அருணாச்சலம் முருகானந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அருணாச்சலம் முருகானந்தம்
பணி கண்டுபிடிப்பாளர்
அமைப்பு(கள்) ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ்
சொந்த ஊர் கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வலைத்தளம்
newinventions.in

அருணாச்சலம் முருகானந்தம் (Arunachalam Muruganantham) கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார். சிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியத் தேவையை வெளிப்படுத்தியவர். வணிகமுறையில் தயாரிக்கப்படும் விடாய்க்கால அணையாடைகளை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர். ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அணையாடைகளை தயாரித்து வருகிறார். வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கியுள்ளது. [1]

பாராட்டு[தொகு]

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் இவரை இணைத்துள்ளது.[2]. [3].

வரலாறு[தொகு]

பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் அணையாடைகளை வாங்கவியலாத தமது குடும்பச்சூழலில் தமது மனைவி விடாய்க் காலத்தில் பயன்படுத்தப் பழைய துணித் துண்டுகளைச் சேகரிப்பதை கண்ட அருணாசலம் முருகானந்தம் இதற்கான எளிய வழிமுறையை காண விழைந்தார்.[4] பிரச்சினையை சரியாக அறிந்துகொள்ளப் பல சோதனைகளை மேற்கொண்டார். விலங்குகளின் இரத்தத்தைக் கொண்டு இவர் நிகழ்த்திய சில சோதனைகளால் குடும்பத்தாராலும் சமூகத்தாலும் வெளித்தள்ளப்பட்டார்.[5] இறுதியில் மரச் சக்கை சரியானத் தீர்வாக அமையும் எனக் கண்டார். மலிவான விலையில் எளிய முறையில் குறைந்த பயிற்சியுடன் அணையாடைகளைத் (Napkin) தயாரிக்கக் கூடிய ஓர் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.[6]

கண்டுபிடிப்பு[தொகு]

அணையாடைகளைத் (Napkin) தயாரிக்க, முருகானந்தம் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி இந்த இயந்திரங்களை இந்தியா முழுமையிலுமுள்ள ஊரகப் பெண்களுக்கு விற்று வருகிறார். இதன்மூலம் அவர்கள் வேலை வாய்ப்புப் பெற்று வறுமையிலிருந்து மீள்கின்றனர்.[7] இவரது எளிய மற்றும் விலைத்திறன் மிக்க கண்டுபிடிப்பிற்காகவும் சமூகத்திற்கு இவராற்றும் தொண்டிற்காகவும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[5] இவரது முயற்சியை வணிகமயமாக்க பல நிறுவனங்கள் முன்வந்தபோதும் இவர் விற்பதற்கு மறுப்பதுடன் மகளிர் தன்னுதவிக் குழுக்களுக்கு வழங்கி வருகிறார்.[8]

சான்றுகோள்கள்[தொகு]

  1. "கோவையைச் சேர்ந்த சமூக சேவகருக்கு பத்மஸ்ரீ விருது". தினமணி (26 சனவரி 2016). பார்த்த நாள் 28 சனவரி 2016.
  2. http://time.com/70861/arunachalam-muruganantham-2014-time-100/
  3. "'டைம்' பட்டியலில் இடம்பிடித்த முருகானந்தம்". பார்த்த நாள் 26 ஏப்ரல், 2014.
  4. Sandhana, Lakshmi. "An Indian Inventor Disrupts The Period Industry". Fast Company. பார்த்த நாள் 18 August 2012.
  5. 5.0 5.1 Buncombe, Andrew (29 June 2012). "The 'Tampon King' who sparked a period of change for India's women". The Independent. பார்த்த நாள் 18 August 2012.
  6. Foxx-Gonzalez, Kellie (29 June 2012). "Tampon King". The Mary Sue. பார்த்த நாள் 18 August 2012.
  7. Kumar, Vikas (18 January 2012). "Blood, sweat & a few tears: Arunachalam Muruganantham's lessons for consumer product firms". The Economic Times. பார்த்த நாள் 18 August 2012.
  8. Sandhana, Lakshmi (21 January 2012). "India's women given low-cost route to sanitary protection". The Guardian. பார்த்த நாள் 18 August 2012.

வெளி இணைப்புகள்[தொகு]