அர்பாயின் யாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்பாயின் யாத்திரை
கர்பாலாவில் உள்ள இமாம் ஹுசைன் பள்ளிவாசலைச் சுற்றி இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அர்பாயின் போது பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு கூடுகின்றனர்.
நிகழ்நிலைநடைமுறையில் உள்ளது
வகைமதக் கூட்டம்
நாட்கள்அர்பாயின், சஃபரின் 20வது நாள்
காலப்பகுதிவருடமொருமுறை
நாடுஈராக்கு
பங்கேற்பவர்கள்சியா இசுலாம்
கொள்ளளவு70 லட்சம் பேருக்கு மேல்

அர்பாயின் யாத்திரை (Arba'een Pilgrimage) அல்லது அர்பாயின் நடை (Arba'een Walk) என்பது உலகின் மிகப்பெரிய வருடாந்திர பொதுக் கூட்டமாகும். இது ஈராக்கிலுள்ள , கர்பாலாவில் ஆஷுரா தினத்தைத் தொடர்ந்து 40 நாள் துக்கக் காலத்தின் முடிவில், முகமது நபியின் பேரனும் மூன்றாவது சியா முஸ்லிம் இமாமுமான ஹுசைன் இபின் அலியின் தியாகத்தை நினைவுகூரும் மத சடங்காகும். அவர் அனைத்து கலாச்சார எல்லைகளையும் தாண்டி, உலகளாவிய சுதந்திரம், இரக்கம் மற்றும் சமூக நீதியின் சின்னமாக இருப்பதாக நம்பப்படுகிறது. அர்பாயின் அல்லது தியாகத்தின் நாற்பதாவது நாளை எதிர்பார்த்து, யாத்ரீகர்கள் கர்பலாவிற்கு கால்நடையாகச் செல்வர். உமையா கலீபகத்தின் முதல் கலிபாவான முதலாம் முஆவியா 680-இல் மறைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது மகன் யசீதினுடனான இராணுவத்தால் கர்பலா எனுமிடத்தில் 10 அக்டோபர் 680-இல் ஹுசைனும், அவரது பெரும்பாலான உறவினர்களும், தோழர்களும் கொல்லப்பட்டனர்.[1][2] ஹுசைனின் நினைவை போற்றும் வகையில் சியா பிரிவு இசுலாமியர்கள் ஆண்டு தோறும் முகரம் மாதத்தின் பத்தாவது நாளான ஆஷூரா நாளை தியாகத் திருநாளாக கொண்டாடுகிறார்கள்.

வருடாந்திர யாத்திரையில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 2016இல் 25 மில்லியன் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தது. யாத்திரை செல்லும் வழிகளில், தன்னார்வலர்களால் உணவு, தங்குமிடம் மற்றும் இதர சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. சில யாத்ரீகர்கள் பல நகரங்களிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர்கள் (310 மைல்) தொலைவில் உள்ள பசுரா வரை சாலை வழியாகச் செல்கிறார்கள்.

இந்த சடங்கு "சியா பிரிவினரின் நம்பிக்கையாகவும், ஒற்றுமையின் மிகவும் சக்திவாய்ந்த காட்சி" எனவும் விவரிக்கப்பட்டுள்ளது.[3] இருப்பினும் பிரதான ஊடகங்கள் இந்த நிகழ்வை புறக்கணிப்பதாக ஈரானும் சியா முஸ்லிம்களும் விமர்சிக்கின்றனர்.

2015 அர்பாயின் புனித யாத்திரையில் பங்கேற்ற தாயும் மகளும்
நஜாப் மற்றும் கர்பலா இடையே நடந்த அர்பாயின் யாத்திரையில் பங்கேற்ற ஊனமுற்ற ஆண்கள்

ஈரானிய ஊடகங்கள், அதிகாரிகள், மத பிரமுகர்கள், குடிமக்கள் போன்றோர் இந்த யாத்திரையின் பெரிய அளவிலான மற்றும் புவிசார் அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் இருந்தபோதிலும், மேற்கத்திய ஊடகங்கள் இதை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். [4] [5] [6] [7] ஹஜ்ஜை விட பெரியதாக இருந்தாலும், மெக்காவுக்கான மிக முக்கியமான முஸ்லிம் புனித யாத்திரையாக, அர்பாயின் யாத்திரை என்பது உலகம் அறியாததாகவே உள்ளது. [8]

படவரிசை[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Piggott, Mark. "20 Million Shia Muslims Brave Isis by Making Pilgrimage to Karbala for Arbaeen". IBtimes இம் மூலத்தில் இருந்து 24 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924032349/http://www.ibtimes.co.uk/20-million-shia-muslims-brave-isis-by-making-pilgrimage-karbala-arbaeen-1476618. 
  2. "World's Biggest Pilgrimage". huffingtonpost.co.uk இம் மூலத்தில் இருந்து 26 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141126232025/http://www.huffingtonpost.co.uk/sayed-mahdi-almodarresi/arbaeen-pilgrimage_b_6203756.html. 
  3. "Free at last from Isis, millions of Muslims stage the greatest religious march in the world" (in en-GB). The Independent. 9 November 2017. https://www.independent.co.uk/news/world/middle-east/arbaeen-pilgrimage-kerbala-shia-isis-defeat-muslims-thousands-killed-middle-east-iraq-najaf-a8046621.html. "Free at last from Isis, millions of Muslims stage the greatest religious march in the world". The Independent. 9 November 2017. Retrieved 10 November 2017.
  4. YJC, خبرگزاری باشگاه خبرنگاران | آخرین اخبار ایران و جهان |. "سانسور رسانه های غربی در مقابل بزرگترین پیاده روی جهان". خبرگزاری باشگاه خبرنگاران | آخرین اخبار ایران و جهان | YJC (in பெர்ஷியன்). பார்க்கப்பட்ட நாள் 9 November 2017.
  5. YJC, خبرگزاری باشگاه خبرنگاران | آخرین اخبار ایران و جهان |. "واکنش کاربران به سانسور راهپیمایی اربعین در رسانه های غربی +تصاویر". خبرگزاری باشگاه خبرنگاران | آخرین اخبار ایران و جهان | YJC (in பெர்ஷியன்). பார்க்கப்பட்ட நாள் 9 November 2017.
  6. آقاپور, هدیه. "روزنامه كيهان96/8/16: پيام زائران اربعين در سكوت رسانه هاي استكبار". www.magiran.com. பார்க்கப்பட்ட நாள் 9 November 2017.
  7. "No one covered the Muslim anti-Isis march that took place in London last week" (in en-GB). The Independent. 9 December 2015. https://www.independent.co.uk/news/uk/home-news/muslim-anti-isis-march-not-covered-by-mainstream-media-outlets-say-organisers-a6765976.html. 
  8. "You probably haven't heard about this Muslim pilgrimage in defiance of Isis" (in en-GB). The Independent. 24 November 2016. https://www.independent.co.uk/news/world/middle-east/20-million-muslims-march-against-isis-arbaeen-pilgrimage-iraq-karbala-a7436561.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்பாயின்_யாத்திரை&oldid=3421211" இலிருந்து மீள்விக்கப்பட்டது