அர்ச்சனா பார்கவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ச்சனா பார்கவா
தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநர் இந்திய ஐக்கிய வங்கி
பதவியில்
2013–2013
நிர்வாக இயக்குநர் கனரா வங்கி
பதவியில்
2011–2011

அர்ச்சனா பார்கவா (Archana Bhargava) யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக இயக்குனராக இருந்துள்ளார்.[1]

அர்ச்சனா பார்கவா, 2011 ம் ஆண்டில் இந்திய பொதுத்துறை வங்கியான, கனரா வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், 2013ம் ஆண்டில் யுனைடெட் வங்கியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி விருப்ப ஓய்வு பெற்றுள்ள இவர், தற்போது மத்திய அரசின் புலனாய்வு நிறுவனத்தினால் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு எதிரான வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் உள்ளது..[2]

வரலாறு[தொகு]

டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்களுக்கான கல்லூரியாக மிராண்டா ஹவுஸில், உயிர்வேதியியல் படிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதுகலைப் பட்டதாரியான பார்கவா, பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாண்மைப் பயிற்சியாளராக 1977 இல் சேர்ந்து, தனது வங்கிப்பணியைத் தொடங்கியுள்ளார். அங்கேயே, பெரிய நிறுவனக் கடன், முன்னுரிமை துறை, திட்டமிடல் மற்றும் மேம்பாடு மற்றும் நிதி உள்ளடக்கம் போன்ற பல்வேறு துறைகளின் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

ஏப்ரல் 2011 ம் ஆண்டில், கனரா வங்கியின் நிர்வாக இயக்குநரான பார்கவா, அவ்வங்கியின் சர்வதேச வங்கியியல், பெரிய நிறுவனக் கடன், முன்னுரிமைத் துறை, இடர் மேலாண்மை, ஆய்வு மற்றும் தணிக்கை, பொது நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கனரா வங்கியின் ஒன்பது துணை நிறுவனங்களையும் அவர் மேற்பார்வையிட்டு வந்துள்ளார்.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் அவர் பொறுப்பேற்ற முதல் காலாண்டில், வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டை விட 74 சதவீதம் குறைந்தது மேலும் அடுத்த இரண்டு காலாண்டுகளில், இவரது தலைமையில் அந்த வங்கி முறையே ரூ.489.5 கோடி மற்றும் ரூ.1,238 கோடி நிகர இழப்பைச் சந்தித்தது. அதனடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டு பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "United Bank of India CMD Archana Bhargava resigned". https://www.jagranjosh.com/current-affairs/united-bank-of-india-cmd-archana-bhargava-resigned-1393049671-1. 
  2. "CBI registers corruption case against Archana Bhargava, former CMD of UBI", தி எகனாமிக் டைம்ஸ், 15 September 2016
  3. அர்ச்சனா பார்கவா: யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மேனேஜ்மென்ட் டிரெய்னி முதல் தலைவர் & எம்டி வரை பயணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_பார்கவா&oldid=3742756" இலிருந்து மீள்விக்கப்பட்டது