அருவி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருவி
இயக்கம்அருண் பிரபு புருசோத்தமன்
தயாரிப்புஎஸ். ஆர். பிரபு
எஸ். ஆர். பிரகாஷ்பாபு
கதைஅருண் பிரபு புருசோத்தமன்
இசைபிந்து மாலினி
வேதாந்த் பரத்வாஜ்
நடிப்புஅதிதி பாலன்
ஒளிப்பதிவுஷெல்லி காலிஸ்ட்
படத்தொகுப்புரேமண்ட் டெர்ரிக் கிராஸ்டா
கலையகம்டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
விநியோகம்டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 15, 2017 (2017-12-15)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அருவி (ஒலிப்பு) ஓர் இந்திய தமிழ்த் திரைப்படம். இது 2017ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள சமூக-அரசியல் கதைக்களமுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருசோத்தமன். இத்திரைப்படம் இவரின் அறிமுகத் திரைப்படம். இத்திரைப்படம் அருவி (அதிதி பாலன்) என்ற பெண் பாத்திரப்படைப்பின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளைச் சித்தரிக்கும் திரைப்படம் ஆகும். இந்தப் பாத்திரப் படைப்பானது, நுகர்வியம் மற்றும் பெண் வெறுப்பு கொண்டுள்ள நவீன பண்பாட்டின் இயல்பிலிருந்து வெளிப்பட விழைகின்ற ஒரு புரட்சிகரமான இளம்பெண்ணைச் சித்தரிப்பதுடன், சமகாலத்திய இருத்தலியலின் நெருக்கடி நிலையின் பொருளை விளங்கிக் கொள்ளும் முயற்சியையும் மேற்கொள்கிறது. இத்திரைப்படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் உலகளாவிய அளவில் 2017 ஆம் ஆண்டு திசம்பர் 15 ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம், நடிப்பு, நடிகர் தேர்வு மற்றும் இயக்கம் ஆகியவை தொடர்பான திறனாய்வு ரீதியான பரந்து பட்ட ஆர்ப்பரிப்பைப் பெற்றுள்ளது.

கதைச்சுருக்கம்[தொகு]

ஒரு கண்ணியமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண், பொருளாதார-சமூக-நுகர்வியல் சூழலில் சமூகத்தில் தன்னைப் பொருத்திக் கொள்வதில் சிரமத்தை உணர்கிறாள். கதையின் நாயகி, இதற்குக் காரணமாக இருக்கும் சமூகத்திற்கெதிராக கடுமையாக எதிர்வினையாற்ற முடிவெடுக்கிறாள். அவள் எத்தகைய எதிர்வினையாற்றினாள் என்பதை திரைக்கதையின் மீதம் சொல்கிறது. அருவி திரைப்படம் ஒரு பெண் சமூகத்தால் பெறும் கடும் வேதனையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.[1][2]

நடிகர்கள்[தொகு]

  • அருவியாக அதிதி பாலன்
  • எமிலியாக அஞ்சலி வரதன்
  • லட்சுமி கோபாலசாமி
  • முகமது அலி பேக்
  • கவிதா பாரதி
  • மதன்குமார் தெட்சிணாமூர்த்தி
  • ஜெசியாக சுவேதா சேகர்
  • அருவியின் சகோதரன் கருணாவாக அர்னால்ட் மேத்யூ
  • குழந்தைப் பருவ அருவியாக பிரநிதி
  • அருவியின் தாயாக ஹேமா
  • அருவியின் தந்தையாக திருநாவுக்கரசு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dream Warrior Pictures SR Prabhu talks about Aruvi's Shanghai trip". பார்க்கப்பட்ட நாள் 2016-07-09.
  2. Aruvi (2016), பார்க்கப்பட்ட நாள் 2017-08-14

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவி_(திரைப்படம்)&oldid=3709347" இலிருந்து மீள்விக்கப்பட்டது