உள்ளடக்கத்துக்குச் செல்

அர்ஜுன் டெண்டுல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ஜுன் டெண்டுல்கர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அர்ஜுன் டெண்டுல்கர்
பிறப்பு24 செப்டம்பர் 1999 (1999-09-24) (அகவை 25)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
உயரம்6 அ்டி 3 in[1]
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவிரைவு வீச்சு
பங்குபந்துவீச்சாளர்
உறவினர்கள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2020/21மும்பை
2021–தற்போது வரைமும்பை இந்தியன்ஸ்
கோவா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த.து ப.அ.து இ20
ஆட்டங்கள் 17 15 24
ஓட்டங்கள் 532 62 119
மட்டையாட்ட சராசரி 23.13 15.50 13.22
100கள்/50கள் 1/2 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 120 16 47
வீசிய பந்துகள் 2,243 744 464
வீழ்த்தல்கள் 37 21 27
பந்துவீச்சு சராசரி 33.51 30.80 25.07
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/25 4/30 4/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 4/– 1/–
மூலம்: ESPNcricinfo, 29 நவம்பர் 2024

அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar பிறப்பு: செப்டம்பர் 24, 1999) என்பவர் ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர், மேனாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனாவார். இடது கை விரைவுப் பந்து வீச்சாளரும் இடது கை மட்டையாளாருமான இவர், உள்ளூர்த் துடுப்பாட்டப் போட்டிகளில் தற்போது கோவா அணிக்காகவும், முன்னர் மும்பை அணிக்காகவும் விளையாடியுள்ளார்.[2][3] .

2021 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றார். 2023 ஆம் ஆண்டில் தனது முதல் போட்டியில் விளையாடினார்.[4][5]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்

[தொகு]

இவர், 1999 ஆம் ஆண்டு மகாராட்டிராவின் மும்பையில் அஞ்சலி டெண்டுல்கர்- மேனாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு சாரா டெண்டுல்கர் என்ற ஒரு அக்காவும் உள்ளார்.[6]

துடுப்பாட்ட வாழ்க்கை

[தொகு]

2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக அறிமுகமானார்.[7] சனவரி 15, 2021 இல் அரியானாவுக்கு எதிரான 2020–21 சையத் முஷ்டாக் அலிக் கோப்பையில் மும்பை அணிக்காக இ20 போட்டியில் அறிமுகமானார்.[8] அந்தப் போட்டியில் மூன்று நிறைவுகளில் 34 ஓட்டங்களில் 1 இலக்கினைக் கைப்பற்றினார்.[2]

ஐபிஎல்

[தொகு]

2021 ஐபிஎல்லுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது.[9][10] செப்டம்பர் 2021 இல், முதல் முறையாக மும்பை அணியில் தேர்வானார். மும்பையின் 22 பேர் கொண்ட சையத் முஷ்டாக் அலிக் கோப்பைக்காக அணியில் சேர்க்கப்பட்டார்.[11] பின்னர், காயம் காரணமாக 2021 ஐபிஎல்லில் இருந்து விலக்கப்பட்டார்.[12] ஆகத்து 2022 இல் கோவா அணியில் விளையாடுவதற்காக மும்பை அணியில் இருந்து விலகினார். 2022-23 ஆம் ஆண்டிற்கான சையது முஷ்டாக் அலிக் கோப்பையில் விளையாடினார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Arjun Tendulkar makes it to India U-19 team for Sri Lanka tourism as a tourist". Economic Times. 7 June 2018. https://economictimes.indiatimes.com/news/sports/arjun-tendulkar-makes-it-to-india-u-19-team-for-sri-lanka-tour/articleshow/64497781.cms. "Standing at 6ft 3inch, the 18 year old Arjun is a left arm fast bowler and a handy lower middle order batsman." 
  2. 2.0 2.1 "Arjun Tendulkar returns 1-34 in unremarkable senior Mumbai debut". ESPNcricinfo. Retrieved 15 January 2021.
  3. 3.0 3.1 "Arjun Tendulkar leaves Mumbai team to join Goa, he was 'UNHAPPY' due to THIS". Zee News (in ஆங்கிலம்). Retrieved 14 August 2022.
  4. "IPL Auction 2021 Players list update: Mumbai Indians buy Arjun Tendulkar for base price of Rs 20 lakh" (in en). https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/ipl-auction-2021-live-updates/liveblog/81082586.cms. 
  5. "Sachin Tendulkar's son Arjun makes his IPL debut for Mumbai Indians against Kolkata Knight Riders". India Today (in ஆங்கிலம்). 2023-04-16. Retrieved 2024-11-07.
  6. "My career wouldn't have been the same without Anjali's sacrifice: Sachin Tendulkar". India Today. 21 December 2019. Retrieved 27 September 2022. Sachin Tendulkar revealed his wife Anjali decided to sacrifice her fledgling career as a pediatrician to make sure the batting great found success in the sport. Sachin Tendulkar married his girlfriend Anjali in 1995, just 6 years after making his international debut.
  7. "IPL 2020: Fans curious after spotting Arjun Tendulkar with Mumbai Indians players in UAE". India Today (in ஆங்கிலம்). 15 September 2020. Retrieved 6 September 2021.
  8. "Elite, Group E, Mumbai, Jan 15 2021, Syed Mushtaq Ali Trophy". ESPNcricinfo. Retrieved 15 January 2021.
  9. "IPL 2021 auction: The list of sold and unsold players". ESPNcricinfo. Retrieved 18 February 2021.
  10. "We picked Arjun Tendulkar 'purely on a skill basis' - Mahela Jayawardene". ESPNcricinfo. Retrieved 19 February 2021.
  11. "Arjun Tendulkar picked in Mumbai's senior squad for 1st time, set to feature in Syed Mushtaq Ali Trophy". India Today (in ஆங்கிலம்). 2 January 2021. Retrieved 6 September 2021.
  12. "Mumbai Indians rope in Simarjeet Singh as Arjun Tendulkar's replacement". ESPNcricinfo. Retrieved 29 September 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்_டெண்டுல்கர்&oldid=4245867" இலிருந்து மீள்விக்கப்பட்டது