உள்ளடக்கத்துக்குச் செல்

அர்மான் இப்ராஹிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அர்மான் இப்ராஹிம் (Armaan Ebrahim பிறப்பு 17 மே 1989) இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர் ஆவார். இவர் MECO மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

பின்னணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அர்மான் ஓர் இந்தியக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை அக்பர் இப்ராஹிம் மேனாள் F3 வாகையாளர் ஆவார். இவரது குடும்பம் தமிழ்நாட்டின் சென்னையினைப் பூர்வீகமாகக் கொண்டது.

டிசம்பர் 2021 இல், அனில் மற்றும் சோபனா காமினேனி தம்பதியின் மகளான அனுஷ்பாலா கமினேனியை இந்து மத முறையில் மணந்தார். அனில் காமினேனி ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் ஷோபனா அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் பிரதாப் ரெட்டியின் மகள் ஆவார்.

அனுஷ்பாலாவின் சகோதரி உபாசனா, தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரணின் மனைவியாவார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

இப்ராஹிம், கார்டிங்கில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார் 2004 இல் ஃபார்முலா எல்ஜிபியின் வாகையாளரானார்.2005 பருவ ஃபார்முலா BMW போட்டிக்காக ஆசியாவிற்குச் சென்றார். அதே ஆண்டில் A1 கிராண்ட் பிரிக்ஸ் வாகையாளர் தொடருக்காக A1 டீம் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அதில் 6 பந்தயங்களில் கலந்துகொண்டார். நிதி பற்றாக்குறை காரணமாக அணி கலைக்கப்பட்டது. மீண்டும் 2006-07 A1 கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் A1 டீம் இந்தியாவிற்காக கலந்துகொண்டார். 2007 இல் ஃபார்முலா V6 ஆசியாவில் கலந்துகொண்டார். ஐந்து வெற்றிகளுடன் புள்ளிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

2008 GP2 ஆசிய தொடரில் டேவிட் பிரைஸ் ரேசிங் அணிக்காக போட்டிகளில் கலந்துகொண்டார். 26 புள்ளிகளைப் பெற்று 9-ஆவது இடத்தைப் பெற்றார். டிசம்பர் 12, 2008 இல், 2009 ஆம் ஆண்டில் ர்ரிபெர்த் FIA ஃபார்முலாவிற்காக பதிவுசெய்த முதல் ஆசிய ஓட்டுநராக இப்ராஹிம் அறிவிக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Armaan Ebrahim signs up for F2". FIA Formula Two Championship. 2008-12-12. http://www.formulatwo.com/news/news-archive/2009/february/armaan-ebrahim-signs-for-f2.aspx. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்மான்_இப்ராஹிம்&oldid=4196145" இலிருந்து மீள்விக்கப்பட்டது