உள்ளடக்கத்துக்குச் செல்

அரோல்டு டி. பாப்காக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரோல்டு டி. பாப்காக்
Harold Delos Babcock Edit on Wikidata
பிறப்பு24 சனவரி 1882
Edgerton
இறப்பு8 ஏப்பிரல் 1968 (அகவை 86)
பாசடீனா
படித்த இடங்கள்University of California
பணிவானியல் வல்லுநர்
விருதுகள்புரூசு பதக்கம்
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
நிறுவனங்கள்
  • வில்சன் சிகர விண்காணகம்

அரோல்டு டி. பாப்காக் (Harold Delos Babcock) (ஜனவரி 24, 1882 - ஏப்பிரல் 8, 1968) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் அமெரிக்க வானியலாலரான ஒரேசு வெல்கம் பாப்காக்கின் தந்தையார் ஆவார். இவர் ஆங்கிலேய, செருமானிய கால்வழி மூதாதையரைக் கொண்டவர்.[1] இவர் விசுகான்சின், எடுகர்ட்டனில் பிறந்தார். இவர் இலாசு ஏஞ்சலீசில் பள்ளிக் கல்வியை முடித்தார். பிறகு இவர்பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1901 இல் சேர்ந்தார்.[2] இவர் 1907 முதல் 1948 வரை மவுண்ட் வில்சன் வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் சூரியக் கதிர்நிரலியலில் சிறப்புத் தகுதி பெற்றவர். இவர் சூரிய மேற்பரப்பின் காந்தப்புலப் பரவலை படம் வரைந்தார். இவரும் இவரது மகனும் சில விண்மீன்களில் காந்தப்புலம் நிலவுவதை வெளிப்படுத்தினர்.

இவர் 1953 இல் புரூசு பதக்கம் வென்றார்.[3] நிலாக் குழிப்பள்ளம் ஒன்றுக்கு பாப்காக் என இவரது பெயர் இடப்பட்டுள்ளது. குறுங்கோள் 3167 பாப்காக் என (கூட்டாக இவர் பெயரிலும் இவரது மகன் பெயரிலும்) பெயர் இடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. NNDB entry
  2. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
  3. Bruce Medal page[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]

நினைவேந்தல்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரோல்டு_டி._பாப்காக்&oldid=3592759" இலிருந்து மீள்விக்கப்பட்டது