அர்ச்சனா குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்ச்சனா குப்தா
Archanna Gupta.jpg
பிறப்பு1 மார்ச்சு 1990 (1990-03-01) (அகவை 29)
ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்அர்ச்சனா குப்தா
பணிநடிகர், விளம்பர நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2008 முதல் தற்போது வரை
வலைத்தளம்
archannaguptaa.com

அர்ச்சனா குப்தா (Archana Gupta) 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 அன்று பிறந்துள்ள இவர் ஒரு இந்தியாவின் விளம்பர நடிகை மற்றும் திரைப்பட நடிகையாவார். இவர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் வெளிப்பகுதியைச் சார்ந்தவர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் உருசியா மொழிகளின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] அவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார், மேலும் அவர் பல பொருட்களுக்கு மற்றும் பல நிறுவனங்களின் தயாரிப்புகளின் விளம்பரங்களை பிரபலப்படுத்தும் நடிகை ஆவார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

நடிப்பு மற்றும் நடனத்திற்கான ஆசை, மிகச் சிறிய வயதில் அர்சனாவை இந்த தொழிற்துறைக்கு இழுத்துச் சென்றது. இவர் தெலுங்கு படமான "ஆனந்தமைன மனசுலோ" என்ற படத்தில் அறிமுகமானார். ரஷ்ய படங்கள் உட்பட பலத் திரைப்படங்களில் அர்ச்சனா நடித்துள்ளார். அர்ச்சனா ஆக்ராவில் பிறந்தார், பின்னர் மும்பை சென்று ஒரு விளம்பர நடிகையாகவும் , திரைப்பட நடிகையாகவும் தனது தொழில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவருடைய சகோதரி வந்தனா குப்தே என்பவரும் திரைப்பட நடிகை ஆவார். [2][3]

தொழில்[தொகு]

அர்ச்சனா தனது திரை வாழ்க்கையை தெலுங்குத் திரைப்படமான "ஆனந்தமைன மனசுலோ" என்ற படத்தின் மூலம் ஆரம்பித்தார்.[4][5]

2009இல் கன்னட மொழியில் வெளிவந்த "சர்க்கஸ்" என்ற திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரைப்படத்துறையில் நுழைந்தார். அத்திரைப்படத்தில் இவருக்கு இணையாக நடிகர் கணேஷ் நடித்திருந்தார். இது 2009 ஜனவரி மத்தியில் வெளியிடப்பட்டது.[6] அதைத் தொடர்ந்து கன்னடப் படங்களான "லிஃப்ட் கோட்லா", "கார்த்திக்" மற்றும் "அச்சு மெட்சு" போன்ற படங்களிலும் தொடர்ந்து நடித்தார் .[7]

2013இல் அர்ச்சனா, "ரஸ்புதின்" , "கேங் ஓவர்" மற்றும் "காஞ்சி" போன்ற மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1][8]

திரைப்பட வரலாறு[தொகு]

வருடம் படம் பாத்திரம் மொழி குறிப்பு
2008 ஆனந்தமைன மனசுலோ பிந்து தெலுங்கு
சான்ச்சா" சாக்கோரி இந்தி கலை படம்[2]
2009 சர்க்கஸ்" பிரியாa கன்னடம்
2010 லிப்ட் கோட்லா கன்னடம்
2011 கார்த்திக் நிஷா கன்னடம்
குயின்ஸ் டெஸ்டினி ஆப் டான்ஸ்" நந்தினி இந்தி
அச்சு மெச்சு" கன்னடம்
2012 மாசி தமிழ்
2013 காஞ்சி கௌரி மலையாளம்
டிசியர்ஸ் ஆப் த ஹார்ட் ராதா ஆங்கிலம்
2014 கேங் ஓவர் ரேஷ்மி மலையாளம்
ஆர்யன் ஹம்சா கன்னடம்
2015 ரஸ்புதின் அம்பிலி மலையாளம் [9]
இருவர் உள்ளம் (1963 திரைப்படம்) சாம்பவி தமிழ் [10]
ராஜா வாஸ்கா ருஷ்யன்
2018 ஏக் பெடுக்கே ஆத்மி கி அஃப்ரா ராட்டின் கோமதி இந்தி
மீ டூ இந்தி குறும் படம்

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Archanaa gets reel". Deccan Chronicle (2013-05-24). மூல முகவரியிலிருந்து 26 October 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-07-18.
  2. 2.0 2.1 TNN (2008-12-02). "Small town to fame: Archana - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 2013-07-18.
  3. Y Maheswara Reddy (2010-09-29). "Director’s Delight". The New Indian Express. பார்த்த நாள் 2013-07-18.
  4. "Great Andhra". Great Andhra. பார்த்த நாள் 2013-07-18.
  5. "Ganesh's Circus takes off - Oneindia Entertainment". Entertainment.oneindia.in (2008-08-07). மூல முகவரியிலிருந்து 15 April 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-07-18.
  6. "Ganesh shines in ‘Circus’ (Kannada Film Review) - Thaindian News". Thaindian.com (2009-01-16). பார்த்த நாள் 2013-07-18.
  7. A Sharadhaa (2013-03-01). "Archana’s first negative role in Aryan". The New Indian Express. பார்த்த நாள் 2013-07-18.
  8. Priya Sreekumar (2013-07-28). "Archanaa bags a hattrick". Deccan Chronicle. மூல முகவரியிலிருந்து 1 August 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-08-01.
  9. Navamy Sudhish for the New Indian Express. 22 February 2014. 'Rasputin', the Story of Three Youngsters is a Humorous Drama
  10. Nikhil Raghavan for The Hindu. 30 December 2013. Shot Cuts: Triangular love story

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_குப்தா&oldid=2701277" இருந்து மீள்விக்கப்பட்டது