அருவாள் நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அருவா நாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருவாள் நாடு (அருவா நாடு) எனப்படுவது செந்தமிழ் வழங்கிய பன்னிரண்டு நாடுகளில் ஒன்று.[1] அருவாள் வடதலை நாடு இதன் மற்றொரு பிரிவு. அருவாளர் நாடு என்பது அருவாணாடு என மருவிப் பின்னர் அருவா நாடு எனவும் மருவி வழங்கலாயிற்று.[2] அருவாளர் அருவாள் நாட்டின் குடிமக்கள். இந்த அருவாள் நாடு வடுக நாட்டின் (தெலுங்கர் நாடு) எல்லையில் இருந்ததால் அருவாள் நாட்டு மக்களை வடுகர்கள் அரவாடு என்றும் அருவா மக்களின் மொழியான தமிழை அரம் என்றும் குறிப்பிட்டனர். அவ்வழக்கத்தின் தொடர்ச்சியாக ஆந்திரத் தெலுங்கர் மத்தியில் தமிழரையும், தமிழையும் இச்சொற்களில் குறிப்பிடும் வழக்கம் இன்றும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
    தம் குறிப்பினவே-திசைச்சொல்-கிளவி (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 400)
  2. தென்பாண்டி குட்டம் குடம் கற்கா வேண் பூழி
    பன்றி அருவாள் அதன் வடக்கு - நன்றாய
    சீத மலாடு புனல்நாடு செந்தமிழ்சேர்
    ஏதம் இல் சீர் பன்னிரு நாட்டு எண்.
    நன்னூல் நூற்பா 272 உரையில் மயிலைநாதர் அருவாள் அதன் வடக்கு எனவே குறிப்பிடுகிறார். (உ. வே. சாமிநாதையர் குறிப்புடன் அவரது மகன் பதிப்பு. 1946, பக்கம் 129)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவாள்_நாடு&oldid=2968618" இலிருந்து மீள்விக்கப்பட்டது