அருமண் பேரியம் தாமிரம் ஆக்சைடு
அருமண் பேரியம் தாமிரம் ஆக்சைடு (Rare-earth barium copper oxide) என்பவை உயர்வெப்பநிலை மீக்கடத்து திறனை வெளிப்படுத்துவதற்காக அறியப்பட்ட வேதிச் சேர்மங்களின் குடும்பமாகும்[1]. இவற்றை ஆங்கிலச் சுருக்கு எழுத்து வடிவமாக ReBCO என்ற எழுத்துகளால் குறிப்பர்[2]). பிற மீக்கடத்தும் பொருட்களைவிட அருமண் பேரியம் தாமிரம் ஆக்சைடு பொருட்கள் வலுவான காந்தப் புலங்களைத் தக்கவைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. வலுவான காந்தப்புலமும் ஒப்பீட்டளவிலான அதிக மீக்கடத்து மாறுநிலை வெப்பநிலையும், எதிர்கால மலிவும் பலமும் கச்சிதமும் கொண்ட அணுக்கருப்பிணைவு அணு உலை போன்ற காந்தவியல் அயனியடக்க அணுக்கரு பிணைவு அணு உலைகளுக்கு இவற்றை முன்மொழிய வைத்துள்ளன. மிகவும் சுருக்கமான மற்றும் பொருளாதார கட்டுமானத்தை இது அனுமதிக்கிறது[3]. எந்தவோர் அருமண் தனிமத்தையும் இவ்வகை அணுக்கரு உலைகளில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இட்ரியம் இட்ரியம் பேரியம் தாமிர ஆக்சைடாகவும் (YBCO) , இலந்தனம் இலந்தனம் பேரியம் தாமிர ஆக்சைடாகவும் சமாரியம், நியோடிமியம், கடோலினியம் முதலானவை எடுத்துக்காட்டுகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fisk, Z.; Thompson, J.D.; Zirngiebl, E.; Smith, J.L.; Cheong, S-W. (June 1987). "Superconductivity of rare earth-barium-copper oxides" (Submitted manuscript). Solid State Communications 62 (11): 743–744. doi:10.1016/0038-1098(87)90038-X. http://www.escholarship.org/uc/item/4vw4g06f.
- ↑ "To 20 Tesla and beyond: the high-temperature superconductors" (in ஆங்கிலம்). CERN. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
- ↑ "New superconductors raise hope for fast development of compact fusion reactor". The Engineer (in ஆங்கிலம்). Archived from the original on 15 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)