அருந்ததி விர்மானி
அருந்ததி விர்மானி (Arundhati Virmani) (பிறப்பு 1957) ஓர் இந்திய வரலாற்றாசிரியர். இவர் 1992-ஆம் ஆண்டு வரை வரை தில்லி பல்கலைக்கழகம் வரலாற்றில் வாசகராக இருந்தார். இவர் மர்சேய் இல் உள்ள சமூக அறிவியல் உயர்கல்விக்கான பள்ளியில் கற்பிக்கிறார். இவர் ஜீன் பூட்டியர் உடன் உள்ளூர் வரலாற்றிற்கான ஐரோப்பிய இருவருடாந்திர நிகழ்வின் இணை நிறுவனர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]அருந்ததி விர்மானி 1957-ஆம் ஆண்டு புது தில்லி இல் பிறந்தார். இவர் தில்லி லேடி இர்வின் பள்ளி மற்றும் கான்வென்ட் ஆஃப் ஜீசஸ் அண்ட் மேரி ஆகிய பள்ளிகளில் தனது பள்ளிப் படிப்பை மேற்கொண்டார்.[1] இவர் இந்திரபிரசுதா மகளிர் கல்லூரி இல் வரலாற்றில் பட்டம் பெற்றார்.[2] தில்லி பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது, பாரிஸில் உள்ள சோர்போன் கல்லூரியில் பிரெஞ்சு வரலாற்றில் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைத் தயாரிப்பதற்காக, 1981-ஆம் ஆண்டில் இவர் ஒரு பிரெஞ்சு ஆய்வு உதவித்தொகையைப் பெற்றார். பிரான்ஸ் கல்லூரியின் பேராசிரியரான மாரிஸ் அகுல்ஹோனின் மேற்பார்வையின் கீழ், 1848-ஆம் ஆண்டில் இரண்டாம் குடியரசின் கீழ் ஆண்களுக்கு உலகளாவிய வாக்குரிமை நிறுவப்படுவதற்கு முன்பும், மறுசீரமைப்புக்குப் பின்பும் பிரெஞ்சு கிராமப்புற சமூகத்தின் அரசியல்மயமாக்கலைப் பற்றி இவர் ஆய்வு செய்தார். இவர் தனது ஆய்வறிக்கையை 1984-ஆம் ஆண்டு செப்டம்பரில் சமர்ப்பித்தார். 1991--ஆம் ஆண்டில், இவர் ஜீன் பூட்டியரை மணந்து பிரான்சுக்குக் குடிபெயர்ந்தார். இவர் மாதவி முத்கலிடம் ஒடிசி நடனம் பயின்றார்.
கல்விப் பணி
[தொகு]இவர் ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில் தனது கற்பித்தல் பணியைத் தொடங்கினார்; பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் கற்பித்தார்.[2] தொலைநிலைக் கல்விப் பள்ளியின் வரலாற்றுப் பிரிவின் தலைவராக இருந்த இவர், அங்கு வயது வந்தோர் கல்வி மற்றும் தொலைதூரக் கற்பித்தலில் பங்கேற்றார். பின்னர், வரலாற்றுத் துறையில் ஐரோப்பிய வரலாற்றுப் பேராசிரியராக, இவர் நவீன பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய வரலாற்றைக் கற்பித்தார். மர்சேய் இல், இவர் பால் செசான் பல்கலைக்கழகம், யூரோமெட்-மார்சே வணிகப் பள்ளி மற்றும் சமூக அறிவியல் உயர் கல்விப் பள்ளி ஆகியவற்றில் கற்பித்தார். அதன் பிறகு, இவரது ஆராய்ச்சி இந்தியாவில் காலனித்துவக் காலம், குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டு மீது கவனம் செலுத்தியது; இவர் இந்திய சமூகத்தின் தற்போதைய மாற்றங்களின் ஆய்வாளராகவும் உள்ளார். இவரது சமீபத்திய பணி, இந்தியாவில் ஒரு சீரான குடிமைச் சட்டம் என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. இவர் தனது படைப்பை காமன்வெல்த் ஆய்வுகள் நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் சமர்ப்பித்தார்.[3]
இவர் இங்கிலாந்து,[4] பிரான்சு[5] மற்றும் இத்தாலி[6] ஆகிய நாடுகளில், கூட்டு நூல்கள் மற்றும் அறிவியல் ஆய்விதழ்களில் பல புத்தகங்களையும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இவர் பாரிஸ், இதாக்கா (அமெரிக்கா), லண்டன், பெர்லின், போலோக்னா, புளோரன்ஸ், புது தில்லி, நியூயார்க், ஆன் ஆர்பர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் காலனித்துவ இந்திய வரலாறு குறித்து விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.[7] [8] இவர் மார்சேயில் உள்ள நார்பர்ட் எலியாஸ் மையம்-இல் ஓர் ஆய்வாளராக உள்ளார்.[2]
விர்மானி 2000-ஆம் ஆண்டு முதல், குறிப்பாக இந்திய-பிரெஞ்சு கலாச்சாரங்களுக்கு இடையிலான பயிற்சி சார்ந்த ஆலோசனைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் "அசோசியேஷன் போர் லெ ப்ரோக்ரெஸ் டு மேனேஜ்மென்ட்" அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிபுணராகத் திகழ்கிறார். இந்தியக் கண்ணோட்டத்தில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) குறித்த விஷயங்களில் இவர் ஆர்வம் கொண்டுள்ளார்.[9]
வெளியிடப்பட்ட படைப்புகள்
[தொகு]இவர் 2008--ஆம் ஆண்டில் வெளியான எ நேஷனல் ஃபிளாக் ஃபார் இந்தியா: ரிச்சுவல்ஸ், நேசனலிசம் அண்ட் தி பாலிடிக்ஸ் ஆஃப் செண்டிமெண்ட் (இந்தியாவிற்கான ஒரு தேசியக் கொடி: சடங்குகள், தேசியம் மற்றும் உணர்வுசார் அரசியல்) எனும் நூலின் மூலம் அறியப்படுபவர். இந்நூல் குறித்துப் புகழ்பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங் பின்வருமாறு எழுதியுள்ளார்: "இம்மூலப்பொருள் குறித்து இவர் மிகத் துல்லியமான ஆய்வை மேற்கொண்டதுடன், இந்திய வரலாற்றை விவரிக்கும் ஒரு நூலில் வெறும் அடிக்குறிப்பாகத் தோன்றக்கூடிய ஒரு விஷயத்திற்கு உயிரூட்டியுள்ளார்.".[10][11]
- எல்'இண்டே, யுனே புய்சன்ஸ் என் மூட்டேஷன், பாரிஸ், லா டாகுமெண்டேஷன் ஃபிரான்சைஸ், 2001
- இந்தியா, 1900-1947. Un Britannique au cœur du Raj, Paris, Autrement, 2002 (Sir Malcolm Lyall Darling (1880-1969), இந்தியாவில் பிரபலமான பிரிட்டிஷ் நிர்வாகி, நிலச் சீர்திருத்தம் மற்றும் கூட்டுறவு இயக்கத்தின் நிபுணர்)
- "எ நேஷனல் அஃபேர் : நியூட் பாரதமாதா," பாசடோ இ பிரசென்டே, 2006, n°76
- "ரோமன் டி வோயேஜ், ரெசிட் டி வோயேஜ். L'Inde de Jules Verne, de Pierre Loti et d'Edward M. Forster", 2006, in Alain Guillemain (ed.), A la recherche du meilleur des mondes. Littérature et sciences sociales,, பாரிஸ், ஹர்மட்டன்
- "Réflexions d’une hindoue convertie au christianisme : பண்டித ரமாபாய் (1858-1922) et l’hindouisme", டேனியல் டோலெட்டில் (பதிப்பு), La religion que jai quittée, Paris, Presses de l’Universit70-2
- "தி பிளேஸ் ஆஃப் ரிலிஜியஸ் ஐடென்டிட்டி இன் எ மாடர்ன் நேசன் ஸ்டேட் – த்ரீ இந்தியன் ரெஸ்பான்ஸஸ்", அனுவேர் டி ட்ராய்ட்ஸ் எட் டி ரிலிஜியன், ஜூல்லெட் 2008
- எ நேஷனல் ஃபிளாக் ஃபார் இந்தியா: ரிச்சுவல்ஸ், நேசனலிசம் அண்ட் தி பாலிடிக்ஸ் ஆஃப் செண்டிமெண்ட், புது டெல்லி, பெர்மனெண்ட் பிளாக், 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7824-232-X.
- Atlas historique de l'Inde : du VIe siècle av. ஜே.-சி. au XXIe siècle, Paris, Autrement, 2012.
- பொலிடிகல் அஸ்த்தெடிக்ஸ் : கல்ச்சர் , கிரிடிக் அண்ட் தி எவரிடே, நியூயார்க், ரூட்லெட்ஜ், 2015.
- Translation of Edward P. Thompson, Les usages de la coutume. Traditions et résistances populaires en Angleterre, XVIIe-XIXe siècles, Paris, coll. Hautes Études, Le Seuil-Gallimard-Éditions de l’École des Hautes Études en Sciences Sociales, 2015 (with Jean Boutier)
- Les Indiens. Voix multiples, Paris, Ateliers Henry Dougier, 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-10-93594-18-7 (Prize "Asia" 2015 of the Association of Francophone Writers (Association des Ecrivains de Langue Française-ADELF)[12]
- (ed.), Aesthetics of Power. Culture, Critique, and the Everyday, London, Routledge, 2015.
- (ed.), Aesthetic Perceptions of Urban Environments, London, Routledge, 2022.
- Social scientists in the civic space. Ethical perspectives on democratic involvement, Routledge, Delhi; 2025;(coed. with Jean Boutier and Manohar Kumar) doi: https://doi.org/10.4324/9781003560838
- Économistes et Historiens : Un dialogue de sourds, Paris, Odile Jacob, 2025: (coed. with Alain Trannoy)
ஒலிபரப்புகள் (Podcasts)
- « தி வயர் டாக்ஸ் : நமது மூவர்ணக் கொடி எப்படி உருவானது” https://www.youtube.com/watch?v=Wkk-3YmQbpg
- ஐரோப்பாவில் இந்தியாவின் கலாச்சாரப் பங்களிப்பு குறித்து: யூடியூப்: https://www.youtube.com/watch?v=usIxnqpfKQI
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Arundhati Virmani - PaperBackSwap". PaperBackSwap. http://www.paperbackswap.com/Arundhati-Virmani/author/.
- 1 2 3 "Mapping India down the ages". Deccan Herald. 1 October 2012. http://www.deccanherald.com/content/282339/F.
- ↑ School of Advanced Study, University of London) on 23 November 2023 (https://www.youtube.com/watch?v=QqFUVDwYcVs&t=2266s)
- ↑ "National Symbols under Colonial Domination. The Nationalization of the Indian Flag, March–August 1923", Past and Present, n.164, 1999, 169-197
- ↑ Annuaire de Droit et de Religion, 2008
- ↑ Storica, 2002, Daimon. Annuario di Diritto comparato delle Religioni, 2001, Passato e Presente, 2009
- ↑ "University of Florence – Prof. Arundhati Virmani – "A National Flag for India"" இம் மூலத்தில் இருந்து 23 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110723193636/http://www.machiavellicenter.net/2009/02/university-of-florence-prof-arundhati-virmani-a-national-flag-for-india/.
- ↑ bardgradcenter (7 November 2013). "Seminar Series: Arundhati Virmani, Indian Wedding Cards: Publicizing the Intimate". Archived from the original on 2021-12-20. Retrieved 6 May 2018 – via YouTube.
- ↑ "Jean-Jacques Rosé (Responsabilité sociale de l'entreprise) : "La France est venue tardivement à la RSE, mais elle va vite"" இம் மூலத்தில் இருந்து 2009-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090924194221/http://www.journaldunet.com/management/0612/0612164-chat-jean-jacques-rose.shtml.
- ↑ Arundhati Virmani Talk Delhi events. 9 August 2009.
- ↑ Khushwant Singh (13 December 2008). "Fluttering in the wind". The Telegraph (Kolkata). Archived from the original on 23 October 2012. Retrieved 16 July 2013.
- ↑ "Les Prix littéraires de l'ADELF - Association des Ecrivains de Langue Française". www.adelf.info. Retrieved 6 May 2018.