உள்ளடக்கத்துக்குச் செல்

அர்ஜுன் ராம் மேக்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ஜுன் ராம் மேக்வால்
சட்டம் மற்றும் நீதி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 மே 2023
நாடாளுமன்ற விவகார துறை மாநில அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2019
முன்னையவர்பாபுல் சுப்ரியோ
கனரகத் தொழில்கள் & பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சர்
பதவியில்
31 மே 2019 – 24 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சஞ்சீவ் பல்யாண்
பின்னவர்ரத்தன் லால் கட்டாரியா
நிதியமைச்சர்
பதவியில்
5 சூலை 2016 – 3 செப்டம்பர் 2017
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஜெயந்த் சின்ஹா
பின்னவர்சிவ் பிரதாப் சுக்லா
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
முன்னையவர்தர்மேந்திரா
தொகுதிபிகானேர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 திசம்பர் 1954 (1954-12-20) (அகவை 69)
பிகானேர், இராஜஸ்தான், இந்தியாஇந்தியா
வாழிடம்(s)பிகானேர், இராஜஸ்தான், இந்தியா
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்அதிகாரப்பூர்வ வலைதளம்

அர்ஜுன் ராம் மேக்வா (Arjun Ram Meghwal, பிறப்பு: 20 திசம்பர், 1954)[1] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 18 மே 2023 அன்று கிரண் ரிஜிஜூக்கு பதிலாக சட்டம் மற்றும் நீதி அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார்.[2][3]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இவர் 20 திசம்பர், 1954 ஆம் ஆண்டு இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் என்னும் இடத்தில் பிறந்தார். 1977 ஆம் ஆண்டில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றதும், 1979 ஆம் ஆண்டில் வழக்கமான மாணவராக கலைப் பட்டப்படிப்பை முடித்ததும், 1982 ஆம் ஆண்டில், இவர் ஆர்ஏஎஸ் தேர்வுகளுக்குத் தகுதி பெற்று ராஜஸ்தான் உத்யோக் சேவாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 2009 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், பிகானேர் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] பின்னர் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், பிகானேர் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மக்களவை சபாநாயகர் இவரை மக்களவை மன்றக் குழுவின் தலைவராக நியமித்தார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அஸ்வினி குமார் சௌபே". Archived from the original on 2019-08-26. பார்க்கப்பட்ட நாள் 2019-08-26.
  2. அர்ஜூன்ராம் மேவால்
  3. Rijiju loses law ministry, Arjun Ram Meghwal to replace him
  4. "Profile of Arjun Ram Meghwal". Nationsroot Inc. Archived from the original on 2019-08-26. பார்க்கப்பட்ட நாள் 2019-08-26.
  5. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்_ராம்_மேக்வால்&oldid=4059088" இலிருந்து மீள்விக்கப்பட்டது