உள்ளடக்கத்துக்குச் செல்

அர்சுன் லால் கார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்சுன் லால் கார்க்
இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 திசம்பர் 2023
முன்னையவர்கீரா ராம்
தொகுதிபிலாரா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

அர்சுன் லால் கார்க் (Arjun Lal Garg) (பிறப்பு 1960) இராசத்தானைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான இவர், 2023 இல் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் பிலாரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.இத்தொகுதியானது ஜோத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பட்டியல் சாதி வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2][3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

கார்க் இராசத்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாராவை சேர்ந்தவர். இவர் கோகுல் இராமின் மகன் ஆவார். 1975 ஆம் ஆண்டில் பிலாரா அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்ற இவர் பின்னர் தனது படிப்பை நிறுத்தினார். 1974 ஆம் ஆண்டில் இராசத்தானின் அஜ்மீரில் உள்ள மத்யமிக் சிக்சா வாரியம் நடத்திய 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 1978 ஆம் ஆண்டில் ஜோத்பூர் அரசியல் கல்லூரியில் குடிமுறைப் பொறியியலில் பட்டச்சான்றிதழ் பெற்றார்.[1]

தொழில் வாழ்க்கை

[தொகு]

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான இவர், 2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் பிலாரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் 90,766 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசின் மோகன்லால் கட்டாரியாவை 10,424 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4]

இவர் முதன்முதலில் 2008 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் பிலாரா சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினாரானார்.

2013 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வென்றார்.[5]

இவர் 2018 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரான கீரா இராமிடம் தோல்வியடைந்தார், ஆனால் 2023 இல் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[5]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:பிலாரா[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அர்சுன் லால் 90766 46.25
காங்கிரசு மோகன்லால் கட்டாரியா 80342 40.94
வாக்கு வித்தியாசம் 10424
பதிவான வாக்குகள் 196248
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Arjunlal(Bharatiya Janata Party(BJP)):Constituency- BILARA(JODHPUR) - Affidavit Information of Candidate:". www.myneta.info. Retrieved 2025-01-14.
  2. ↑ "Bilara (SC) Assembly Election Results 2023: Bilara (SC) Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2025-01-14.
  3. ↑ "Bilara Rajasthan Assembly Constituency Election 2023: Date of Result, Voting, Counting; Candidates". Financialexpress (in ஆங்கிலம்). 2023-12-03. Retrieved 2025-01-14.
  4. ↑ "Bilara Chunav results live: बिलाड़ा सुरक्षित सीट से बीजेपी के अर्जुनलाल गर्ग की जीत, कांग्रेस की हुई हार". News18 हिंदी (in இந்தி). 2023-12-03. Archived from the original on 2025-01-14. Retrieved 2025-01-14.
  5. 1 2 "Bilara Constituency Election Results 2023: Bilara Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-01-14.
  6. ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 131 - Bilara (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சுன்_லால்_கார்க்&oldid=4565088" இலிருந்து மீள்விக்கப்பட்டது