அரையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரையம் என்னும் ஊர் அழிந்தது பற்றிக் கபிலர் குறிப்பிடுகிறார். (புறநானூறு 202) இதனை “இருபாற் பெயரிய உருகெழு மூதூர்” என்று அவர் விளக்குகிறார். புறநானூற்றுப் பழைய உரை இதனைச் சிற்றரையம், பேரரையம் எனக் குறிப்பிடுகிறது. இவ்வூர் கோடிபல அடுக்கிய சொல்வத்தை புலிகடிமால் என்னும் இருங்கோவேள் மன்னனுக்கு வழங்கியதாம். எவ்வி வள்ளலின் முன்னோர் அதனை ஆண்டுவந்தனராம். அவர்களில் ஒருவன் கழாத்தலையார் என்னும் புலவனை இகழ்ந்தானாம். அதன் விளைவால் எவ்வியின் தொல்குடி அழிந்துபோயிற்றாம். கபிலர் தரும் பாரிமகளிரை இருங்கோவேள் மணந்துகொள்ளாவிட்டால் அவன் குடியும் அழிந்துவிடும் எனக் கபிலர் இருங்கோவேளை அச்சுறுத்துகிறார். இருங்கோவேள் இந்த அச்சுறுத்தலுக்கு அடிபணியவில்லை. பாரி மகளிரை மணந்துகொள்ளவில்லை.. எவ்வி நீடூர் அரசன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரையம்&oldid=854172" இருந்து மீள்விக்கப்பட்டது