உள்ளடக்கத்துக்குச் செல்

அரும்பு (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரும்பு

அரும்பு: (ஒலிப்பு) இலங்கையில் வெளிவந்த ஒரு பொது அறிவு சஞ்சிகையாகும். இது அறிவைத் தேடுவோருக்கு ஒரு களஞ்சியமாக இருந்துவந்தது. குறிப்பாக மாணவர்களும், போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றுவோரும் இதன் மூலம் பயன்பெற்றனர்.

முதலாவது இதழ்

[தொகு]

அரும்பின் முதலாவது அச்சு இதழ் 1997 சூலை மாதம் வெளிவந்தது. இதன் இறுதி இதழ் (42) வது இதழ் 2009 சூன் மாதம் வெளிவந்தது.

கையெழுத்துப் பிரதியாக அரும்பு

[தொகு]

அரும்பு சஞ்சிகை 1964ம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்துப் பிரதியாக வெளிவந்துள்ளது. இடைக்கிடையே வெளிவந்த கையெழுத்து சஞ்சிகை 1968ம் ஆண்டு வெளிவராமல் நின்றுவிட்டது. 30 வருடங்களுக்கு பின்பு நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு அச்சு இதழாக வெளிவரத் தொடங்கியது.

நிர்வாகம்

[தொகு]

இதன் பிரதம ஆசிரியர் எம். ஹாபிஸ் இஸ்ஸடீன். இது களுத்துறை மாவட்டத்தில் தர்கா டவுன் எனும் நகரிலிருந்து வெளிவந்தது.

உள்ளடக்கம்.

[தொகு]

இதன் உள்ளடக்கம் அறிவியல் தகவல்களை கொண்டதாக அமைந்திருந்தது. பெருமளவுக்கு கலைக்களஞ்சியங்களைத் தழுவியதாக ஆதாரபூர்வமாக தகவல்கள் பெறப்பட்டிருந்தன. இதன் பின்னைய இதழ்கள் ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்தும் தகவல்களை மொழிபெயர்த்திருந்தன. அத்துடன் இலங்கையில் நோய்கள் தொடர்பாக உரிய அமைப்புகளின் அறிக்கைகள் மற்றும் புதிய தரவுகள் போன்ற பலதரப்பட்ட விடயங்களை இது வெளிப்படுத்தி வந்தது. விஞ்ஞானம், தொழில்நுட்பம், வரலாறு, கலை, இலக்கியம், தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள், தொலைதொடர்பு, அரசியல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் அரும்பில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்கங்களாக இடம்பெற்று வந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரும்பு_(சிற்றிதழ்)&oldid=2538920" இலிருந்து மீள்விக்கப்பட்டது