உள்ளடக்கத்துக்குச் செல்

அர்னம் சிங் சைனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்னம் சிங் சைனி
பிறப்புபத்தேகர் கிராமம், ஹோஷியார்பூர், பஞ்சாப்
இறப்பு16 மார்ச் 1917
லாகூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அமைப்பு(கள்)கதர் கட்சி
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம், கதர் கலகம்

அர்னம் சிங் சைனி (Harnam Singh Saini) (மார்ச் 16, 1917 இல் இறந்தார்) கதர் சதித்திட்டத்தில் பங்கேற்ற ஒரு குறிப்பிடத்தக்க இந்திய புரட்சியாளராவார். பிரித்தானியப் பேரரசிற்கு எதிரான கிளர்ச்சியைத் தூண்டுவதற்காக பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தால் மூன்றாவது லாகூர் சதி வழக்கு விசாரணையின் கீழ் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு1917 மார்ச் 16 அன்று லாகூரில் தூக்கிலிடப்பட்டார். [1] [2]

பின்னணி

[தொகு]

கோபால் சைனி என்பவரின் மகனான இவர், ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள பத்தேகர் கிராமத்தில் வசித்து வந்தார். [3]

கதர் சதியில் ஈடுபாடு

[தொகு]
தேசியவாத மற்றும் சோசலிச இலக்கியங்களின் ஆரம்பகால கதரியக்கத் தொகுப்பான கதர் தி குஞ்ச் 1913 இல் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.
கதர் செய்தித்தாள் (உருது) தொகுதி. 1, எண் 22, 24 மார்ச் 1914

இவர், கதர் சதித்திட்டத்தின் மூலமாக இருந்த கனடா மற்றும் அமெரிக்காவிற்கு சென்றார். இவர் கதர் கட்சியின் தீவிர உறுப்பினராகி கதர் கலகத்தில் பங்கேற்றார்.

கைது

[தொகு]

இடச்சு காலனியான படேவியாவில் இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதோ அல்லது இவர் பயணித்த மேவரிக் கப்பலில் உடன் பயணம் செய்தவர்கள் மீதோ எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. இதையும் மீறி படேவியாவின் இடச்சு அதிகாரிகள் பிரித்தானியர்களின் கோரிக்கையை ஏற்று சிங்கப்பூர் போலீசாரிடம் இவரை ஒப்படைத்தனர். இவர் கொல்கத்தாவுக்கும் பின்னர் லாகூருக்கும் கொண்டு செல்லப்பட்டார். [1] [2]

விசாரணையும், மரணதண்டனையும்

[தொகு]

லாகூரில் மூன்றாவது சதி வழக்கின் கீழ் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பாயத்தில் எல்லிஸ், மேஜர் ஃப்ரைசெல் மற்றும் ராவ் பகதூர் கோபால் தாஸ் பண்டாரி ஆகியோர் இருந்தனர். இந்த வழக்கு லாகூர் மத்திய சிறையில் நடைபெற்றது. [2]

விசாரணை நவம்பர் 8, 1916 இல் தொடங்கி 5 சனவரி 1917 இல் முடிந்தது. இவரும், குத்பூரைச் சேர்ந்த பாய் பல்வந்த் சிங், ஃபதேஹ்கரின் பாபு ராம், ஜாக்ரானைச் சேர்ந்த ஹபீஸ் அப்துல்லா மற்றும் சங்கோவாலின் டாக்டர் அருர் சிங் ஆகிய நான்கு கதர் புரட்சியாளர்களுடன் பிரித்தானியப் பேரரசருக்கு எதிராக போர் தொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரான கரார் சிங் நவன் சந்த், ஃபெட்டேகாரின் ஃபசல் தின் மற்றும் ஜந்தியாலாவைச் சேர்ந்த முன்ஷா சிங் துகி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. [2] [3]

இவர், தனது நான்கு கதர் கட்சி தோழர்களுடன், மார்ச் 16, 1917 இல் தூக்கிலிடப்பட்டார். [1] இவர்களது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. [2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "..the second martyr of march 16 was Harnam Singh Saini of Fatehgarh, Hoshiarpur. He was arrested from Battavia by the Dutch." A day to remember Lahore's martyrs, 16 Mar 2002, KS Dhaliwal, Time of India
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Punjab Peasant in Freedom Struggle (Volume II), pp 71-72, Master Hari Singh, Published by People's Pub. House, 1984
  3. 3.0 3.1 An account of the Ghadr conspiracy, 1913-1915, pp i, pp 161, F C Isemonger; J Slattery ,Publisher: Meerut : Archana Publ., 1998.

பிற ஆதாரங்கள்

[தொகு]
  • Ghadar Party Da Itihas, Desh Bhagat Yaadgar Hall Committee, Jullundur
  • Unpublished Account of Ghadar Party Conspiracy Cases, 1914-1918 by Isemonger and Slattery
  • Sir Michael O'Dwyer, India as I knew it, London, 1925
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்னம்_சிங்_சைனி&oldid=3045883" இலிருந்து மீள்விக்கப்பட்டது