அரோமாட்டிக் ஆல்ககால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரோமாட்டிக் ஆல்ககால்கள் (Aromatic alcohols) என்பவை கரிம வேதியியலில் பயன்படும் ஒரு வகையான வேதிச்சேர்மங்கள் ஆகும். இவை அரைல் ஆல்ககால்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இச்சேர்மங்களில் ஐதராக்சில் குழு (—OH) பீனால்களில் இருப்பதற்கு நேரெதிராக, ஓர் அரோமாட்டிக் ஐதரோகார்பன் தொகுதியுடன் மறைமுகமாக பிணைந்துள்ளது. பீனால்களில் ஐதராக்சில் குழு நேரடியாக அரோமாட்டிக் கார்பன் அணுவுடன் பிணைந்திருக்கும்.

கேந்திதா அல்பிகன் [1] என்ற நொதி அரோமாட்டிக் ஆல்ககால்களை உற்பத்தி செய்கிறது. பியர் [2] எனப்படும் மதுபான வகையிலும் அரோமாட்டிக் ஆல்ககால்கள் காணப்படுகின்றன. சாக்கரோமைசெசு செரிவிசியே [3] என்ற நொதி இனத்திற்கு இம்மூலக்கூறுகள் குறைவெண் உணர்மைத் திட்ட சேர்மங்களாக உள்ளன.

வளர்சிதை மாற்றம்[தொகு]

அரைல் ஆல்ககால் டிவைதரோகினேசு என்ற நொதி, ஒர் அரோமாட்டிக் ஆல்ககாலையும் நிக்கோட்டினமைடு அடினைன் டைநியுக்ளியோடைடு என்ற இணைநொதியையும் பயன்படுத்தி ஓர் அரோமாட்டிக் ஆல்டிகைடு, ஆக்சிசனமேற்றப்பட்ட இணைநொதி, ஐதரசன் அயனி ஆகியனவற்றைக் கொடுக்கிறது.

அரைல் ஆல்ககால் டிவைதரோகினேசு என்ற நொதி, நிக்கோட்டினமைடு அடினைன் டைநியுக்ளியோடைடு பாசுபேட்டு என்ற புரோட்டினில்லா வேதிச்சேர்மத்தைப் பயன்படுத்தி ஓர் அரோமாட்டிக் ஆல்டிகைடு, நிக்கோட்டினமைடு அடினைன் டைநியுக்ளியோடைடு பாசுபேட்டு ஐதரோகினேசு, ஐதரசன் அயனி ஆகியனவற்றை உருவாக்குகின்றன.

அரைல்டையல்கைல்பாசுபடேசு என்ற நொதி ஓர் அரைல் டையல்கைல்பாசுபேட்டையும் நீரையும் பயன்படுத்தி ஒரு டையல்கைல் பாசுபேட்டு மற்றும் ஓர் அரைல் ஆல்ககால் ஆகியனவற்றை உற்பத்தி செய்கிறது. அரைல்டையல்கைல்பாசுபடேசு நொதி கரிமபாசுபரசு ஐதரோலேசு, பாசுபோடிரையெசுத்தரேசு, பராக்சோன் ஐதரோலேசு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

உதாரணங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Regulation of Aromatic Alcohol Production in Candida albicans. Suman Ghosh, Bessie W. Kebaara, Audrey L. Atkin, and Kenneth W. Nickerson, Applied And Environmental Microbioly, December 2008, Volume 74, Number 23, pages 7211–7218, எஆசு:10.1128/AEM.01614-08
  2. Trtptophol, tyrosol and phenylethanol—The aromatic ahigher alcohols in beer. Clara M. Szlavko, Journal of the Institute of Brewing, July–August 1973, Volume 79, Issue 4, pages 283–288, எஆசு:10.1002/j.2050-0416.1973.tb03541.x
  3. Quorum Sensing: Alcohols in a Social Situation.Deborah A. Hogan, Current Biology, 20 June 2006, Volume 16, Issue 12, R457-R458, எஆசு:10.1016/j.cub.2006.05.035
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரோமாட்டிக்_ஆல்ககால்&oldid=2165406" இலிருந்து மீள்விக்கப்பட்டது