உள்ளடக்கத்துக்குச் செல்

அர்பா கரீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்பா கரீம்
பிறப்புஅர்பா அப்துல் கரீம் ரன்தாவா
(1995-02-02)2 பெப்ரவரி 1995
பைசலாபாத், பாகிஸ்தான்
இறப்பு14 சனவரி 2012(2012-01-14) (அகவை 16)
லாகூர் பாகிஸ்தான்
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
கல்லறைபைசலாபாத்
கல்விஏ- லெவல்
படித்த கல்வி நிறுவனங்கள்லாகூர் கிரமர் பாடசாலை
பணிமாணவி
செயற்பாட்டுக்
காலம்
1995-2012
அறியப்படுவதுஇளவயது மைக்ரோசொப்ட் தொழில் முறை சான்றிதழ் பெற்று கொண்டவர் 2004–2006
விருதுகள்பாத்திமா ஜின்னா தங்கப்பதக்கம்
சஙாம் பாகிஸ்தான் யூத் விருது
பிரய்ட் ஒப் பார்போமன்ஸ் 2005

அர்பா அப்துல் கரீம் ரன்தவா (ارفع کریم رندھاوا) (2 பெப்ரவரி 1995 - 14 ஜனவரி 2012) பாகிஸ்தானை சேர்ந்த மாணவி மற்றும் கணினி மேதை. 2004 ஆம் ஆண்டு தனது ஒன்பதாவது வயதில் மைக்ரோசொப்ட் தொழில் முறை சான்றிதழைப் பெற்றார். பத்தாவது வயதில் விமான அனுமதிபத்திரம் கிடைக்கப் பெற்றார். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இவரது பெயர் பதியப்பட்டுள்ளது. பல்வேறு சர்வதேச மன்றங்கள் கலந்துக் கொண்ட தொழினுட்ப வல்லுனர்களின் மாநாட்டில் (டெக்-எட் டெவலப்பர்ஸ் கான்பரஸ்) பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டார். 2005 இல் பிரய்ட் ஒப் பெர்பாமன்ஸ் ஜனாதிபதி விருதை பெற்றுக் கொண்டார். லாகூரில் அமைந்துள்ள சயன்ஸ் பார்க் பின் நாளில் இவரது பெயரால் அர்பா சொப்ட்வேர் டெக்னாலஜி பார்க் என்ற பெயர் பெற்றது.[1][2][3][4] ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ள மைக்ரோசொப்ட் தலைமையகத்துக்கு அதன் நிறுவனரான பில்கேட்ஸ்சினால் இவர் அழைக்கப்பட்டார்[5]. 2012 ஜனவரியில் தனது 16வது வயதில் மாரடைப்பால் மரணமானார்.

வாழ்க்கை[தொகு]

அர்பா பைசலாபாத், பஞ்சாப் பாகிஸ்தானில் பிறந்தார். இவர் பஞ்சாபி தத் குடும்ப வழி வந்தவர். மைக்ரோசொப்ட் தலைமையகத்திற்கு சென்று பாகிஸ்தான் திரும்பிய பின் பல பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் நேர்காணல் கண்டன. மைக்ரோசொப்ட் மென்பொருள் அபிவிருத்தி துணைத் தலைவரான எஸ். சோமசேகர் என்பவர் தமது வலைப்பதிவில் அர்பாவை பற்றி குறிப்பிட்டுள்ளார்.[4] 2 ஆகஸ்ட் 2005 இல் பாத்திமா ஜின்னா அவர்களின் 113வது பிறந்த தினத்தில் பாகிஸ்தான் பிரதமர் சுகட் அஸிசினால் அர்பாவிற்கு பாத்திமா ஜின்னா தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.[6] 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டில் சலாம் பாகிஸ்தான் யூத் விருது பாகிஸ்தான் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.[7] அதே ஆண்டில் பிரய்ட் ஒப் பர்பாமன்ஸ் விருதும் பெற்றார்.[8] அர்பா பாகிஸ்தான் தொலைதொடர்பு நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் பணியாற்றியுள்ளார்.[9]

அங்கீகாரம்[தொகு]

அர்பா அமெரிக்கா சென்று பாகிஸ்தான் திரும்பிய பின் பல நேர்காணல்களை வழங்கினார். பல்வேறு சர்வதேச மாநாடுகள் மற்றும் உச்சி மாநாடுகளில் கலந்து கொண்டார். பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருந்து விருதுகளை பெற்றுக் கொண்டார். பாகிஸ்தானின் பிரய்ட் ஒப் பார்போமன்ஸ் விருதை பெற்ற இளவயதினர் இவராவார். 2006 ஆம் ஆண்டு மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் பார்சிலோனாவில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மன்றங்களில் பிரதிநிதித்துவம்[தொகு]

அர்பா பல்வேறு சர்வதேச மன்றங்களில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கின்றார். துபாயில் இரண்டு வாரகாலம் நடைபெற்ற பாகிஸ்தான் தகவல் தொழினுட்ப வல்லுனர்களின் மன்றத்திற்கு அழைக்கப்பட்டார். பாகிஸ்தான் தூதர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்பயணத்தின் போது அர்பாவிற்கு பல்வேறு விருதுகளும் மடிகணனி உட்பட பல பரிசுகளும் வழங்கப்பட்டன.[10] 2006 ஆமர ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற டெக்-எட் வல்லுனர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அர்பாவிற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. இம் மாநாட்டில் 5000 பேர் கலந்து கொண்டனர்.[8] அவர்களில் இவர் மட்டுமே பாகிஸ்தானியர்.[11]

சாதனைகள்[தொகு]

 • தனது ஒன்பதாவது வயதில் மைக்ரோசொப்ட் தொழில்முறை சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
 • பில்கேட்ஸினால் மைக்ரோசொப்ட் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார்.
 • பிரய்ட் ஒப் பார்போமன்ஸ் விருதை பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கி கௌரவித்தது.
 • 2 ஆகஸ்ட் 2005 இல் துபாய் பிளயிங் கிளப் இனால் விமான சான்றிதழ் வழங்கப்பட்டது. இச் சான்றிதழை இள வயதில் பெற்றவர் இவரே.
 • 113வது பாத்திமா ஜின்னாவின் பிறந்த தினத்தில் பாத்திமா ஜின்னா தங்கப்பதக்கம் பாகிஸ்தான் பிரதமரால் வழங்கப்பட்டது.
 • 2005 இல் சலாம் பாகிஸ்தான் யூத் விருது பாகிஸ்தான் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.
 • தமது துறைகளில் சிறப்பாக செயற்படுபவர்களுக்கு வழங்கப்படும் சிவில் விருது வழங்கப்பட்டது.
 • 2010 இல் பாகிஸ்தான் தொலைதொடர்பு நிறுவனத்தில் 3ஜி வயர்லெஸ் போர்ட்பென்ட் சேவையின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.

இறப்பு[தொகு]

அர்பா 2011 ஆம் ஆண்டில் தனது 16வது வயதில் லாகூர் கிராமர் பாடசாலை பாரகன் வளாகத்தில் உயர் தரத்தில் இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தார்.

22 திசம்பர் 2011 இல் வலிப்புத் தாக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதனால் இவரது மூளை பாதிப்புக்குள்ளானது. லாகூரின் கம்பய்ன்ட் மிலிட்டரி வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.[3]

9 ஜனவரி 2012 இல் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் அர்பாவின் பெற்றோர்களையும் வைத்தியர்களையும் தொடர்பு கொண்டார். சர்வதேச மருத்திவர்களின் சிறப்பு குழுவொன்று உள்ளூர் மருத்துவர்களுடன் தொலை தொடர்பில் இருந்து நோயறிதல் மற்றும் சிகிச்சையில் உதவினர்.[12] உள்ளூர் மருத்துவர்கள் அர்பாவின் சிக்கலான உடல் நிலை காரணமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றும் விருப்பத்தை நிராகரித்தனர். பில்கேட்ஸ் அர்பாவின் சிகிச்சையின் செலவை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.[13]

13 ஜனவரி 2012 இல் அர்காவின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் தென்பட்டது.

14 ஜனவரி 2012 இல் அவரது 16வது வயதில் மரணமானார். மறுநாள் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. பஞ்சாப் முதலமைச்சர் சஹ்பாஸ் சரீப் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். சாக் இல. 4ஜேபி ராம் திவாலி பைசலாபாத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.[3]

அர்பா டெக்னாலஜி பார்க்[தொகு]

லாகூரில் அமைந்துள்ள அர்பா டெக்னாலஜி பார்க் பாகிஸ்தானின் மிகப் பெரிய தொழினுட்ப தொலைத்தொடர்பு நிறுவனமாகும். சர்வதேச தரம், வசதிகளைக் கொண்டது. லாகூர் டெக்னாலஜி பார்க் என்ற பெயரில் கட்டப்பட்ட இந் நிறுவனம் 15 ஜனவரி 2012 இல் அர்பாவின் ஞாபகார்த்தமாக அவரது சாதனைகளை நினைவு கூறும் முகமாக அர்பா டெக்னாலஜி பார்க் ஆக பெயர் மாற்றம் செய்யப்படுவதாக பஞ்சாப் முதலமைச்சர் சஹபாஸ் சரீப் அறிவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. https://tribune.com.pk/story/1485803/15-noteworthy-guinness-world-records-that-make-pakistan-proud/ Tribune.com.pk பார்த்தநாள் 22 சூலை 2018
 2. https://web.archive.org/web/20120116101251/http://thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=87791&Cat=2 பார்த்தநாள் 16-01-2012
 3. 3.0 3.1 3.2 http://news.cnet.com/9-year-old-earns-accolade-as-Microsoft-pro/2100-1012_3-5793614.html?type=pt&part=inv&tag=feed&subj=news பார்த்தநாள் 14-01-2012
 4. 4.0 4.1 http://www.geekwire.com/2011/arfa பார்த்தநாள் 15 ஜனவரி 2012
 5. http://www.pakblog.net/2011/12/arfa-karim-randhawa-young-it-child.html பார்த்தநாள் 2-9-2014
 6. http://www.seattlepi.com/business/232514_msftarfa14.html பார்த்ததாள் 2-9-2014
 7. http://www.seattlepi.com/business/232514_msftarfa14.html
 8. 8.0 8.1 http://archives.dawn.com/2005/08/03/nat4.htm DAWN. 3-8-2005 பார்த்தநாள் 15-1-2012
 9. http://www.dawn.com/news/688081/arfa-karim-passes-away-in-lahore
 10. http://www.dailytimes.com.pk/default.asp?page=2010%5C01%5C24%5Cstory_24-1-2010_pg5_15
 11. https://web.archive.org/web/20120118190059/http://archives.dawn.com/weekly/science/archive/050827/science11.htm
 12. https://web.archive.org/web/20120116102049/http://samaa.tv/newsdetail.aspx?ID=41610&CID=1
 13. http://www.dawn.com/news/688277/arfa-loses-fight-against-epilepsy

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்பா_கரீம்&oldid=3363224" இலிருந்து மீள்விக்கப்பட்டது