அரைமுடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
thump

அரைமுடி அல்லது அரசிலை என்பது சிறிய வெள்ளி உலோகத்தாலான இதய வடிவ அல்லது அரச இலை வடிவ அணிகலன் ஆகும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் மற்றும் இலங்கையின் சில பகுதிகளில் புழக்கத்தில் இருந்து வந்த இந்த ஆபரணம் பெண் குழந்தைகளுக்கு அரைஞாணுடன் கோர்த்து அணிவிக்கப்படும். [1][2][3] “அரை“ என்பது இடுப்பு பாகத்தையும் “முடி” என்றால் மூடுதல் என்றும் பொருள்படும் .[4]

1966 ஆம் ஆண்டில் எம். எஸ். சந்திரசேகர் எழுதிய “புதுக்கோட்டை அருங்காட்சியகத்திக் முக்கிய காட்சிப்பொருட்களின் கையேடு” "Guide to the principal exhibits in the Government Museum, Pudukkottai" என்ற ஆங்கில நூலில் “பிறப்புறுப்புக் கவசம்” என அரைமுடி குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாகானத்தின் சேலம் மாவட்டத்தை பற்றிய கையேட்டின் முதல் தொகுதியில் குழந்தைகள் சில நேரங்களில், பத்து வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது வரை, நிர்வாண நிலையில் இருப்பதை தவிர்க்கும் நோக்கில் இடுப்பைச் சுற்றிய ஒரு கயிற்றில் இதய வடிவிலான வெள்ளித் தகடு அல்லது “அரைமுடி” அணியப்பட்டதாக விவரிக்கிறது. "[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tamil to English Dictionary "Meaning of 'iravirekku'" (Meaning of இராவிரேக்கு)
  2. "TAMIL TO ENGLISH DICTIONARY இராவிரேக்கு - iravirekku - [irāvirēkku]". 2018-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-02-21 அன்று பார்க்கப்பட்டது.
  3. "அரசிலை aracilai". 2013-10-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-17 அன்று பார்க்கப்பட்டது.
  4. Asiff Hussein (2007). Sarandib: an ethnological study of the Muslims of Sri Lanka. VOL. I.—THE DISTRICT. MADRAS : PRINTED BY E. KEYS, AT THE GOVERNMENT PRESS: Asiff Hussein. பக். 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9559726226. https://books.google.com/books?id=1kVuAAAAMAAJ&q=arai+mudi+araimuti+girls&dq=arai+mudi+araimuti+girls&hl=en&sa=X&ei=MW-gUNeZEoqx0AGr8YCYCg&ved=0CDcQ6AEwAA. பார்த்த நாள்: November 11, 2012. "110 The term appears to literally mean 'loin (arai) cover (mudi)' 4,1 Winslow ( 1862) gives araimuti as 'a small plate of metal worn by little girls over the private parts'. Dubois (1906) who observed that the private parts of the children of the" Original from the University of Michigan Digitized Sep 3, 2008
  5. A Manual of the Salem district in the presidency of Madras, Volume 1. VOL. I.—THE DISTRICT. MADRAS : PRINTED BY E. KEYS, AT THE GOVERNMENT PRESS: Printed by E. Keys, at the Government Press. 1883. பக். 141. https://books.google.com/books?id=_ZEIAAAAQAAJ&pg=PA141&dq=araimudi&hl=en&sa=X&ei=hYuMT_fwOqPl0QHFy-zBCQ&ved=0CDoQ6AEwAQ#v=onepage&q=araimudi&f=false. பார்த்த நாள்: April 16, 2012. "The children sometimes, to the age of ten years or more, go in a state of nudity, relieved perhaps by a piece of string round the waist which sustains the "araimudi" or heart-shaped piece of silver, which calls attention to what it purports to conceal." Compiled by Henry Le Fanu Original from Oxford University Digitized Jun 6, 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரைமுடி&oldid=3603478" இருந்து மீள்விக்கப்பட்டது