அர்பல்லப் கண்காட்சி
சிறீ பாபா அர்பல்லப் சங்கீத் சம்மேளன் (Shree Baba Harballabh Sangeet Sammelan) என்பது இந்தியப் பாரம்பரிய இசைத் திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் மாதம் கடைசி வாரத்தில் ஜலந்தர் நகரில் நடைபெறுகிறது.
1875ஆம் ஆண்டு முதன்முதலில் ஜலந்தரில் உள்ள சித் பீத் சிறீ தேவி தலாப் மந்தீரில் நடைபெறும் இந்த விழா, வட இந்தியா இந்துஸ்தானி இசைத் துறவியாகக் கருதப்படும் பாபா அர்பல்லப் பெயரால் அழைக்கப்படுகிறது.[1][2]
மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் 15-20 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியா மற்றும் பாக்கித்தானைச் சேர்ந்த இந்துஸ்தானிய இசையின் முக்கிய கலைஞர்கள் திருவிழாவில் ஒரு முறையேனும் கலந்துள்ளனர். இதனால் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான இசை ஆர்வலர்களை ஈர்க்கிறது.[3]
இந்நிகழ்ச்சியில் பங்கேற்அ நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவல்லை. விழாவை ஏற்பாடு செய்வதற்கான பணம் பொது மற்றும் தனியாரிடமிருது நன்கொடைகள் மற்றும் மானியமாகப் பெறப்படுகிறது.
சிறீரீ பாபா அர்வல்லப் இசைப் போட்டி
[தொகு]இந்துஸ்தானி பாரம்பரிய இசைத் துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களைப் பாராட்டவும், அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும், பங்கேற்பாளரிகளிடமுள்ள சிறந்ததை வெளிக்கொணரவும், ஆண்டுதோறும் சங்கீத சம்மேளனத்திற்கு முன்னதாக 3 நாட்களுக்கு இந்துஸ்தானி இசையில் போட்டியை மகாசபை நடத்துகிறது.
இந்தப் போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெறுகின்றது. இவை: பாடுதல், வாத்தியம் (தாளம் அல்லாதது) மற்றும் தாள இசைக்கருவி இசைத்தல் (தாளம்). ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு வயது பிரிவுகள் உள்ளனர். இளையோர் (யுவா வர்க் - 13 முதல் 19 வயது வரை) மற்றும் மூத்தவர்கள் (வரிஷ்த் வர்க் - 19 முதல் 25 வரை. ஆண்டுகள்). ஒவ்வொரு பிரிவிலும் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது என மூன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.
மூத்த வயதுப் பிரிவைச் சேர்ந்த வெற்றியாளர்கள், அடுத்த இசைநிகழ்ச்சியின் போது 'நிகழ்ச்சிக் கலைஞர்களாக' கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சிறீ பாபா அர்பல்லப் சங்கீத உற்சவம்
[தொகு]வசந்த உற்சவம், மல்ஹர் உற்சவம் மற்றும் கேமந்த் உற்சவம் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகத்து மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த உத்சவம் நிகழ்ச்சிகளின் போது மாலை வேளையில் 4-5 மணி நேர இசை நிகழ்ச்சிகள் இரண்டு அல்லது மூன்று கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
உற்சவங்களின் போது, இந்துஸ்தானி பாரம்பரிய இசைத் துறையில் வளரும் கலைஞர்களுக்கு இசை வாய்ப்புகளை வழங்க முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.bharatonline.com/punjab/fairs/harballabh-sangeet-sammelan.html
- ↑ Kapuria, Radha (2017-12-06). "Music and its Many Memories: Complicating 1947 for the Punjab". Springer International Publishing. pp. 17–42. Retrieved 2023-03-04.
- ↑ Jairazbhoy, Nazir A.; Mehta, R. C. (1975-05). "Sangeet Kala Vihar". Ethnomusicology. p. 316. doi:10.2307/850367. Retrieved 2023-03-04.
{{cite web}}
: Check date values in:|date=
(help)