அர்ச்சனா சோரெங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்ச்சனா சோரெங்
பிறப்பு1996 (அகவை 24–25)
பிகாபாந்த் கிராமம், ராஜாங்பூர், சுந்தர்கர், ஒடிசா, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்
  1. இளநிலை பட்டம் -பாட்னா மகளிர் கல்லூரி
  2. முதுகலை பட்டம், ஒழுஙமைக்கப்பட்ட நிர்வாகம் டாடா சமூக அறிவியல் கழகம் (TISS)
பணி
  1. ஆராய்ச்சி அலுவலர், வசுந்தரா ஒரிசா
  2. காலநிலை மாற்றம் குறித்த இளைஞர் ஆலோசனைக் குழு, ஐ.நா. இளைஞர் வியூகத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் நிறுவியது
அமைப்பு(கள்)வசுந்தரா ஒடிசா
அறியப்படுவதுசூழலியல் செயல்பாட்டாளர்
வலைத்தளம்
www.vasundharaodisha.org

அர்ச்சனா சோரெங் (Archana Soreng) என்பார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இவர் இந்தியாவின் ஒடிசாவின் சுந்தர்கட் பகுதியினைச் சார்ந்த ராஜாங்புரின் பிகாபாந்த் கிராமத்தினைச் சார்ந்த காரிய பழங்குடியினைச் சார்ந்தவர்.[1]இவர் காலநிலை மாற்றம் மற்றும் மரபுசார் அறிவினை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் பழங்குடி சமூகங்களின் பாரம்பரிய அறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகிறார்.

ஐ.நா. இளைஞர் வியூகத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் நிறுவிய காலநிலை மாற்றம் குறித்த இளைஞர் ஆலோசனைக் குழுவின் ஏழு உறுப்பினர்களில் ஒருவராக சோரெங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3][4] [5][6][7][8]

பின்னணி[தொகு]

காரிய பழங்குடியினைச் சார்ந்த சோரங் ஒடிசாவின் சுந்தர்கட் மாவட்டத்தில் உள்ள ராஜாங்புரில் வளர்ந்தார்.[9] இவரின் தந்தையின் மரணத்திற்குப் பிறகு பொதுவாழ்வில் ஈடுபட ஆரம்பித்தார்.[10] தனது வாழ்நாள் முழுவதும் இவர் இந்தியக் கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.[11]

இவர் டாடா சமூக அறிவியல் கழகத்தின் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். அகில இந்தியக் கத்தோலிக்க பல்கலைக்கழக கூட்டமைப்பின் (ஏ.ஐ.சி.யு.எஃப்) தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இது ஆதிவாசி யுவ செட்னா மன்ச் என்று அழைக்கப்படுகிறது.[9] தற்போது, இவர் வசுந்தரா ஒடிசாவில் ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். வசந்தரா என்பது புவனேஸ்வரில் உள்ள ஒரு செயல் ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆலோசனை அமைப்பாகும். இது இயற்கை வள ஆளுமை, பழங்குடி உரிமைகள் மற்றும் காலநிலை நீதி ஆகிய பிரிவுகளில் செயல்படுகிறது .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_சோரெங்&oldid=3134945" இருந்து மீள்விக்கப்பட்டது