அரு. பரமசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரு. பரமசிவம் (பிறப்பு: சூன் 3, 1949) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சேலம் மாவட்டம் இடைப்பாடி எனும் ஊரில் வசித்து வரும் இவர் புலவர், முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். இவர் இடைப்பாடி ஸ்ரீ பருவதராஜகுலத்தினை சேர்ந்தவர். ஆய்வு மன்றங்களில் பங்கேற்றிருக்கும் இவர் திருக்குறள் தொடர் சொற்பொழிவுகளையும் ஆற்றி வருகிறார். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடுடைய இவர் எழுதிய "பரதவர் இன் மீட்டுருவாக்க வரைவியல்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரு._பரமசிவம்&oldid=3055535" இருந்து மீள்விக்கப்பட்டது