அர்ச்சுனன் (யானை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ச்சுனன்
அர்ச்சுனன் - மைசூர் தசராவில் தங்க அம்பாரியை தாங்கிச் சென்ற முன்னணி யானை!
இனம்ஆசிய யானை
பால்ஆண்
பிறப்புசுமார். 1960 (அகவை 63–64)
நாடுஇந்தியா
Occupationதங்க அம்பாரியை சுமந்து செல்வது
செயற்பட்ட ஆண்டுகள்2012–2019
Predecessorபலராமன்
Successorஅபிமன்யு
நிறை6,040 கி
உயரம்2.95 m (9 அடி 8 அங்)
Named afterஅருச்சுனன்

அர்ச்சுனன் (Arjuna) (பிறப்பு 1960கள்) ஒரு ஆசிய யானையாகும். இது 2012 முதல் 2019 வரை மைசூர் தசராவில் தங்க அம்பாரியை தாங்கிச் சென்ற முன்னணி யானையாக இருந்தது. இந்த யானைக்கு இந்து காவியமான மகாபாரதத்திலிருந்து பாண்டவ சகோதரர்களில் ஒருவரான அருச்சுனனின் பெயரிடப்பட்டது.

மைசூர் தசரா[தொகு]

அர்ச்சுனன் 1968இல் கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காகனகோட் காடுகளிலிருந்து பிடிபட்டது. பயிற்சிக்குப் பிறகு, 1990களில் மைசூரில் நடந்த தசரா திருவிழாவின் போது ஊர்வலங்களில் இது வழக்கமாக சென்றது. தசரா பண்டிகைக்கு முன்னதாக அப்போதைய தங்க அம்பாரியை சுமந்து சென்ற துரோணருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட பிறகு, அர்ச்சுனன் 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமக்க ஆரம்பித்தது. இந்த அம்பாரியில் இந்து கடவுளான சாமுண்டீசுவரி சிலை வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.[1]

விபத்து[தொகு]

1996ஆம் ஆண்டில், பகதூர் என்ற மற்றொரு தசரா யானையுடன், கரஞ்சி ஏரிக்கு குளிப்பதற்கு அழைத்துச் சென்றபோது பகதூர் யானையின் பாகன் அன்னையா என்பவர் மதம் பிடித்த அர்ச்சுனனால் இழுத்து கீழே தள்ளப்பட்டு மிதிக்கப்பட்டார். இது ஒரு விபத்து என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அர்ச்சுனன் ஏற்கனவே மோசமான மனநிலையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உடனடியாக நாகர்ஹோளே தேசியப் பூங்காவில் தனிமை படுத்தப்பட்டது. பின்னர், தசரா முகாமிற்கு அழைத்து வரப்பட்டு, 2001இல் பலராமன் என்ற யானையுடன் ஊர்வலத்தில் சென்றது.[1] 2012இல் விழாக்களுக்கான அம்பாரி சுமக்கும் யானையைத் தேர்ந்தெடுக்கும் போது, பலராமனை வென்று அர்ச்சுனன முன்னணி போட்டியாளரானது.[2] அம்பாரி சுமக்கும் யானையாக இதன் தேர்வு அக்டோபர் 2012இல் அமைப்பாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. [3]

ஓய்வு[தொகு]

அர்ச்சுனன் 2012 முதல் 2019 வரை தங்க அம்பாரியை எடுத்துச் சென்றது (7 ஆண்டுகள்). தற்போது 60 வயதிற்கு மேற்பட்ட யானைகளுக்கு ஓய்வு அளிப்பது குறித்த அரசாங்க உத்தரவின் பேரில் இது இப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டது. இந்த யானைக்குப் பிறகு தங்க அம்பாரியை சுமக்கும் பொறுப்பினை [4] அபிமன்யு என்ற யானை பெற்றது.[5]

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சுனன்_(யானை)&oldid=3320565" இலிருந்து மீள்விக்கப்பட்டது