அர்ச்சனா கோச்சார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ச்சனா கோச்சார்
பிறப்பு1972 (அகவை 51–52)
இந்தியா
பணிஆடை வடிவமைப்பாளர்

அர்ச்சனா கோச்சார் (Archana Kochhar) (பிறப்பு 1972) ஓர் இந்திய ஆடை வடிவமைப்பாளர் ஆவார். இவர் பெரும்பாலும் இந்தியாவின் முதல் ஐந்து ஆடை வடிவமைப்பாளர்களின் பட்டியலில் கணக்கிடப்படுகிறார். இவர் முக்கியமாக உலகளாவிய வடிவமைப்பு உணர்வுகளுக்கு பெயர் பெற்றவர்.

அர்ச்சனா கோச்சார் தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் தனது தொகுப்பை காட்சிப்படுத்த அழைக்கப்பட்டார். லக்மே பேஷன் வீக், இந்தியா பேஷன் வீக் மற்றும் நியூயார்க் ஃபேஷன் வீக் போன்ற நிகழ்வுகளில் அர்ச்சனா கோச்சார் தனது வடிவமைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளார்.[1]

மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடியுடன் "மேக் இன் இந்தியா" பிரச்சாரத்தில் பஞ்சாரா மற்றும் வார்லி போன்ற பல்வேறு திட்டங்களில் இவர் நெருக்கமாக பணியாற்றி வருகிறார்.

அகிம்சை பட்டு[தொகு]

சார்க்கண்டில் இருந்து பழங்குடி பெண் நெசவாளர்களுடன் "அகிம்சை பட்டு" துணி திட்டத்திலும் நெருக்கமாக பணியாற்றியுள்ளார். இது ஒரு பட்டுப்புழுவையும் கொல்லாமல் தயாரிக்கப்படுகிறது. நியூயார்க் வடிவமைப்பு கண்காட்சியில் இந்த தனித்துவமான பட்டு காட்சிப்படுத்துவதன் மூலம் இந்த கருத்தை உலகமயமாக்கியுள்ளது.

மும்பையில் நடந்த இந்திய விவகாரங்கள் 6வது வருடாந்திர இந்திய தலைமை மாநாட்டில் 2015 ஆம் ஆண்டில் சத்யா பிரம்மாவின் முயற்சியால் பெண்கள் வலுவூட்டலுக்கான நெசவு சமூகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் மேக் இன் இந்தியா அகிம்சா பட்டுச் சேலையை அர்ச்சனா காட்சிப்படுத்தினார். [2]

அழகை திரும்பக் கொண்டு வருதல்[தொகு]

இவர் நியூயார்க் வடிவைமைப்பு நிகழ்வில் பல பருவங்களுக்கு தனது சமகால தொகுப்புகளை காட்சிப்படுத்தியுள்ளார். இதில் மிகவும் மறக்கமுடியாத ஒன்று, அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ரேசுமா குரேசியை மேடையேற்றி அழைத்துச் செல்வதன் மூலம் "அழகை திரும்பக் கொண்டு வருதல்" இயக்கத்தின் மூலம் அமிலம் எரிந்த பாதிக்கப்பட்டவர்களின் விழிப்புணர்வை ஊக்குவித்தார். இது நியூயார்க் டைம்ஸ், காஸ்மோபாலிட்டன் மற்றும் வோக் உட்பட உலகம் முழுவதும் 280க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களால் கவனிக்கப்பட்டது .

ஸ்மைல் பவுண்டேஷன்[தொகு]

பல்வேறு நன்கொடை திட்டங்களுடன் தனது வடிவமைப்புத் தளத்தை பகிர்ந்து கொள்வதில் உறுதியாக இருக்கும் சில வடிவமைப்பாளர்களில் ஒருவராக இருப்பதால், பெண் குழந்தை கல்விக்கு ஆதரவாக துடுப்பாட்ட வீரர் விராட் கோலி, சமையல் கலைஞர் விகாஸ் கன்னா கன்னா ஆகியோருடன் "ஸ்மைல் பவுண்டேஷன்" க்கான நல்லெண்ண தூதராகவும் உள்ளார்.[3][4] தொராண்டோவில், அனோகி எக்ஸலன்ஸ் இன் வடிவமைப்பு 2015 விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்திய தலைமைத்துவ மாநாடு 2015இல் வடிவமைப்பாளருக்கு "தசாப்தத்தின் ஆடை வடிவமைப்பாளர் " விருது வழங்கப்பட்டது.[5]

சாருக் கான், கரீனா கபூர், கங்கனா ரனாத் உட்பட பாலிவுட் நட்சத்திரங்களுக்கு அர்ச்சனா ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார்.[3][6] பிரபுதேவா, சிரேயா சரன், அமிர்தா ராவ், நர்கிஸ் பக்ரி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிபாசா பாசு , விஜேந்தர் சிங் பெனிவால் போன்ற பிரபலங்கள் அர்ச்சனாவின் வடிவமைப்புகளில் தோன்றியுள்ளனர்.[7] [8] [9] கேன்ஸ் விழாவிலும் இவர் பிரபலங்களை அலங்கரித்துள்ளார். மேலும் அர்மானி, வெர்சேஸ், பிராடா & குஸ்ஸி போன்ற சர்வதேச வடிவமைப்பு நிறுவனங்களுடன் இணைந்து தனது கூத்தர் சேகரிப்புகளைக் காண்பிப்பதற்காக பாரிசின் கேலரிஸ் லாஃபாயெட்டால் அழைக்கப்பட்டார்.

நியூயார்க் பேஷன் வீக்[தொகு]

பிரதமர் நரேந்திர மோடியின் "மேக் இன் இந்தியா" பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கோச்சாரின் தொகுப்பானது நியூயார்க் பேஷன் வீக், 2015 இல் உள்நாட்டு அகிம்சை பட்டை அறிமுகப்படுத்தியது.[10] [11] இவரது வடிவமைப்புகள் உறுப்பு நீக்கப்பட்ட விளம்பர நடிகையான ரெபேக்கா மரைனால் காட்சிப் படுத்தப்பட்டது. [12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-04. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  2. "Designer Archana Kochhar to experiment with Ahimsa Silk, spearhead the revolutionary Gandhian Ahimsa to produce fine forms of Silk Costumes – Indian Affairs". indianaffairs.tv. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
  3. 3.0 3.1 "Designer Archana Kochhar runs Mumbai Marathon for cause". India TV. IANS (Mumbai). 18 January 2015. http://www.indiatvnews.com/lifestyle/news/archana-kochhar-runs-mumbai-marathon-for-cause-4552.html. பார்த்த நாள்: 28 September 2015. 
  4. "Chef Vikas Khanna attends charity event with designer Archana Kochhar in Mumbai". Times of India. TNN (Mumbai). 29 June 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/events/mumbai/Chef-Vikas-Khanna-attends-charity-event-with-designer-Archana-Kochhar-in-Mumbai/articleshow/37388353.cms. பார்த்த நாள்: 28 September 2015. 
  5. "Painting is an expression of artist's imagination: Trivedi". பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
  6. "Model displays the creations of fashion designer Archana Kochhar during the India International Jewellery Week (IIJW) in Mumbai, on July 15, 2014.". Yahoo News. IANS. 16 July 2014. https://news.yahoo.com/photos/model-displays-creations-fashion-designer-archana-kochhar-during-photo-081557477.html. பார்த்த நாள்: 28 September 2015. 
  7. "Bipasha Basu to be show stopper for Archana Kochhar in Dubai". The Indian Express. PTI. 26 May 2013. http://indianexpress.com/article/entertainment/bollywood/bipasha-basu-to-be-show-stopper-for-archana-kochhar-in-dubai/. பார்த்த நாள்: 28 September 2015. 
  8. "Archana Kochhar launches summer bridal range with Celina Jaitly". Times of India. TNN. 12 July 2015. http://timesofindia.indiatimes.com/entertainment/events/others/Archana-Kochhar-launches-summer-bridal-range-with-Celina-Jaitly/articleshow/48033094.cms. பார்த்த நாள்: 28 September 2015. 
  9. "Vijendra Singh walks for Archana Kochhar at LFW". Times of India. TNN. 21 May 2014. http://timesofindia.indiatimes.com/life-style/fashion/shows/Vijendra-Singh-walks-for-Archana-Kochhar-at-LFW/articleshow/32236726.cms. பார்த்த நாள்: 28 September 2015. 
  10. Elizabeth, Meaghan (14 September 2015). "Archana Kochhar Debuts Ahimsa Rēśama At New York Fashion Week". Anokhi Media. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  11. "Ace Designer Archana Kochhar unveils the first look of her NewYork Fashion Week Collection, "Ahmisa Resama"". Ritz. 11 September 2015. Archived from the original on 3 October 2015. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  12. Bhalla, Radhika (18 September 2015). "Model Rebekah Marine, born without a forearm, inspires us to rethink beauty". dailyO. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_கோச்சார்&oldid=3541434" இலிருந்து மீள்விக்கப்பட்டது