உள்ளடக்கத்துக்குச் செல்

அர்ஜுன் அப்பாதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொறன்றோவில் உள்ள யார்க் பலகலையில் அர்ஜுன் அப்பாதுரை, (2009)

அர்ஜுன் அப்பாதுரை, உலகமயமாக்கல் மற்றும் நவீனம் குறித்து ஆராயும் தற்கால ஆய்வாளர். இவர் 1949இல் பிறந்து, தற்சமயம் நியூ யார்க்கில் வாழ்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அர்ஜுன் அப்பாதுரை இந்தியாவிலுள்ள மும்பையில் ஒரு தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவிற்கு வரும் முன்னர் ஆரம்ப கால கல்வியை இந்தியாவிலுள்ள மும்பையிலேயே கற்றார்.

தொழில்[தொகு]

இவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். சில காலத்திற்கு பின் யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவர், தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஊடகம், கலாச்சாரம் மற்றும் தொடர்பாடல் துறையில் உறுப்பினராயுள்ளார்.

இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலின் தேரோட்டத்தை மையமாகக் கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்_அப்பாதுரை&oldid=3419706" இலிருந்து மீள்விக்கப்பட்டது