உள்ளடக்கத்துக்குச் செல்

அர்சலா கே. லா குவின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்சலா கே. லா குவின்
2004ல் அர்சலா லா குவின்
2004ல் அர்சலா லா குவின்
பிறப்புஅர்சலா கே. லா குவின்
அக்டோபர் 21, 1929 (1929-10-21) (அகவை 94)
பெர்க்கெலி, கலிஃபோர்னியா, அமெரிக்கா
தொழில்எழுத்தாளர்
தேசியம்அமெரிக்கர்
வகைஅறிபுனை
கனவுருப்புனைவு
இணையதளம்
http://www.ursulakleguin.com

அர்சலா கே. லா குவின் (Ursula K. Le Guin, பி. அக்டோபர் 21, 1929) ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர். புதினங்கள், கவிதைகள், குழந்தைகளுக்கான கதைகள், சிறுகதைகள் போன்ற பல வகைப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் அறிபுனை மற்றும் கனவுருப்புனைவு பாணிகளில் எழுதும் இவரது படைப்புகளில் டாவோவியம், ஒழுங்கின்மை, இனவியல், பெண்ணியம். உளவியல் பற்றிய கருத்துகள் மேலோங்கியுள்ளன.

1960களில் வெளியான தி லெஃப்ட் ஹாண்ட் ஆஃப் டார்க்னெஸ் என்ற புதினமே லா குவினின் மிகபரவலாக அறியப்படும் படைப்பு. இப்புதினம் ஹூகோ விருதினையும் வென்றுள்ளது. லா குவின் மொத்தம் ஐந்து ஹூகோ விருதுகளையும் ஆறு நெபூலா விருதுகளையும் வென்றுள்ளார். இவற்றைத் தவிர லோகஸ் விருதுகள், அமெரிக்காவின் தேசிய சிறுவர் இலக்கிய விருது உட்பட மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இவரது படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பிடத்தக்க படைப்புகள்

[தொகு]
  • எர்த் சீ புதின வரிசை
  • ஹைனிஷ் சைக்கிள் புதின வரிசை
  • லேத் ஆஃப் ஹெவன்
  • ஐ ஆஃப் தி ஹெரான்
  • தி பிகினிங் பாலஸ்
  • ஆல்வேஸ் கமிங் ஹோம்
  • லவீனியா

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சலா_கே._லா_குவின்&oldid=2917221" இலிருந்து மீள்விக்கப்பட்டது