உள்ளடக்கத்துக்குச் செல்

அர்ச்சனா பட்டாச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ச்சனா பட்டாச்சார்யா
பிறப்பு1948 (அகவை 75–76)
தேசியம்இந்தியன்
பணியிடங்கள்இந்திய புவி காந்தவியல் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்தில்லி பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபுவியின் காந்தப்புலம்

அர்ச்சனா பட்டாச்சார்யா (Archana Bhattacharyya)(பிறப்பு 1948) ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் அயனியாக்கப்பட்ட வளிமண்டல இயற்பியல், புவியின் காந்தவியல் மற்றும் விண்வெளியின் வானிலை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் நவி மும்பையில் உள்ள இந்தியப் புவி காந்தவியல் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.[1][2]

கல்வி

[தொகு]

பட்டாச்சார்யா இளம் அறிவியல் கல்வியினை முடித்து முது நிலை அறிவியல் கல்வியினை தில்லி பல்கலைக்கழகத்தில் முறையே 1967 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளில் இயற்பியலில் முடித்தார். இவர் தேசிய அறிவியல் திறமை உதவித்தொகையையும் (1964-69) பெற்றார். இவர் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் (1975) இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று கோட்பாட்டு குவிந்த பொருள் இயற்பியல் துறையில் பணிபுரிந்தார்.[2]

பணி

[தொகு]

பட்டாச்சார்யா 1978-இல் மும்பையில் உள்ள இந்தியப் புவி காந்தவியல் நிறுவனத்தில் சேர்ந்தார். இவர் 1986-87-இல் இல்லினாய்சு, அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் கேசி யெக் குழுவுடன் பணிபுரிந்தார். 1998-2000-இல் இவர் அமெரிக்காவின் மாசச்சூசெட்சில் உள்ள வானூர் திபடை ஆராய்ச்சி ஆய்வகத்தில் மூத்த குடியுரிமை ஆராய்ச்சி கூட்டாளராக இருந்தார். இவர் 2005-2010 காலகட்டத்தில் இந்தியப் புவி காந்தவியல் நிறுவன இயக்குநராக பணியாற்றினார். தற்போது, தகைசால் அறிவியலாளராக உள்ளார்.

விருதுகளும் கௌரவங்களும்

[தொகு]

ஆராய்ச்சி ஆர்வங்கள்

[தொகு]
  • பூமத்திய ரேகை அயனி மண்டலத்தில் பிளாஸ்மா உறுதியற்ற தன்மை
  • ரேடியோ அலைகள் மூலம் அயன மண்டல ஆய்வு
  • அயன மண்டல விண்வெளி வானிலையின் விளைவுகள்
  • புவி காந்தப் புலத்தின் இடஞ்சார்ந்த-தற்காலிக மாறுபாடுகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IAS- Archana Bhattacharyya". பார்க்கப்பட்ட நாள் 15 March 2014.
  2. 2.0 2.1 2.2 "INSA - Archana Bhattacharyya". பார்க்கப்பட்ட நாள் 15 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_பட்டாச்சார்யா&oldid=4152076" இலிருந்து மீள்விக்கப்பட்டது