அர்கியூபிசைட்டு
Appearance
அர்கியூபிசைட்டு Arcubisite | |
---|---|
கிரீன்லாந்தில் கிடைத்த அர்கியூபிசைட்டு கனிமம் | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | (Ag6CuBiS4) |
இனங்காணல் | |
நிறம் | சாம்பல் |
மிளிர்வு | உலோகத்தன்மை |
அர்கியூபிசைட்டு (Arcubisite) என்பது Ag6CuBiS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சல்போவுப்புக் கனிமமான இது கிரையோலைட்டு கனிமத்துடன் கிரீன்லாந்தில் கிடைக்கிறது. இக்கனிமத்தின் பகுதிக் கூறுகளான அர்கெண்டம், குப்ரம் மற்றும் பிசுமத் ஆகிய தனிமங்களின் முதல் சில எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அர்கியூபிசைட்டு என்ற பெயர் உருவாக்கப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் அர்கியூபிசைட்டு கனிமத்தை Acb.[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.