அர்மிக் சிங்
தோற்றம்
| விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||
| விளையாட்டு | வளைகோற் பந்தாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||
அர்மிக் சிங் (Harmik Singh) இந்தியாவைச் சேர்ந்த வளைகோற்பந்தாட்ட வீரராவார். 1945 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இவர் இந்திய வளைகோற்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் மற்றும் பயிற்சியாளர் ஆவார். 1968 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் உட்பட பல போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். தனது சாதனைகளுக்காக இவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது. அச்சீத்து சிங்கின் சகோதரராகவும் பிற்கால இந்திய பன்னாட்டு வீரரான ககன் அச்சீத்து சிங்கின் மாமாவாகவும் அறியப்படுகிறார். பஞ்சாபில் உள்ள குச்ரன்வாலாவில் இவர் பிறந்தார். 1982 மற்றும் 1986 வளைகோற்பந்தாட்ட உலகக் கோப்பைகளில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harmik Singh's profile at Sikhs in Hockey
- ↑ "Indian Coaches in Men's Hockey World Cups". hockeypassion.in. Hockey Passion. 18 November 2022. Retrieved 18 November 2022.
- "அர்மிக் சிங்". Sports-Reference.com. Sports Reference LLC.
- Sportal.nic.in