அருணாச்சலப் பிரதேச மாநில நாள்
அருணாச்சலப் பிரதேச மாநில நாள் Arunachal Pradesh Statehood Day | |
---|---|
கடைபிடிப்போர் | அருணாச்சலப் பிரதேச மக்கள் |
வகை | மாநிலம் |
முக்கியத்துவம் | அருணாச்சலப் பிரதேசம் உருவான நாளன்று |
நாள் | 20 பிப்ரவரி |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
முதல் முறை | 1987 |
கடந்த முறை | 20 பிப்ரவரி 2022 |
அருணாச்சலப் பிரதேசம் மாநில நாள் (Arunachal Pradesh Statehood Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20 அன்று அருணாச்சலப் பிரதேசம் உருவானதையொட்டி கொண்டாடப்படும் ஒரு நாளாகும். இந்நாளில் அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.[1]
வரலாறு
[தொகு]இது முதன்முதலில் 20 பிப்ரவரி 1987 அன்று அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் 24வது மாநிலமாக அறிவிக்கப்பட்டபோது அனுசரிக்கப்பட்டது.[2] 2023ஆம் ஆண்டில், இந்த நாள் 37வது மாநில நிறுவன தினமாகக் கொண்டாடப்படுகிறது.[3]
பிரித்தானிய இந்தியாவின் நிர்வாக அதிகார வரம்பில் 1875-ல் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள எல்லைப்புற பழங்குடியினர் தொடர்பான நிர்வாக அதிகார வரம்புகளைப் பட்டியலிடத் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகப் பிரித்தானிய அரசாங்கம் வடகிழக்கு பிராந்தியத்தின் பழங்குடி மக்களுடன் இணைந்து வட கிழக்கு எல்லைப்புற முகமையாக அறிவித்தது. திபெத் மற்றும் சீனாவிலிருந்து இப்பகுதியை வரையறுக்க மக்மஹோன் எல்லைக் கோடு 1914-ல் வரையப்பட்டது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் இந்திரா காந்தி 1972-ல் அதிகாரப்பூர்வமாக வடகிழக்கு எல்லைப் பகுதியான அருணாச்சலப் பிரதேசத்திற்கு ஒன்றிய தகுதியினை வழங்கினார். இந்தியாவின் 24வது மாநிலமாக அருணாச்சல பிரதேசத்திற்குப் பிப்ரவரி 20 அன்று மாநில தகுதி வழங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Arunachal Pradesh 34th Statehood Day: All you need to know". Jagran Josh. 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ "Arunachal Pradesh Statehood Day". MyGov.in (in ஆங்கிலம்). 2019-02-19. பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ "Statehood day of Arunachal Pradesh & Mizoram - What are important current affairs facts? - GKToday". General Knowledge Today. பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ https://nationaltoday.com/statehood-day-in-arunachal-pradesh/