அர்த்த மண்டபம்
Appearance
அர்த்த மண்டபம் என்பது இந்து சமயக் கோவில்களில் கருவறைக்கு முன்னுள்ள மண்டபமாகும். [1] இந்த மண்டபத்திற்கு அடுத்து உள்ளதை முக மண்டபம் என்றும் மகா மண்டபம் என்றும் அழைக்கின்றனர்.
தமிழகத்திலுள்ள கோவில்களில் இந்த மண்டபம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பல பிரபலமான கோவில்களில் கட்டண தரிசன மற்றும் அர்ச்சனை செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பக்தர்கள் இந்த மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த மண்டபமும் கோவில் கருவறைப் போல சிறியதாகவே அமைந்துள்ளது.