அரை மதிப்புத் தடிமன்
அரை மதிப்புத் தடிமன் (Half value layer அல்லது half-value thickness) என்பது அயனியாக்கும் பண்புடைய எக்சு மற்றும் காமாக் கதிர்கள் ஓர் ஊடகத்தின் வழியாகச் சென்று வெளிப்படும் போது, கதிர்களின் ஆரம்பச் செறிவினைப் பாதியாகக் குறைக்கும் ஊடகத்தின் தடிப்பு ஆகும்.[1] கதிர் மருத்துவத் துறையில் கோபால்ட் 60 கருவி, அதிக ஆற்றல் மிக்க அண்மைக்கதிர் (Brachytherapy unit) கருவி, நேர்கோட்டு வேகவளர்த்திக் கருவிகள் (Clinac, Linac) முதலிய கருவிகளின் அமைவிடம் போதிய பாதுகாப்பாக இருக்க வேண்டிய சுவர்கனம் கணக்கிட, இந்த அரை மதிப்புத் தடிமன் பயன்படுகிறது. அண்மைக் கதிர் மருத்துவத்துறையில் கதிர் மூலங்கள் இருக்கும் கலங்களின் காப்பான தடிமனளவு காணவும் இது உதவுகிறது.
எந்த தடிமனளவு செறிவினை பத்தில் ஒரு பங்காக குறைக்கிறதோ அந்த தடிமனளவு, பத்தில் ஒன்றாகக் குறைக்கும் தடிமனளவு (tenth value layer) எனப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.euronuclear.org/info/encyclopedia/h/half-value-thickness.htm பரணிடப்பட்டது 2008-01-28 at the வந்தவழி இயந்திரம் Definition from the European Nuclear Society