அருவாப்புலம்
அருவப்புலம் Aruvappulam | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°11′0″N 76°51′0″E / 9.18333°N 76.85000°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | பத்தினம்திட்டா |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 16,183 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 6XXXXX |
| வாகனப் பதிவு | கே.எல்-83 |
| அருகில் உள்ள நகரம் | கோன்னி |
| மக்களவைத் தொகுதி | பத்தினம்திட்டா |
| சட்டமன்றத் தொகுதி | கோன்னி |
அருவாப்புலம் (Aruvappulam) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவின், பத்தினம்திட்டா மாவட்டத்தின், தென்கிழக்கு மூலையில் கோன்னி வட்டத்தில், உள்ள ஒரு கிராம ஊராட்சியாகும்.[1] மாவட்டத்தின் உயரமான இடமான தேவர் மலை இங்கு அமைந்துள்ளது. கிராமத்தின் ஒரு பகுதி கோன்னி காப்புக் காடு வனப்பகுதியில் உள்ளது. தமிழ்நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்துக்கொள்கிறது. ஆனால் கிராமத்தை அண்டை மாநிலத்துடன் இணைக்கும் எந்த மாநிலங்களுக்கு இடையேவும் சாலை வசதி இல்லை.
அச்சன்கோவில் ஆற்றில் பாயும் முக்கிய ஓடைகள் இந்த கிராமத்தில் உற்பத்தியாகின்றன. இந்த ஆறு கிராமத்திற்கும் அண்டை மாவட்டமான கொல்லத்திற்கும் இடையிலான எல்லையை உருவாக்குகிறது.
இக்கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் கொக்கத்தோடும் கல்லேலியுமாகும்.
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 16183. ஆண்கள் 7693 பெண்கள் 8490 ஆகும்.[1]
கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் பட்டியல் இனத்தவராவர். மேலும் கிராமத்தில் கணிசமான அளவில் கிறித்துவர்கள் வாழ்கின்றனர். இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் பணிபுரிவதற்காக வளைகுடா நாடுகளுக்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துச் செல்கின்றனர். 2011 ஆம் ஆண்டு கே.பி. சார்சு என்ற புலம் பெயர்ந்தவர் அமெரிக்காவின் பாராளுமன்றமான காங்கிரசுக்கு நடைபெற்ற தோர்தலில் டெக்சாசு மாகாணத்திலிருந்து போட்டியிட்டார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. Retrieved 10 December 2008.
- ↑ Sohrabji, Sunita (22 November 2011). "Former Kerala farm boy runs for Congress from Texas". The Times of India. Retrieved 8 October 2020.