அர்ச்சனா உடுப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அர்ச்சனா உடுப்பா
பிறப்பு3 பெப்ரவரி 1983 (1983-02-03) (அகவை 38)
நாகரா, சீமக்கா, கருநாடகம்
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்பக்தி, பாரம்பரிய இசை, திரையிசை
தொழில்(கள்)பாடுதல்

அர்ச்சனா உடுப்பா (Archana Udupa) இந்தியாவைச் சேர்ந்த பாடகியான [1] இவர் பக்தி, பாரம்பரிய இசை, திரைப்பட பாடல்களைப் பாடுகிறார். இவர் அனைத்திந்திய வானொலிலும்,தூர்தர்ஷனிலும் தரக்கலைஞர் ஆவார். இவர் 1998இல் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டி.வி.எஸ் "ச ரி க ம ப" என்ற பாடல் போட்டி நிகழச்சியின் இறுதி வெற்றியாளர் ஆவார். [2] இந்தித் திரைப்பட பாடல் போட்டியில் வெண்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் நபராகவும் இருக்கிறார். தற்போது வரை இவர் 1000க்கும் மேற்பட்ட இசைத்தட்டுகளிலும், குறுந்தகடுகளிலும் பாடியுள்ளார். [3]

2012 ஆம் ஆண்டில் வெளியான பாகீரதி என்ற திரைப்படத்தில் பாடிய பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றார் [4] கன்னட கோகிலா என்ற புகழ்பெற்ற பாடல் நிகழ்ச்சியின் இரண்டு பருவங்களுக்கு சந்தன் ஷெட்டி, சாது கோகிலா ஆகியோருடன் நடுவராக இருந்தார். பல்துறை பாடகியான இவர் ஒரு இசைக்கலைஞருமான சிமோகா சுப்பண்ணாவின் மகனும் வழக்கறிஞருமான சிறீரங்காவை 2002இல் திருமணம் செய்து கொண்டார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "spell bound performance". மூல முகவரியிலிருந்து 24 February 2008 அன்று பரணிடப்பட்டது.
  2. "Singing her way to success" (29 November 1998). மூல முகவரியிலிருந்து 28 January 1999 அன்று பரணிடப்பட்டது.
  3. "On my pinboard: Archana Udupa" (30 January 2020).
  4. "Karnataka State Film Awards 2010-11 winners".
  5. "It’s wedding time!". Deccan Herald (26 May 2002). மூல முகவரியிலிருந்து 2 December 2002 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_உடுப்பா&oldid=3115246" இருந்து மீள்விக்கப்பட்டது