அருளம்பலம் குகதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அருளம்பலம் குகதாசன் (1935 - சூலை 1998) இலங்கையில் புகழ் பெற்ற ஒரு அச்சுக்கலை, மற்றும் நுண்தொழினுட்ப வல்லுனர். 1970களில் யாழ்ப்பாணத்தில் கொழும்பு ஸ்ரூடியோ (Colombo Studio) என்ற பெயரில் படப்பிடிப்பகம் ஒன்றை நிறுவி வெற்றிகரமாக நடத்தியவர். குரும்பசிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேசம்மாவை மணம் முடித்து யாழ் நாவலர் வீதியில் வாழ்ந்து வந்தார். இந்தியா சென்று தரமணி என்னும் இடத்தில் கல்வி பயின்று, புளொக் என்று சொல்லும் அச்சுக் கலையை யாழ்ப்பாணத்தில் முதல் முதல் அறிமுகப்படுத்தினார். உதயன், ஈழமுரசு போன்ற பத்திரிகைகள் உட்பட பல பள்ளிக்கூடங்களின் புத்தகங்களுக்கும் இவர் புளொக் செய்து கொடுத்துள்ளார்.

யாழில் புகழ்பெற்ற வீரமணி ஐயர் அவர்களோடு இணைந்து 1970களில் பல பாடல் , இலக்கிய , மற்றும் நடனக் கலைப் புத்தங்களை அ.குகதாசன் அவர்கள் வெளியிட்டார்கள். இருவரும் இணைந்து கலைப்பணி தொண்டாற்றினார்கள்.

1990ம் ஆண்டுப் பகுதியில் ஈழப்போர்க் காலத்தில் யாழ்ப்பாணத்தில் மின்சார வசதிகள் இல்லாதபோதும் கூட சூரிய வெளிச்சத்தில் படங்களை அச்சிட்டு, சூரிய வெளிச்சத்திலேயே புளொக்கையும் தயாரித்தவர். யாழ் ரோட்டரிக் கழகத்திலும் அங்கத்தவராக இருந்தார்.

யாழ்ப்பாணத்தில் முன்னணியாக விளங்கிய 3 பிரபலமான படப்பிடிப்பகங்களில் கொழும்பு ஸ்ரூடியோவும் ஒன்றாகும். சித்திராலயா ஸ்ரூடியோ, ஞானம் ஸ்ரூடியோ என்பன ஏக காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாக விளங்கியவை.

மறைவு[தொகு]

குகதாசன், 1998ம் ஆண்டு கொழும்பில் வாகன விபத்தில் சிக்கி மரணமானார். இவருக்கு மனைவியும், இரு புதல்விகளும், ஒரு மகனும் உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருளம்பலம்_குகதாசன்&oldid=2827492" இருந்து மீள்விக்கப்பட்டது