உள்ளடக்கத்துக்குச் செல்

அர்பாயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்பாயின்
கர்பாலாவில் உள்ள இமாம் ஹுசைன் பள்ளிவாசலைச் சுற்றி லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அர்பாயின் போது பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு கூடுகின்றனர்.
கடைபிடிப்போர்சியா இசுலாம் பிரிவினர்
வகைசியா இசுலாம், அலெவி, சூபித்துவம்
முக்கியத்துவம்ஆஷுரா தினத்திற்கு பிறகு 40வது நாட்கள் கழித்து
அனுசரிப்புகள்இமாம் ஹுசைன் கல்லறைக்குச் செல்லுதல்
நாள்20 சஃபர் 8 அக்டோபர்
நிகழ்வுஒவ்வொரு இசுலாமிய வருடத்திற்கும் ஒருமுறை
இமாம் உசைன் பள்ளிவாசல், கர்பலா, ஈராக்
இமாம் ஹுசைன் பள்ளிவாசலில், அல் ஹுசைனின் கல்லறை, கர்பலா

அர்பாயின் (Arbaʽein) செகெல்லோம் (Chehellom) என்பது சியா இசுலாம் பிரிவில் கடைபிடிக்கும் ஓர் மத அனுசரிப்பு ஆகும். இது முகர்ரம் மாதத்தின் 10 வது நாளில் முகமதுவின் பேரன் அல்-ஹுசைன் இபின் அலியின் தியாகத்தை நினைவுகூருகிறது. 10 அக்டோபர் 680-இல் கர்பலா எனுமிடத்தில் நடந்த போரில் யசீதின் படைகளால் கொல்லப்பட்டார். ஹுசைனின் நினைவை போற்றும் வகையில் சியா பிரிவு இசுலாமியர்கள் ஆண்டு தோறும் முகரம் மாதத்தின் பத்தாவது நாளான ஆஷூரா நாளை தியாகத் திருநாளாக கொண்டாடுகிறார்கள். கர்பலா நகரத்தில் இமாம் ஹுசைன் கொல்லப்பட்ட இடத்தில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.[1]

அர்பாயின் அல்லது நாற்பதாவது நாள் என்பது பல முஸ்லிம் மரபுகளில் குடும்ப உறுப்பினர் அல்லது நேசிப்பவரின் மரணத்திற்குப் பிறகு துக்கத்தின் வழக்கமான அனுசரிப்பாகும். அர்பாயின் என்பது உலகின் மிகப்பெரிய வருடாந்திர யாத்திரையாகும். இதில் 45 மில்லியன் மக்கள் ஈராக்கிலுள்ள கர்பலா நகருக்கு செல்கின்றனர்.[2] [3] [4] [5]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Halm (2004), pp. 15 and 16
  2. "El Paso Inc". El Paso Inc. Archived from the original on 10 July 2011. பார்க்கப்பட்ட நாள் 30 June 2010.
  3. uberVU – social comments (5 February 2010). "Friday: 46 Iraqis, 1 Syrian Killed; 169 Iraqis Wounded - Antiwar.com". Original.antiwar.com. பார்க்கப்பட்ட நாள் 30 June 2010.
  4. Aljazeera. "alJazeera Magazine – 41 Martyrs as More than Million People Mark 'Arbaeen' in Holy Karbala". Aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 30 June 2010.
  5. "Powerful Explosions Kill More Than 40 Shi'ite Pilgrims in Karbala | Middle East | English". .voanews.com. 5 February 2010. பார்க்கப்பட்ட நாள் 30 June 2010.

மேற்கோள்கள்[தொகு]

நூற்கள்
கலைக்களஞ்சியங்கள்
வலைப்பூ

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்பாயின்&oldid=3937488" இலிருந்து மீள்விக்கப்பட்டது