1
அதியுயர் ஓட்டம் 115 52
வீசிய பந்துகள் 90 108
வீழ்த்தல்கள் 2 6
பந்துவீச்சு சராசரி 40.50 23.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/7 2/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/– 7/–
மூலம்: ESPNcricinfo, 19 October 2025

அர்லீன் கவுர் தியோல் (Harleen Kaur Deol, பிறப்பு: ஜூன் 21,1998) இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.[1] அவர் இமாச்சலப் பிரதேச அணிக்காக விளையாடுகிறார், அவ்வப்போது வலது கை நேர்ச் சுழல்பந்து வீச்சாளராகவும், வலது கை மட்டையாளராகவும் விளையாடுகிறார்.[2]

அர்லீன் 22 பிப்ரவரி 2019 அன்று இங்கிலாந்து எதிராக மும்பை உள்ள வான்கடே அரங்கத்தில் இந்தியாவுக்கான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார், தானியா பாட்டியாவுக்குப் பிறகு சண்டிகரில் இருந்து இந்தியாவுக்காக விளையாடிய இரண்டாவது பெண் கிரிக்கெட் வீரர் ஆனார்.[3] அர்லீன் மொகாலியில் உள்ள யாதவிந்திரா பப்ளிக் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் 4 மார்ச், 2019 அன்று இங்கிலாந்துக்கு எதிராக தனது டி20 உலகக் கோப்பையில் அறிமுகமானார்.[4] அர்லீன் தனது மகளிர் டி20 பந்தயத்தில் டிரெய்ல்ப்ளேசர்ஸ் அணிக்காக 2019 மே 6 அன்று சூப்பர்நோவாசுக்கு எதிராக அறிமுகமானார், சுமிருதி மந்தனாவுடன் இணைந்து 100 ஓட்டங்கள் எடுத்தார்.[5]

ஜனவரி 2020 இல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் பெயரிடப்பட்டார்.[6]

ஜூலை 2021 இல் இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு-20 தொடரின் போது பவுண்டரி கயிற்றைத் தவிர்க்க வேண்டி பந்தைப் பிடித்தது இவரை உலகறியச் செய்தது. ஏமி ஜோன்ஸ் அடித்த பந்தைப் பிடிக்க நீண்ட தூர களத் தடுப்பில் நின்றிருந்த அர்லீன் தனது தலைக்கு மேலே இரண்டு கை உயரத்தில் குதித்தார், ஆனால் அவரது வேகம் போதாமல் ஆறு ரன்களை நோக்கி எல்லைக் கயிற்றைக் கடந்து செல்வதை உணர்ந்த அவர், பந்தை காற்றில் வீசி, நடுவானில் விழுந்த பந்தை மீண்டும் கைப்பற்ற விளையாட்டு மைதானத்திற்குள் திரும்புவதற்கு போதுமான நேரத்தை அளித்தார். இதற்காக சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடமிருந்து அவர் பாராட்டைப் பெற்றார்.[7]

ஜூலை 2022 இல், இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்த 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மட்டைப்பந்து போட்டியில் இந்திய அணியில் இவர் இடம்பெற்றார்.[8]

2023 ஆம் ஆண்டில் இந்திய மகளிர் பிரீமியர் லீக் தொடக்க ஆட்டங்களில், அர்லீன் தியோலை குஜராத் ஜயண்ட்ஸ் (ஜிஜி) ஐ 40 லட்ச ரூபாய்க்கு வாங்கியது.[9] நான்கு வாரப் போட்டியின் முடிவில், 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்த பதின்மூன்று மட்டைப் பந்தாளர்களில் இவரும் ஒருவர். இவரது மொத்த ஓட்டங்கள் 202. இவரது ஓட்ட விகிதம் 125.46 என்ற விகிதத்தில் சாதித்தார், இவரது அணிக்காக இரண்டு ஓட்டங்கள் அதிகம் எடுத்து அதிக அணியை வெற்றி பெறச் செய்தார்.

24 டிசம்பர், 2024 அன்று, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியின் போது, இந்திய அணிக்காக அர்லீன் தனது முதல் ஒருநாள் மற்றும் சர்வதேச சதத்தை 103 பந்துகளில் 115 ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்தார்.[10]

குறிப்புகள்

[தொகு]
  1. "Harleen Deol". ESPNcricinfo. Retrieved 22 February 2019.
  2. "In the zone – North - News - BCCI.tv". www.bcci.tv (in ஆங்கிலம்). Archived from the original on 10 May 2019. Retrieved 2019-05-10.
  3. "1st ODI, England Women tour of India at Mumbai, Feb 22 2019". ESPNcricinfo. Retrieved 22 February 2019.
  4. "1st T20I, England Women tour of India at Guwahati, Mar 4 2019". ESPNcricinfo. Retrieved 4 March 2019.
  5. "Match Report: M1 - TRAILBLAZERS vs SUPERNOVAS". www.iplt20.com (in ஆங்கிலம்). Retrieved 2019-05-10.
  6. "Kaur, Mandhana, Verma part of full strength India squad for T20 World Cup". ESPNcricinfo. Retrieved 12 January 2020.
  7. Rao, Santosh (11 July 2021). "Prime Minister Narendra Modi Reacts To Harleen Deol's "Phenomenal" Catch". NDTV Sports. Archived from the original on 6 ஜனவரி 2022. Retrieved 12 December 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Team India (Senior Women) squad for Birmingham 2022 Commonwealth Games announced". Board of Control for Cricket in India. Retrieved 11 July 2022.
  9. "Harleen Deol urges fans to watch WPL after bagging contract with Gujarat Giants: Great opportunity for us". India Today (in ஆங்கிலம்). 2023-02-14. Retrieved 2025-02-17.
  10. "Harleen Deol hits maiden ODI century in India's fiery batting-show vs West Indies". India Today (in ஆங்கிலம்). 2024-12-24. Retrieved 2025-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்லீன்_தியோல்&oldid=4565119" இலிருந்து மீள்விக்கப்பட்டது