அருள் குமார் ஜம்புநாதன்
அருள் குமார் ஜம்புநாதன் Arul Kumar Jambunathan | |
|---|---|
(உள்ளாட்சி மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து) | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 24 ஆகத்து 2023 | |
| ஆட்சியாளர் | துவாங்கு முகிரிஸ் |
| பதவியில் 23 மே 2018 – 26 சனவரி 2023 | |
| துறை | மனித வளங்கள், தோட்டங்கள் மற்றும் முசுலிம் அல்லாதோர் விவகாரங்கள் |
| அரசியல் செயலாளர் மலேசிய போக்குவரத்து அமைச்சர் | |
| பதவியில் 27 சனவரி 2023 – 23 ஆகத்து 2023 | |
| அமைச்சர் | அந்தோனி லோக் |
நீலாய் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 5 மே 2013 | |
| பெரும்பான்மை | 4,047 (2013); 9,825 (2018); 10,889 (2023) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | Arul Kumar a/l Jambunathan 12 செப்டம்பர் 1985 தம்பின், நெகிரி செம்பிலான், மலேசியா |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | |
| பிற அரசியல் தொடர்புகள் | பாக்காத்தான் ராக்யாட் (PR) (2008–2015) |
| முன்னாள் மாணவர் | புத்ரா பல்கலைக்கழகம்; (வணிக நிர்வாகம்) |
| பணி | அரசியல்வாதி |
அருள் குமார் ஜம்புநாதன் (ஆங்கிலம்; மலாய்: Arul Kumar Jambunathan) (பிறப்பு: 12 செப்டம்பர் 1985) என்பவர் மலேசிய அரசியல்வாதி; 2013-ஆம் ஆண்டு முதல் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில், நீலாய் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக மூன்று தவணைகளுக்குப் பணிபுரிந்தவர் ஆவார்.
மேலும் மே 2018 முதல் சனவரி 2023 வரை பாக்காத்தான் அரப்பான் (PH) மாநில நிர்வாகத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மாநில அமைச்சர் (EXCO) பதவி வகித்தார். அதன் பின்னர் மீண்டும் 24 ஆகத்து 2023 முதல் நெகிரி செம்பிலான் மாநில அமைச்சர் பதவியை வகித்து வருகிறார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]இவர் சனவரி 2023 முதல் ஆகத்து 2023 வரை மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அவர்களின் அரசியல் செயலாளராகப் பணியாற்றினார். இவர் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (DAP) உறுப்பினராக உள்ளார்.
ஜனநாயக செயல் கட்சியின் தேசிய மாநாட்டிற்குப் பிறகு மார்ச் 2025 முதல் ஜனநாயக செயல் கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.[1]
நீலாய் சட்டமன்றத் தொகுதி
[தொகு]நீலாய் சட்டமன்றத் தொகுதி (N36) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இந்தத் தொகுதி, 1995-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
1995-ஆம் ஆண்டில் இருந்து நீலாய் சட்டமன்றத் தொகுதி, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது அருள் குமார் ஜம்புநாதன் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2013 | N10 நீலாய் | அருள் குமார் ஜம்புநாதன் (ஜசெக) | 10,378 | 59.79% | கான் சி பியோ (மசீச) | 6,331 | 39.14% | 17,573 | 4,047 | 85.30% | ||
| கமருல்சமான் அபு (சுயேச்சை) | 490 | 1.07% | ||||||||||
| எஸ். கருப்பையா @ ராஜசேகர் சிதம்பரம் (சுயேச்சை) | 47 | 1.07% | ||||||||||
| 2018 | அருள் குமார் ஜம்புநாதன் (ஜசெக) | 14,219 | 63.49% | லியாவ் கோக் சான் (மசீச) | 4,394 | 21.67% | 21,025 | 9,825 | 85.30% | |||
| அபு சகரிம் ரகுமான் (பாஸ்) | 2,151 | 14.84% | ||||||||||
| 2023 | அருள் குமார் ஜம்புநாதன் (ஜசெக) | 19,133 | 66.29% | கான் சி பியோ (பெர்சத்து) | 8,244 | 28.56% | 29,067 | 10,889 | 68.93% | |||
| உமர் முகமது இசா (சுயேச்சை) | 1,430 | 4.95% | ||||||||||
| யேசு சாமுவேல் (சுயேச்சை) | 57 | 0.20% | ||||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nilai rep Arul Kumar appointed Transport Minister's pol-sec". The Star. 26 January 2023. Retrieved 26 January 2023.
- ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Negri Sembilan".
- ↑ "The Star Online GE14". The Star (Malaysia). https://election.thestar.com.my/. பார்த்த நாள்: 24 May 2018. Percentage figures based on total turnout.