உள்ளடக்கத்துக்குச் செல்

அரையஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரையஸ்
Arius
அரையஸ் பிதாவாகிய கடவுள் குமாரனைவிட மேன்மையானவர் என்று வாதிடவர்.
காலம்கி.பி. 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டு
பிறப்பு256
டோலமைஸ், சிரேனைக்கா, உரோமைப் பேரரசு
(நவீன கால டோல்மெய்ட்டா, லிபியா)
இறப்பு336 (80 வயதில்)
கான்ஸ்டண்டினோபில், திரேசியா, உரோமானியப் பேரரசு
(நவீன கால இசுதான்புல், துருக்கி)
தொழில்சமயமூப்பர்
மொழிகொயின் கிரேக்கம்
வழமை அல்லது
இயக்கம்
அரையனியம்
குறிப்பிடத்தக்க கருத்துக்கள்அடிபணிதல்
குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்தாலியா

அரையஸ் (Arius 250 அல்லது 256 - 336) என்பவர் ஒரு சிரேனிக் சமயமூப்பர், துறவி, பாதிரியார் ஆவார். இவரின் ஆரியனியக் கோட்பாட்டிற்காக மிகவும் பிரபலமானவர். [1] [2] கிறித்தவத்தில் கடவுளின் தன்மையைப் பற்றிய இவரது போதனைகள், தேவ குமாரரான இயேசு கிறிஸ்து கர்த்தாவாகிய இறைவனினின்றும் வேறுபட்டவர் என்பதை வலியுறுத்தியது. [3] மேலும் சமயத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிறிஸ்தியல் ( ஹோமோசியன் கிறிஸ்தியல் ) ஆகியவற்றிற்கு இவர் எதிர்ப்பு தெரிவித்தார். கி.பி. 325 இல் பேரரசர் பேரரசர் கான்ஸ்டன்டைன் நைசியாவில் கூட்டிய ஆயர்களின் முதல் மன்றத்தின் முதன்மை விவாத தலைப்பாக இவரது கருத்துகள் இருந்தன.

உரோமானியப் பேரரசர்களான லிசினியஸ் மற்றும் கான்ஸ்டன்டைன் ஆகியோர் கிறிஸ்தவத்தை அதிகாரப்பூர்வ சமயமாக ஆக்கிய பின்னர். கான்ஸ்டன்டைன் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட தேவாலயங்களை ஒன்றிணைக்கவும், இறையியல் பிளவுகளை அகற்றவும் முயன்றார். [4] கிறிஸ்தவ திருச்சபை கிறிஸ்தியல் பற்றிய கருத்து வேறுபாடுகளால் பிரிவுகள் உண்டாகி இருந்தன. குறிப்பாக திரித்துவத்தின் முதல் மற்றும் இரண்டாவது நபர்களுக்கு இடையிலான உறவின் தன்மை பற்றி கருத்து வேறுபாடுகள் இருந்தன. அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார் உட்பட ஹோமோசியன் கிறிஸ்தவர்கள், அரையஸ் மற்றும் அரையனியத்தை அடைமொழிகளாகக் கொண்டு, சமமான திரித்துவக் கோட்பாட்டுடன் உடன்படாதவர்களை விவரித்தனர். அவர்கள் கிறிஸ்தியல் தந்தையாம் கடவுளையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் "ஒரே சாராம்சம்" ("உபதேசம்") மற்றும் இணையானவர்களாக கொண்டனர்.

அரையசின் எதிர்மறை எழுத்துக்கள் கடவுளின் குமாரன் இருப்பதற்கு முன்பு ஒரு காலம் இருந்தது என்று -அதாவது, அப்போது தந்தையாம் கடவுள் மட்டுமே இருந்தார் என்பதாகும். இவரின் கருத்துகளுக்கு ஒருங்கிணைந்த எதிர்ப்பு இருந்தபோதிலும், அரையன் கோட்பாட்டை பின்பற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் பல நூற்றாண்டுகள் ஐரோப்பா முழுவதும் (குறிப்பாக பல்வேறு செருமானிய இராச்சியங்களில்), மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் நீடித்திருந்தன. ஐந்து மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இராணுவ வெற்றி அல்லது தன்னார்வமாகவோ அரச மதமாற்றம் மூலமாகவோ அவர்கள் அடக்கப்பட்டனர்.

அரையசின் வருகைக்கு முன்பே தந்தையுடனான மகனின் துல்லியமான உறவு பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டது; அரையஸ் இந்த சர்ச்சையை தீவிரப்படுத்தி, தேவாலயங்கள் முழுவதும் பார்வையாளர்களிடம் கொண்டு சென்றார். இந்தக் கொள்கையில் நிகோமீடியாவின் யூசிபியஸ் உள்ளிட்ட மற்றவர்கள் நீண்ட காலத்திற்கு மிகவும் செல்வாக்கு செலுத்தினர். உண்மையில், சில பிற்கால அரையன் பிரிவு கிறித்தவர்கள், இந்த மனிதரைப் பற்றியோ அல்லது இவருடைய குறிப்பிட்ட போதனைகளைப் பற்றியோ நன்கு அறிந்திருக்கவில்லை எனக் கூறி, அந்தப் பெயரை மறுதலித்துவிட்டனர். [5] [6] இருப்பினும், அரையஸ் மற்றும் அவரது எதிரிகளுக்கு இடையேயான மோதல் பிரச்சினையால் பரவலான கவனத்தைப் பெற்றதால், அவர் அறிவித்த கோட்பாட்டு - அவரால் உறுதியாக தோன்றுவிக்கப்படவில்லை என்றாலும் - பொதுவாக "அவருடையது" என்று முத்திரை குத்தப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. Torkington 2011.
  2. Anatolios 2011.
  3. Williams 2002.
  4. Handwerk, Brian (May 2006). "Constantine the Great Rules". National Geographic. Archived from the original on August 26, 2014. பார்க்கப்பட்ட நாள் September 23, 2014.
  5. Hanson 2007.
  6. Kopeck, M R (1985). "Neo Arian Religion: Evidence of the Apostolic Constitutions". Arianism: Historical and Theological Reassessments: 160–162. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரையஸ்&oldid=3671020" இலிருந்து மீள்விக்கப்பட்டது