அர்சென் வெங்கர்
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
உயரம் | 6 அடி 3 அங் (1.91 m) | ||
ஆடும் நிலை(கள்) | Sweeper | ||
இளநிலை வாழ்வழி | |||
1963–1969 | FC Duttlenheim | ||
1969–1973 | AS Mutzig | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1973–1975 | Mulhouse | 56 | (4) |
1975–1978 | ASPV Strasbourg | 80 | (20) |
1978–1981 | RC Strasbourg | 11 | (0[1]) |
மொத்தம் | 147 | (24) | |
மேலாளர் வாழ்வழி | |||
1984–1987 | நான்சி-லொரைன் | ||
1987–1994 | மொனாகோ | ||
1995–1996 | நகோயா கிராம்போஸ் எய்ட் | ||
1996–2018 | அர்செனல் | ||
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
அர்சென் வெங்கர்,OBE[2](Arsene Wenger, பிரெஞ்சு உச்சரிப்பு: [aʁsɛn vɛnɡɛʁ]; பிறப்பு- அக்டோபர் 22, 1949) பிரான்சு நாட்டைச் சேர்ந்த கால்பந்து அணி மேலாளராவார். 1996-2018ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து அணியான அர்செனலின் மேலாளராக இருக்கிறார்[3]. இவரே அர்செனல் கால்பந்து கழகத்தின் நீண்டகாலம் மேலாளராகவும் அதிக வெற்றிகள் கண்டவருமாக (அதிக கோப்பைகள் வென்றவர்) இருக்கிறார்[3][4].
ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் மேனிலை பட்டங்களை மின்பொறியியல் மற்றும் வணிகவியல்[5] துறைகளில் பெற்றபிறகு கால்பந்தாட்டக்காரராக மாறினார். எட்டு வருடங்களில் மூன்று கால்பந்து கழகங்களுக்காக விளையாடினார். 1981-ல் ஆர்.சி. ஸ்ட்ராஸ்பர்க் அணிக்காக விளையாடியதோடு ஓய்வுபெற்றார். பின்னர் சிறிது காலம் ஏ.எஸ். நான்சி-லொரைன் கால்பந்து கழக மேலாளராக இருந்தார். பிறகு ஏ.எஸ். மொனாகோ கால்பந்து கழக மேலாளரானார். இக்கழக மேலாளராக பெரும் வெற்றிகளைப் பெற்றார். தனது முதல் வருடத்தில் அவ்வணியை லீக்-1 போட்டித்தொடரை வெல்லச்செய்தார். 1991-ல் பிரெஞ்சுக் கோப்பையை இக்கால்பந்து கழகம் வென்றது. மேலும் அங்கு மேலாளராக இருந்த கால கட்டத்தில் யூரி யொர்க்காஃப், ஜார்ஜ் வியா மற்றும் தியரி ஹென்றி போன்ற திறமைவாய்ந்த கால்பந்து ஆட்டக்காரர்களை உருவாக்கினார். 1995-ல் ஜெ-லீக் தொடரில் விளையாடும் நகோயா கிராம்போஸ் எய்ட் அணியின் மேலாளரானார். முதல் வருடத்திலேயே புகழ்வாய்ந்த எம்பரர் கோப்பையை வென்றார். அதற்கடுத்த ஆண்டு ஜப்பானிய சூப்பர் கோப்பையை வென்றார்.
அர்செனல் கால்பந்து கழகத்தில், ஓராண்டில் இரு கோப்பைகளை வென்ற பிரிட்டிசாரல்லாத முதல் மேலாளரானார். இதனை 1998 மற்றும் 2002-ஆம் ஆண்டுகளில் நிகழ்த்திக்காட்டினார். 2004-ஆம் ஆண்டு பிரீமியர் லீக் வரலாற்றிலேயே முழு பருவத்திலும் தோற்கடிக்கப்படாத முதல் மேலாளரானார். அர்செனல் அணி தொடர்ச்சியாக 49 போட்டிகள் வரை தோற்கடிக்கப்படாமலிருந்தது. 2006-ல் அர்செனல் கால்பந்து கழகத்தினை அதன் முதல் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றார். பாரிசில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணியிடம் தோல்வியடைந்தது.
அண்மைக் காலங்களில் கோப்பைகள் ஏதும் வெல்லாவிடினும் அர்சென் வெங்கர் உலகின் தலைசிறந்த கால்பந்து மேலாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகின்றார்[6][7][8]. குறைவான உள்ளீடுகளைக் கொண்டு பெரும் வெற்றிகள் பெற்றதனால், முன்னாள் அர்செனல் அவைத்தலைவர்களுள் ஒருவரான டேவிட் டெய்ன்[9] இவரை "அதிசயங்கள் நிகழ்த்துபவர்" எனக் குறிப்பிட்டார். மேலும் கால்பந்தாட்டத்தின் நிலையை மறுமலர்ச்சி செய்தவர் எனவும் குறிக்கப்பெறுகிறார்[10]. கூர்மதியும் முன்நோக்கிப் பார்க்கும் திறனும் கொண்ட இவருக்கு அர்செனல் அணி வீரர்கள் "பேராசிரியர்"(Le Professeur) என்ற அடைமொழியிட்டு அழைத்தனர்[11]. இன்றும் ஐக்கிய ராச்சிய ஊடகங்களும் கால்பந்து விசிறிகளும் இவரை அந்த அடைமொழியாலேயே குறிக்கின்றனர்.
வெங்கர் பலமொழிகளை திறம்பட பேசக்கூடியவர். பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய இவர், இத்தாலியம், எசுப்பானியம், போர்த்துக்கீசியம் மற்றும் சப்பானிய மொழிகளையும் பேசக்கூடியவராவார்[12].
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "Arsène Wenger". Racingstub. Archived from the original on 22 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 31 October 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "2003 Queen's birthday honours announced". BBC News (BBC). 14 June 2003. http://news.bbc.co.uk/2/hi/uk_news/2988090.stm. பார்த்த நாள்: 1 January 2010.
- ↑ 3.0 3.1 "Arsène Wenger". ஆர்சனல். Archived from the original on 18 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 March 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ In terms of length of tenure, George Allison's 13 years in charge of Arsenal between 1934 and 1947 is more than Wenger's 12½ (as of March 2009), but Allison's period included the entirety of the Second World War, where no official football was played, and thus Wenger has overseen more matches.
- ↑ Matthew, Hernon. "Management styles: Arsène Wenger". Businesswings. http://www.businesswings.co.uk/articles/Management-Styles-Ars%C3%A8ne-Wenger. பார்த்த நாள்: 2 January 2011.
- ↑ "Man Utd icon Neville: Wenger best manager Arsenal could hope for". Tribal Football. பார்க்கப்பட்ட நாள் 6 June 2011.
- ↑ "Messi hoping for summer signing of Gunners' striker Fabregas". Daily Mail. 19 February 2011. பார்க்கப்பட்ட நாள் 6 June 2011.
It makes me really happy to hear such important football people speaking kindly of you.
- ↑ "Bruce: Wenger is a genius". sport.co.uk. 6 June 2011. பார்க்கப்பட்ட நாள் 6 June 2011.
- ↑ Winter, Henry (6 December 2001). "Wenger, an expert of timing". த டெயிலி டெலிகிராப் இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090126204146/http://www.telegraph.co.uk/sport/football/leagues/premierleague/arsenal/3018234/Arsenal-sign-Wenger-with-expert-timing.html. பார்த்த நாள்: 1 June 2010.
- ↑ Lawrence, Amy (1 October 2006). "French lessons". The Observer (London). http://www.guardian.co.uk/football/2006/oct/01/sport.comment1. பார்த்த நாள்: 5 May 2008.
- ↑ "Why 'Le Professeur' and 'The Boss' are bound together by a will to win". The Independent. 3 April 2004. பார்க்கப்பட்ட நாள் 6 June 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Lawrence, Amy (26 September 2005). "Amy Lawrence Q&A on Arsène Wenger". BBC. BBC. பார்க்கப்பட்ட நாள் 13 August 2006.